Thursday, 15 December 2016

பௌத்த சமய நூல்கள்- இறுதிப் பகுதி


siragu-budha6

தமிழகத்தில் பௌத்தமும், பௌத்த நூல்களும்
தமிழகத்தில் எழுந்த பௌத்த சமயக் கருத்துகள் அடங்கிய நூல்களை இருவகையாகப் பிரிக்கலாம். முதல் வகை பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள், இரண்டாம் வகை பிற சமயத்தார் படைத்த பௌத்த சமயக் கருத்துகளைக் கொண்ட நூல்கள் என்று பிரிக்கலாம்.
பௌத்தர் இயற்றிய பௌத்த சமயம் சார்ந்த நூல்கள்

பௌத்த மதத்ததைத் தழுவியவர்களால் பௌத்த சமயப் பதிவுகளை வெளிப்படுத்த எழுதப்பெற்ற நூல்களைப் பௌத்த சமயம் சார்ந்த நூல்கள் என்ற வகையில் அடக்கலாம். அவ்வகையில் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம், சிந்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்பசார கதை, மானஓர்ப்பதிகம், அபிதம்மாவதாரம் ஆகியன அடங்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்கள்


Idea

நம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான் நிகழக்கூடியது. இருந்தபோதிலும் மனித மனம் எப்பொழுதும் நேர்மறையாகவே நினைத்துக் கொண்டிருப்பதுவே கிடையாது. எப்பொழுதும் “நெகட்டிவ்” என்று சொல்லப்படும் எதிர்மறை எண்ணங்களைத் தான் அதிகமாக மனம் நினைத்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறது. இப்படி நம் மனம் எதை எதிர்பார்க்கிறதோ அதையே தான் வாசலில் ஆரத்தி கரைத்து எதிர்பார்த்துக் கொண்டுமிருக்கும். இப்படித்தான் குப்பைகளான எண்ணங்கள் நம்முள் நுழையும், பிறகு அவை எண்ணங்களின் குப்பைகளாக உருவெடுக்கும். சிலர் இதற்கு விதி விலக்காக இருப்பார்கள், அவர்களுக்கு இயற்கையாகவே நேர்மறையும் நம்பிக்கை எண்ணமும் மேலோங்கி இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் நீங்களும் அவ்வாறு மாறமுடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 14 December 2016

இலக்கியச் சுவையும் எழில்மிகு அணியும்


பன்மணிக் கோவை: நூல் மதிப்புரை
panmanik-kovai

தமிழிலக்கியம் காட்டும் புரட்சிப்பெண், அறவாழ்வு மேற்கொண்ட மணிமேகலையைப் போற்றும் விதத்தில் பெயர் சூட்டப்பட்டு,   அமெரிக்க வாழ் தமிழர்களால் மேகலா இராமமூர்த்தி என அறியப்படுபவர் “பன்மணிக் கோவை” நூலின் ஆசிரியரான மேகலா. முதுகலை தமிழிலக்கியமும், முதுகலை கணினிப் பயன்பாட்டியியலும் படித்து, தற்பொழுது ஃப்ளோரிடா பாலிடெக்னிக் (Florida Polytechnic University) பல்கலைக்கழகத்தில் கணினிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழார்வத்தால் “வல்லமை” இணைய இதழின் துணை ஆசிரியராகவும் தொண்டாற்றி வரும் மேகலா அவர்கள், மறைந்த தமிழறிஞர் இராம. இராமமூர்த்தி அவர்களின் அருமை மகளும் ஆவார். தந்தையின் வழியொட்டி தமிழிலக்கியச் சுவையைத் தானும் துய்த்து, மற்ற தமிழ் ஆர்வலர்களும் படித்து மகிழும் வகையில் வெளியிட்டுள்ள பன்மணிக் கோவை அவரது நோக்கத்தைச் சிறப்புடன் நிறைவு செய்துள்ளது.

சங்க இலக்கியச் சுவை, ஒப்பிலக்கிய ஆய்வு, வாழ்வியல் விளக்கம், அறநெறி வழிப்படுத்துதல், நன்னெறி அறிவுரைகள், மானுடவியல் கட்டுரைகள், உயிரியல் தகவல்கள் என எக்கோணத்தில் மணிமணியாகக் கட்டுரைகள் அமைந்தாலும், அக்கட்டுரைகள் அனைத்தையும் இணைத்து ஊடாடிச் செல்லும் பொன்னிழை தமிழிலக்கியப் பாடல்களில் இருந்து எடுத்தாண்ட மேற்கோள்களே. கூறப் போந்த எக்கருத்திற்கும் ஒரு இலக்கியப் பாடல் ஆசிரியரின் நினைவில் நிழலாடுவது ஒரு சிறப்பு என்றால் அதனைத் தக்கமுறையில் கட்டுரையில் அமைத்திருப்பதும் மற்றொரு சிறப்பு. மேகலாவின் இத்தகைய விவரிப்பினால் தமிழிலக்கியத்திற்கு புதியவர் ஒருவரும், கற்றுத் துறைபோகிய தமிழறிஞர் ஒருவரும் இந்நூலை ஒருசேரப் படித்து மகிழலாம் என்பது திண்ணம். பள்ளிப்படிப்புடன் தமிழிலக்கியம் படிக்க வாய்ப்பின்றி மேற்படிப்பிற்குப் பிற துறைகளைத் தேர்வு செய்து தடம் விலகிச் சென்றவர்களுக்கு இந்த நூல் தமிழிலக்கியக் கருவூலத்தை அறிமுகப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது என்பது மிகையன்று.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 8 December 2016

பௌத்த சமய நூல்கள்


siragu-budha2

பௌத்த மத எழுச்சிக்கு முக்கியக் காரணமாக அமைபவர் கௌதம புத்தர் ஆவார். இவருக்கு முன்பாக பல புத்தர்கள் இருந்ததாகவும், அவர்கள் பௌத்த மத அடிக்கருத்துகளை உணர்த்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. இவ்வரிசையில் இருபத்து நான்காவது புத்தராகக் கௌதம புத்தர் தோன்றினார். அவரின் ஞானத் தேடல் பௌத்த சமயத்திற்கு மேலும் வலுவூட்டியது.

பௌத்த சமயம் அவைதீக சமயமாகும். இது காட்சி, அனுமானம் என்ற இரு அளவைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதவாக்கியம் என்ற அளவையை ஏற்காதது. இதன் காரணமாக  வேதம் சார்ந்த கொள்கைகளுக்கு முரணாக பௌத்தம் அமைந்தது.


புத்தருக்குப் பின்னால் அவரின் மாணவர்கள் அவர் கருத்துகளைப் பதிவு செய்தனர். சங்கம் அமைத்தனர். சுத்த பிடகம், அபிதம்மபிடகம், விநய பிடகம் என்ற தொகுப்புகளாகப் புத்தரின் அறிவுரைகள் தொகுக்கப்பெற்றன. புத்தருக்குப் பின்பு அவரின் கருத்துகள் இருவகை நெறிகளாகப் பரவின. ஈனயானம், மகாயானம் என்பன அவை இரண்டுமாகும். இவற்றை முறையே சிறுவழி, பெருவழி என்றும் அழைக்கலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24519

Wednesday, 7 December 2016

இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்


siragu-national-anthem4

அண்மையில் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ ராய் கொண்ட குழு தேசிய கீதம் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடி இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது எனச் சொன்னால் மிகையன்று. பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வரும் மக்களிடம் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறுவது அறிவானதா? அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா? அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா?  என ஒரு புறம் கேள்விகள் கேட்கப்படுகின்றது.
siragu-national-anthem2


இது ஒரு புறம் இருக்க, 1962 ல் இந்திய – சீனா போரின் போது திரையரங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாத காரணத்தால் அந்தப்பழக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும்  
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003 இல் போடப்பட்ட உத்தரவின் படி திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகளைக்கட்டாயமாக்கப்பட்ட தேசியகீதம் ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் பானாஜி எனும் இடத்தில் எழுத்தாளர் சாலில் சத்துருவேதி முதுகு தண்டில் காயம் காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனினும் உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தொடர்பான முக்கிய வழக்கில் முப்பது வருடங்களுக்கு முன் என்ன தீர்ப்பு தந்தது எனப் பார்ப்பது அவசியம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இரண்டாம் பசுமைப்புரட்சி துவங்குகிறது


siragu-green-revolution3

“பண்ணையெல்லாம் பொன் கொழிக்க செய்திடுவோம்
அதில் பன்மடங்கு உற்பத்தியைப் பெருக்கிடுவோம்,
கண்மணி போல் நெல்மணியை வளர்த்திடவே
நாளும் கருத்துரைக்கும் ஒலிபரப்பைக் கேட்டிடுவோம்,
பட்டி தொட்டி குப்பம் எங்கும் பாடுபட்டே
நம் பாரத சமுதாயத்தை உயர்த்திடுவோம்”

என்று இந்திய அரசின் வானொலி ஒலிபரப்பிய ஒரு விவசாய நிகழ்ச்சியின் பாடல், 1970 மற்றும் 1980-களில் பலரையும் கவர்ந்த பாடல். அதனை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது குடியரசுத் தலைவர் மாண்புமிகு பிரணாப் முகர்ஜி அவர்கள் சென்றவாரம் சண்டிகாரில் நடந்த வேளாண் தொழில்நுட்பக் கருத்தரங்கில் நிகழ்த்திய ஓர் உரையும் (12th edition of CII Agro Tech 2016 in Chandigarh on November 20, 2016), ஒரு அறிவியல் ஆய்வறிக்கையின் வெளியீடும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.


Monday, 5 December 2016

புதிய கல்விக்கொள்கை


siragu-new-education4

மத்திய பா.ஜ.க அரசு செயல்முறைப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக்கொள்கை பற்றி நான் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம்… இது முதலில் புதிய கல்விக்கொள்கையே அல்ல… பழைய குலக்கல்வித் திட்டத்தைத்தான் தூசு தட்டி புதியது என்ற பெயரில் நம்மீது திணிக்கப் பார்க்கிறது மத்திய அரசு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை ஆரம்பத்திலேயே எதிர்க்கவில்லை என்றால், நாம் மீண்டும் பழைய நிலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விடும் ஆபத்து இருக்கிறது… அப்படி என்ன அதில் இருக்கிறது என்று கேட்போருக்கு நம்முடைய தெளிவான விளக்கங்கள்.!
1. முதலில், இக்கல்வித்திட்டம் இந்தி, சமற்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கில் வரையப்பட்டுள்ளது… இதன் வரைவுக் கொள்கை முகவுரையில், வேதக்கல்வி அடிப்படையில் அமைந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் குரு – மாணவன் உன்னத உறவை வலியுறுத்துகிறது.

வேத காலத்தில் சூத்திரர்கள் கல்வி கற்கக்கூடாது.. மீறிக் கற்றால் நாக்கை அறுக்க வேண்டும். வேதத்தைக் காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதை அமல் செய்யப் போகிறதா மத்திய அரசு..? அதுமட்டுமல்லாமல் சமற்கிருத மொழியில் என்ன அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள் இருக்கின்றனவா… அத்தனையும் மதம்சார்ந்த, வர்ணாசிரமம் சார்ந்த விடயங்கள் தானே சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த அறிவியல் யுகத்தில் இவைகள் எந்த வகையில் பயன்படப் போகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.