முன்பெல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே காதல்
கலாச்சாரம் ஏற்பட்டது. இப்போதோ அது ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறிவிட்டது.
ஒரு காலத்தில் காதல் வலையில் விழ நேர்ந்தது ஒரு வெட்கத்திற்குரிய விசயமாகக்
கருதப்பட்டது. இப்போதோ பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் காதல்
அனுபவத்திற்குச் செல்லாமலிருப்பது ஒரு குறைவு போலவும், வெட்கத்திற்குரியது
போலவும் எண்ணப்படுகிறது.
பெரும்பாலும் காதல் என்பது எதிர்பாலின
ஈர்ப்பு விசையின் விளைவாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து பேசக்கிடைக்கும்
வாய்ப்புகள், பழகக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள், ஒருவரையொருவர் நெருங்க
வைக்கும் சூழ்நிலைகள், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உணர்வு
ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரும்பாலும் எதிர்பாலினத்தைச்
சேர்ந்த ஒருவரிடமுள்ள ஏதாவது ஒரு விசயம் மிகவும் பிடித்து விடுவதால் காதல்
தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு விசயம் அழகு, இனிமையான வார்த்தைகள்,
கவரும் தன்மையுள்ள ஒரு நடவடிக்கை, கரிசனையான செயல், வேடிக்கையாகப் பேசும்
திறன், அக்கறையான விசாரிப்பு, தனித்திறமை, இப்படி ஏதாவது ஒன்றாக இருக்க
முடியும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment