Friday, 18 January 2019

காந்தி சிலையை அகற்றிய பல்கலைக் கழகம்


siragu ghana university2
ஆப்பிரிக்கா கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது காணா (Ghana) எனும் நாடாகும். அந்நாட்டின் தலைநகரான அக்ராவில் (Accra) அந்நாட்டில் மிகப் பெரிய பல்கலைக்கழகமான காணா பல்கலைக்கழகம் உள்ளது. இப்பல்கலைக்கழகம் 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இன்று இப்பல்கலைக்கழகத்தில் சுமார் 40,000 மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு 2016ஆம் ஆண்டில் இந்தியா – காணா இரு நாடுகளின் நட்புறவுக்கு அடையாளமாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காந்தியாரின் சிலையைத் திறந்து வைத்தார். அவ்வாறு காந்தியாரின் சிலையைத் திறப்பதை அந்நாட்டின் அறிவுலக மக்கள் விரும்பவில்லை. ஏன்?

காந்தியார் தென் ஆப்பிரிக்காவில் இருந்தபொழுது இந்தியர்கள் கருப்பின மக்களை விட மிகவும் உயர்ந்தவர்கள் கூறியதைச் சுட்டிக்காட்டி அவர்கள் காந்தி சிலையை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அந்நாட்டு அரசோ அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும் என்ற முனைப்பில் காந்தி சிலையைத் திறக்க அனுமதித்து விட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 16 January 2019

பெண்ணிய பாதை


Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.
பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.
சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்
“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்ககூடாது, ஊரத்தக் குரலில் பேசக் கூடாது, பொறுமையும் தியாகமுமே அவளது அணிகலன் என்று நாள்தோறும் அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறாள். அதிகாரமற்ற பொம்மைகளாகவே அலங்கரிக்கப்படுகிறாள். இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்படுத்தபட்ட கட்டமைப்புகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 10 January 2019

ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்


Siragu Ruth Bader Ginsburg1
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாகப் பதவியேற்றவர் ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் (Ruth Bader Ginsburg). முற்போக்கு எண்ணங்கள் கொண்டவரான இவர் 1993 ஆம் ஆண்டில் அன்றைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனால் பரிந்துரைக்கப்பட்டு, நாட்டின் ஆட்சிமன்றத்தின் பலத்த வாக்கு ஆதரவுடன் (ஆதரவு: 96 – மறுப்பு: 3) பதவியேற்றார். 85 வயதாகும் ஜஸ்டிஸ் கின்ஸ்பர்க் அவர்களது பணியின் கால்நூற்றாண்டு நிறைவுறும் 2018 ஆம் ஆண்டு அவரைப் பெருமைப்படுத்தி மதிப்பளிக்கும் விதத்தில் ஒரு ஆவணப்படமும், அவர் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஒன்றும் வெளியாயின.

ஜஸ்டிஸ் ரூத் பேடர் கின்ஸ்பர்க் சட்டத்தின் கீழ் அனைவரும் சமம், மக்கள் பாலினசமத்துவ அடிப்படையில் பேதமின்றி நடத்தப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். கல்லூரியில், பணி வாய்ப்பில், குழந்தை இருந்த காரணத்தால் பணிபுரியும் இடத்தில் பதவி நிலை தாழ்த்தப்பட்டது, கிடைத்த பணியிலும் அவரது தகுதிக்கான ஊதியம் தராமல் நல்ல வசதி வாய்ப்புடன் வருமானம் உள்ள கணவர் உள்ளவருக்கு ஆண்களுக்கு இணையான ஊதியம் தேவையில்லை என்று குறைந்த ஊதியம் கொடுக்கப்பட்ட நிலை என அவரே பல வகையில் பாலினபேத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர். பாலினசமத்துவம் இல்லாமையால் ஏற்படும் பாதிப்புகளை நன்கு உணர்ந்தவர் என்பதால், அவரது பணியும் தீர்ப்புகளும் அமெரிக்க சட்டத்தில் ஆண்பெண் பாலினபேதம் இருக்கக்கூடாது என்ற வகையிலேயே இருந்து வந்திருக்கிறது. ஆகவே திரைப்படத்திற்கும் அதனை எதிரொலிக்கும் வண்ணம் “ஆன் தி பேசிஸ் ஆஃப் செக்ஸ்” (On the Basis of Sex) என்ற தலைப்பு சூட்டப்பட்டுக் கடந்த கிறிஸ்துமஸ் அன்று நாட்டின் சில இடங்களில் மட்டும் படம் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 9 January 2019

நெடுநல்வாடை -ஒரு அறிமுகம் !!


siragu-nedunalvaadai1
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி – மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து!
பத்துப்பாட்டில் ஏழாவதாக திகழும் நூல் நெடுநல்வாடை. இது தலைவன் போர்ப் பாசறையில் இருக்கும்போது தலைவி அவன் வரவுக்காக ஏங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிடுகிறது. இந்த நூலில் அகப்பொருள் பற்றிய செய்திகள் நிறையாக இருப்பினும் இது புறப்பொருள் நூலாயிற்று. ஏனெனில் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப்பொருள் நூலாயிற்று.

இந்த நூலை இயற்றியவர் நக்கீரனார் எனும் நல்லிசைப் புலவர். இவரை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்பர். இவர் தந்தையார் மதுரை மாநகரத்தே சிறந்த ஆசிரியத் தொழில் நடத்தயவர் என்று அறியப்படுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 8 January 2019

உயிரைக் குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை, இனியும் அனுமதியோம்!


siragu sterlite2
உலகின் பல நாடுகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் அனுமதிக்கப்படுகிறது என்றால், என்றைக்கும் இந்தியாவில், மனித உயிருக்கு மதிப்பு இருப்பதில்லை, மனித வளத்தை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை அதிலும் ஏழை, எளிய மக்களின் பாதிப்புகள் என்றால் அரசும், அரசைச் சார்ந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது என்பது வருத்தப்படக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது.!

மக்களின் உயிரை குடிக்கும் தொழிற்சாலைகள் நாட்டிற்குத் தேவை தானா, இதன் அடிப்படையில் தான் ஒரு நாட்டின் வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறதா என்ற பல கேள்விகள் நம்முள் எழத்தான் செய்கிறது. தூத்துக்குடியில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை ஒரு உயிர்கொல்லி நிறுவனம். இதை ஆரம்பிக்கும்போதே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் இது இயற்கைக்கு மாறானது, மண், நீர், காற்று, என அனைத்தையும் மாசுபடுத்தக் கூடியது என்று கடுமையாக எதிர்த்தனர். இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்படும் தாமிரத் தாதுக்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் ஆலை தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தை நடத்தும் வேதாந்த குழுமத்தின் தலைவர் அணில் அகர்வால் வசிக்கும் இங்கிலாந்திலும் கூட ஸ்டெர்லைட் ஆலை தடைச் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 3 January 2019

மரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)


Siragu tree1
தீக்குச்சியும் பட்டாசும் புணர்ந்ததன் விளைவாய் பிறந்த வெடிச்சசத்தத்துடன் உடன்பிறந்த நாற்றமும் காற்றில் தவழ்ந்தன. மறுபுறம் வானவேடிக்கைகள் வின்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. மங்கலமாய்த் தொடங்கியது மணமக்கள் ஊர்வலம். வரவேற்பில் கலந்துகொள்ள வந்திருந்த சுற்றத்தினர் சாலையை ஆக்கிரமித்து இருந்தனர்.
திருமணமண்டபம் பிரதான சாலையை ஒட்டியிருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணமக்கள் மண்டபத்தில் நுழைந்த பின்னரும் சாலையில் சலசலப்பு அடங்க சற்று நேரமானது.
தாம்புலம் முடிந்தபின்னர் வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு. காரணம் இதுதான் மண்டபத்தின் அருகில் இருப்பது புளிய மரமா? ஆலமரமா?  தொடங்கியது விவாதம். தொடக்கி வைத்தவர் யார் என்பதை மறந்தனரா? அல்லது யார் என்பதை யாரும் அறியவில்லையா? என்பன கேள்விகளாய் மிஞ்சி இருந்தன கூட்டத்தில் சிலரிடம்.
மணமக்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டோடியது விருந்துக்கு வந்த உறவினர் கூட்டம்.
ஒரு வழியாய் வழிதேடி அலைந்துதிரிந்து மண்டபத்தைக் கண்டுபிடித்த முகிலன் மகிழ்ச்சியை விழுங்கியது மண்டபத்தின் அமைதி. கலவரம் தொற்றிய முகத்துடன் மண்டபத்தை நோக்கி விரைந்தான்.

யாருமின்றி வெறிச்சோடிக்கிடப்பதன் காரணம் அறியும் ஆவலைக் காட்டிலும் ஒரு வேளை மண்டபம் மாறி வந்துவிட்டோமா என்ற ஐயமே அவனை அலைக்கழித்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 2 January 2019

பிரார்த்தனை


Religious Leader Mahatma Gandhi 1869 - 1948
பிரார்த்தனை வலிமை வாய்ந்தது. பிரார்த்தனை கடவுள் சார்ந்த விசயம் என்று கருதுபவர்கள் ஒரு புறம் இருக்க, பிரார்த்தனை என்பது நம்பிக்கை சார்ந்த விசயம் என்பது உறுதி. ஒருவரின் மீது நம்பிக்கை வைக்கிறோம். நாளை இதனை இவர் செய்து தருவார் என்று நம்பிக்கை வைக்கிறோம். நாளை அந்த நேரம் வரும் வரை இந்த நம்பிக்கை மட்டுமே நம்மிடம் உள்ளது. செயல் செய்து முடித்தபின்புதான் நம்பிக்கை செயல் வடிவம் பெற்று வெற்றி பெறுகிறது.
உலக வாழ்வில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கையை ஏற்படுத்தி ஆன்மபலத்தைத் தருவது பிரார்த்தனை. கடவுளின் மீது அசையாத நம்பிக்கையை ஏற்படுத்துவது பிரார்த்தனை.

காந்தியடிகளின் மொழிகளில் சொன்னால் ‘‘பிரார்த்தனை வாக்கு வன்மையைக் காட்டுவதற்கு உரியதன்று. உதட்டிலிருந்து எழும் வணக்கமும் அல்ல அது. இருதயத்திலிருந்து எழுவதே பிராத்தனை. ஆகையால் அன்பு ஒன்றைத் தவிர வேறு எதுவுமே அங்கே இல்லாதவாறு உள்ளத்தூய்மையை நாம் அடைந்து விடுவோமாயின் எல்லாத் தந்திகளையும் தக்க சுருதியில் கூட்டி, வைத்துவிடுவோமாயின் தானே இனிய கீதும் எழுந்து இளைவன் அருளைக் கூட்டுவிக்கும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.