Monday, 12 March 2018

மகளிர்தினக் கொண்டாட்டங்கள், மகளிரின் சிறப்பை உணர்த்துகின்றனவா …!


Siragu penniyam1

கடந்த சில ஆண்டுகளாகவே, நம் நாட்டில், நம் சமூகத்தில், பெண்கள் பாதுகாப்பின்றி வாழ்கிறார்கள் என்று தான் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. பாலியல் ரீதியாக பல வன்கொடுமைகளை, வன்புணர்வுகளை நம் சமூகப் பெண்கள் சந்தித்தவண்ணம் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலைநாடுகளில் மகளிர்தினம் என்ற ஒன்றை கொண்டாடுகிறார்கள் என்றால், அவர்கள் அவர்களுக்கான முழு உரிமைகளை, போராடி பெற்றெடுத்திருக்கிறார்கள். நாம் இன்னமும் அந்தளவிற்கு உரிமைகளை பெற்று இருக்கிறோமா என்ற கேள்விக்கு, பதில் இல்லை என்பது தானே உண்மை.!

ஆண்டுதோறும் மார்ச் 8 -ந் தேதி உலக மகளிர்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் நம் நாட்டிலோ, பெண்களுக்கெதிரான வன்முறைகள், கொடுமைகள் குறைந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், அதிகரித்திருக்கிறது என்பதுதான் வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. இங்கு கொண்டாடப்படும் கொண்டாட்டங்கள் அனைத்தும், நாம் பெறவேண்டிய உரிமைகளை சொல்வதில்லை. இந்த சமூகத்தில் நமக்கான இடத்தை எப்படி பெற வேண்டும், அதனை எப்படி இன்னும் பல வழிகளில் முன்னேற்றப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதில்லை என்பது தான் காரணமாக இருக்கிறது. இந்த செய்திகள் ஆண்பிள்ளைகளுக்கும், பெண்பிள்ளைகளுக்கும் சரியாக சென்றடைவதில்லை. 

இந்த ஆண்டு, மகளிர்தினத்தின் முதல்நாள், திருச்சி, துவாக்குடி ஊரை சேர்ந்த உஷா என்ற கர்ப்பிணிப் பெண் காவல்துறை ஆய்வாளர் ஒருவராலேயே, எட்டி உதைக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார் என்பது சகித்துக்கொள்ளக்கூடிய ஒன்றா? இந்த நிகழ்வு நூறு விழுக்காடு ஆண்கள் சம்பந்தப்பட்ட ஒன்று. அதிலும், ஆய்வாளர் தவறு தான் மிக முக்கிய குற்றமாக இருக்கிறது. ஆனால், உயிரிழந்தது ஒரு பெண். அடுத்து பார்த்தீர்களென்றால், மகளிர்தினத்தின் மறுநாள், 19 வயதே நிரம்பிய இளந்தளிர் அஸ்வினி என்ற கல்லூரி மாணவி, காதலன் என்று சொல்லப்படும் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கிறார். தன்னை காதலிக்கவில்லையென்றால், ஆசிட் ஊற்றுவது, கத்தியால் குத்தி கொல்வது, எரித்து கொல்வது என்ற வன்முறைகள் எல்லாம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் தான் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், ஆண்களின் உடைமைகளாக பார்க்கப்படுகின்றனர் என்பது தான்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 9 March 2018

பிரிவினைக்கு எதிராய்! (கவிதை)


siragu pirivinaikku edhiraai2

தோழியடி எம்தோழி யடிநீ – நம்
தேச மெனும்சோ லையினுட் செல்வோம்.

மேரு மலைமீது ஆடுகின்ற மந்தி
சேரு தடிதம் கூட்டத் துள்ளே
கூறு போட பலபேர் உள்ளார்
நூறு நூறாய் இந்த நாட்டை

கடலாடி வந்த நுரைகரை ததும்புதடி
கரைகண்ட பின்னே அலையோடும் போச்சுதடி



கரைமீது மோதும் உமிழ்நீர் போல்சிலர்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 8 March 2018

ஈ. வெ. ரா. வின் வாசிப்பில் இராமாயணம்


siragu periyar1
“இராமாயணக் குறிப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பெரியார் ஈ. வெ. ரா. வின் இராமாயண ஆய்வு நூல் மிகச் சிறியது, அறுபது பக்கங்களைக் கொண்டது. நூல் சிறியதாக இருந்தாலும், வெளியிட்ட காலத்தில் எதிர்ப்புகள், கண்டனங்கள், விவாதங்கள் பலவற்றைத் தவறாமல் கிளப்பிவிட்ட நூல். “கடவுள் இல்லை” என்ற நாத்திகர் ஒருவர் சமய நூலான வால்மீகி இராமாயணத்தின் மொழிபெயர்ப்புகள் சிலவற்றைப் படித்து, குறிப்புகள் எடுத்து தனது கோணத்தில் இராமாயணம் பற்றியக் கருத்துகளை ஒரு ஆய்வு நூலாக வெளியிட்டதன் பின்னணியில் இருப்பது அவரது ஆரிய எதிர்ப்பு அரசியலும், சமய மறுப்புக் கொள்கை பரப்பும் நோக்கமும் என்பதைத் தெளிவாகவே தமிழகம் அறியும்.

இந்தி எதிர்ப்பு முதல் பிராமணிய எதிர்ப்புவரை, சமய மறுப்பு கொள்கை முதல் சாதி மறுப்புக் கொள்கை வரை அவற்றின் அடிப்படையில் ஆரியத்தின் ஊடுருவல் என்பதைத்தான் பெரியார் அடையாளம் கண்டார். ஆரியத்தை மறுக்கவே திராவிடக் கழகம் என்ற இயக்கத்தையும் உருவாக்கினார். அவர் எதிர்த்த ஆரியத்தின் உயிர்நாடியாக அவர் கண்டது இராமாயணம்.  இராமாயணக் கதை ஆரிய மேலாதிக்கத்தையும் திராவிட அவமதிப்பையும் நிலைநிறுத்தவே பரப்பப்படுகிறது என்ற கோணத்தில் இராமாயணம் எரிப்பு, இராமர் படம் எரிப்பு, இராமாயணக் கதையின் பொய் புரட்டுகளை தோலுரிக்கும் இந்த நூல் வெளியீடு போன்றவற்றை முன்னெடுத்தார். இராமாயணத்தை அவர் ஒரு இலக்கியம் என்ற கோணத்தில் அணுக விரும்பாத பொழுது, மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வர வேண்டும் என்ற வேகத்தில் இராமாயணம் என்ற இதிகாசம் அவர் கையில் எதிர்ப்பு அரசியல் கருவியின் அடையாளமாக மாறியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 6 March 2018

தமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.!


Siragu pirappokkum1

சமீபகாலமாக நம் மாநிலத்தில், சாதி ரீதியான கொடுமைகள் பெருகி வருகின்றன என்பது மிகவும் வேதனையான ஒன்று. சாதி ஒழிப்பிற்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருப்பது, இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தான். நம் சமூகம் சாதி என்ற புற்றுநோயில் புரையோடி இருந்த காலம் எல்லாம் கடந்து, தற்போது ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நாம் என்னும் சமயம் தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாம் எல்லோரும் அறிந்த ஒரு செய்தி தான். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற ஊரில், “கிராம பஞ்சாயத்து” என்ற பெயரில், அவ்வூர் மக்களில் சிலர், ஒன்றுகூடி, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்ட 12 குடும்பத்தவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், ஊரில் வசிக்க தகுதியற்றவர்கள் என்றும், மணமக்களுக்குரிய அடிப்படை வசதிகளை, உரிமைகளை பறிக்கும் விதமாக சில முடிவுகளை எடுத்து, கிராம பஞ்சாயத்து என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்து, தண்டோரா போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

siragu saatheeiya vanmurai


எந்த அளவிற்கு கடுமையான ஒரு சாதிய வன்முறை இது. வளர்ந்து, முன்னேறி வரும் நம் சமூகம் நாகரீகம் என்ற ஒருவளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இதுபோன்ற, காட்டுமிராண்டித்த தனமான செய்கைகள் நம்மை அதால பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு விடாதா… மிகவும் கண்டனத்திற்குரிய செய்கை அல்லவா இது. இவ்வளவு தூரம் செல்வதற்கு, அந்த ஊரின் காவல்துறை எப்படி அனுமதித்தது. இம்மாதிரி ஒரு நிகழ்வு, அந்த மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கேள்வி நம் எல்லோரின் மனதிலும் வருகிறதல்லவா. தண்டோரா போடுமளவுக்கு சென்றிருக்கும்போது, இதனைப்பற்றிய செய்தி, மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா. தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தது நடந்திருந்தால், இதன் பின்னல் உள்ளவர்கள் அனைவருமே உடந்தை என்பது தானே உண்மையாகயிருக்க முடியும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

ஆங்கில மருத்துவமும் முதலாளித்துவ உற்பத்தி முறையும்


siragu allopathic1

ஆங்கில மருத்துவ (அல்லோபதி) முறையின் “கொடூர” இயல்பைப் பற்றி முகநூலிலும் (facebook), புலனத்திலும் (whatsapp) நம் அறிவு ஜீவிகள் பரபரப்பான விவாதங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் விவாதங்களைக் கேட்டால் இந்த ஆங்கில மருத்துவ முறை மனித குலத்தின் வளர்ச்சியைக் கெடுப்பதற்கு என்றே வளர்த்து எடுக்கப்பட்டதோ என்று தோன்றும். இது உண்மையா? ஒரு சிறு விபத்து நடந்தால் இந்த அறிவு ஜீவிகள் ஆங்கில மருத்துவ முறையை நாடாமல் இருக்க முடியுமா? அப்படியானால் உண்மையான பிரச்சினை என்ன? இந்த அறிவு ஜீவிகளைப் புலம்ப வைக்கும் உண்மையான காரணம் என்ன?

உண்மையில் ஆங்கில மருத்துவ முறையில் எந்த விதமான தவறும் இல்லை என்பது மட்டும் அல்ல, மற்ற எல்லா மருத்துவ முறைகளைக் காட்டிலும் ஆங்கில மருத்துவ முறை தான் பரந்த அளவில் மனித குலத்திற்குப் பயன் தரக் கூடியது. அது மக்களின் வெறுப்புக்கு உள்ளாகக் காரணம் நோய்க்கு ஏற்பச் சிகிச்சை செய்யமாமல், ஒருவனின் செலவளிக்கும் வலுவிற்கு ஏற்பச் சிகிச்சை செய்யத் தூண்டும் முதலாளித்துவ உற்பத்தி முறையே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 2 March 2018

யாருக்கும் கிடைக்காத பரிசு (சிறுகதை)


siragu yaarukkum1


வாசலில் இருந்து பாரிசாத பூக்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பூசை அறைக்குள் நுழைந்து கடவுளை வணங்கினேன். அப்போது காலை 8.30. என் அலைபேசி சிணுங்கியது. நம்பரைப் பார்த்தால் புதிய நபரிடமிருந்து வந்திருக்கிறது. யாரிடமிருந்து என்று தெரியவில்லை? ஏதோ நல்ல விசயமாய் இருக்க வேண்டும் என்று மனசு சொல்லியது.
”ஹலோ, வணக்கம்., எழுத்தாளர் பாமா கிருஷ்ணன் தானே?” ஆண் குரல் கேட்டது.
”ஆமாம், நான் பாமாகிருஷ்ணன் நீங்க யார்?.”

என் பெயர் கேசவன். தி. நகரிலிருந்து பேசுகிறேன். வாசகர் வாசிப்பு என்னும் எங்கள் அமைப்பைப் ப|ற்றி சிறு அறிமுகம். சென்னையில் ஏராளமான இலக்கிய அமைப்புகள் இருக்கின்றன. அவற்றில் எங்களுடையதும் ஒன்று. சிறிய அமைப்பு. வாசிப்பில் ஆர்வமுள்ள சிலர் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு பத்திரிகையில் வெளிவந்த ஒரு சிறுகதையை. விமர்சனம் செய்வோம். சமீபத்தில் ——- பத்திரிகையில் பிரசுரமான நீங்கள் எழுதிய “திருநெல்வேலி ஜங்ஷன்” சிறுகதையை விமர்சனம் செய்து சிறந்த கதையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம். எல்லோரும் சிறந்த கதை எழுதிய உங்களுக்குப் பாராட்டு விழா நடத்த விரும்பியதால் வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு மையிலாப்பூரிலுள்ள கோகலே ஹாலில் நடக்கும் பாராட்டு விழாவிற்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 1 March 2018

தமிழர்கள் யார் ?


Siragu hinduism1
இன்றைக்கு நிலையற்ற அரசியல் சூழலில் தமிழ்நாடு சிக்கித் தவித்து வருகின்றது. இந்துத்துவம் தன் கொடூரக் கைகளை தமிழ்நாட்டின் மீது பரவத் துடிக்கின்றது. இந்த வாய்ப்பில் தான் கவிஞர் வைரமுத்து ஆண்டாள் பற்றிக் கூறிய ஒரு ஆய்வுக் கட்டுரையின் மேற்கோளை பெரும் சர்ச்சையாக்கி தமிழ் மண்ணை கலவர மண்ணாக மாற்ற சூழ்ச்சி செய்தது பார்ப்பனியம். அந்த சர்ச்சையில் தான் பா.ச.க இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்து மத கலவரத்திற்கு வித்திட முயன்றது. அந்த நேரத்தில் தான் பழ. கருப்பையா போன்றவர்கள் தமிழர்கள் இந்துக்கள் அல்ல, என்ற எதிர் முழக்கத்தை முன் வைத்து பா.ச.க-வின் மத கலவர யுக்திக்கு எதிர் வாதம் வைத்தனர்.

தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்றால் தமிழர்கள் யார்? என்ற கேள்வி வலுப்பெறுகிறது. இந்தக் கேள்வியை வரலாற்று ரீதியாக நாம் அணுக வேண்டிய தேவை உள்ளது. தமிழர்கள் இந்துக்கள் அல்ல, ஆனால் அவர்கள் வீர சைவர்கள், வீர வைணவர்கள் என்ற குரல், வரலாற்றில் பிழையான, ஆபத்தான குரல் மட்டுமல்ல, பார்ப்பனியத்திற்கு கொல்லைப்புறம் வழியாக வரவழைக்கும் குரலும் என்பதை நாம் மறந்து விட முடியாது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.