சொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு
கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் தக்க
வைத்துக்கொள்வது ஒரு தனிக் கலை. பேச்சாற்றலால் சிலர் இதை சாதிக்கும்போது
விருப்பத்தின் அடிப்படையில் / அனிச்சையாகச் சிலர் இதை
சாத்தியமாக்குகிறார்கள்.
உரையாற்றும்போது அவையில் உள்ளோர்
சிந்திக்கத் தேவையான சமயத்தைக் கொடுப்பதற்காக ஒரு சொல்லை சொல்லி
நிறுத்துவதற்கு ஆங்கிலத்தில் filler என்று பெயர். இந்த filler
வார்த்தைகளைத் தேவையான இடத்தில் சரியான சமயத்தில் பயன்படுத்துவது
மற்றவர்களை சிந்திக்க வைக்கும், ஆவலைத் தூண்டும். அதே வார்த்தைகளைத்
தேவைக்கதிகமாகவும், அநாவசியமான இடங்களிலும் உபயோகிப்பது சலிப்பைத் தரும்.
கவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும்
சொல்லப்படும்போது அதன் இனிமை கூடும், அழகு கூடும், சொல்ல நினைக்கும்
கருப்பொருளை வலியுறுத்த இந்த உத்தி உதவும்.
மாணவர்களுக்குத்
தெளிவாகப் புரிய வைக்கும்படி பாடம் நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு
உண்டு. ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்கத்திலோ, முடிவிலோ ஒரு வார்த்தையை
மீண்டும் மீண்டும் ஆசிரியர் சொல்லும்போது மாணவர்களின் கவனம் பாடத்தில்
இல்லாமல் அவ்வார்த்தையைப் பின் தொடர்வதில் செல்லும். அவர் எத்தனை முறை ஒரு
வார்த்தையைச் சொன்னார் என்று கணக்கெடுக்கத் துவங்குவர். தன் தோழன் /
தோழியிடம் தான் ஊகிக்கும் சமயத்தில் சரியாக ஆசிரியர் ஒரு வார்த்தையைச்
சொல்வார் என்று பந்தயம் கட்டி விளையாடுவது சுவாரசியமான பொழுதுபோக்காக
மாறிவிடும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment