Wednesday, 22 May 2019

மழை ஏன் பெய்கிறது? (சிறுகதை)


siragu rain
மரம் செடிகொடிகளின் இலைகளில் மழைத்துளிகள் துளிர்த்து இருந்தன. வீசியவாடைக் காற்றில் அத்துளிகள் சிறுசாரலாய் முகத்தில் தெறித்தன. நந்தினி தன் வீட்டுக் கொல்லையில் இருந்தாள். அவள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தாள். எட்டு வயது சிறுமி அவள். சற்றுமுன் பெய்தமழையின் குளிர்ச்சி கொல்லை எங்கும் நிறைந்திருந்தது. நந்தினிக்கு திடீரென்று “மழை ஏன் பெய்கிறது?” – என்ற சந்தேகம் வந்தது.
மேகத்தேரில் பவனி சென்று கொண்டிருந்த வருண பகவான் நந்தினியைப் பார்த்தார். அவர் அவள் முன்னே தோன்றினார். வருணனின் பேரழில் தோற்றம் அவளை வணங்கச் செய்தது. நந்தினி அவரிடம் “தாங்கள் யார்?”–என்று கேட்டாள். “நான் வருணன்! மழையின் கடவுள்!”–என்றார் அவர். சற்றுமுன் தன் மனத்தில் எழுந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டாள்.
“மழை பெய்தால் உனக்கு எப்படி இருக்கிறது?”–கேட்டார் வருணன்.
“மழை பெய்தால் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது!”–நந்தினி சொன்னாள்.
“அதற்காகத் தான் மழை தருகிறேன்!”–என்ற வருணன் நந்தினி தனது பதிலில் திருப்தி அடையவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

“கருணை, கொடை, அருள், அமுது இந்த நான்கு வார்த்தைகளுக்கும் பொருள் தெரிந்து கொண்டுவா! நான் ஏன் மழை தருகிறேன் என்பதைச் சொல்கிறேன்!”–என்றவர் அங்கிருந்து மறைந்து போனார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வெஸ்ட்மினிஸ்டர் அபே நினைவுச்சின்னத்தில் திருச்சி மலைக்கோட்டை

பிரித்தானியப் பேரரசின் மணிமகுடத்தை அலங்கரிக்கும் ஒரு சிறந்த அணிகலன் (India, the crown jewel of the British Empire) என இந்தியா பெயர் பெற்றது. இவ்வாறு குறிப்பிட்டவர் பெஞ்சமின் டிஸ்ரேலி (Benjamin Disraeli, 1874-81) என்ற இங்கிலாந்தின் பிரதமர். உலக வரலாற்றில், வளங்கள் பல கொண்ட, சிறப்பு மிக்க இந்தியா இங்கிலாந்துக்குக் கிட்டாமலே கைநழுவிப் போயும் இருக்கலாம். இந்தியாவை நவீன போர்க்கருவிகள் உதவிகொண்டு பிரான்ஸ் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இன்று நாம் யாவரும் பிரஞ்சு மொழி பேசும் நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டவர் தனது ஐம்பதாவது வயதில் இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தைப் பிரெஞ்சு வணிக அமைப்பின் தாக்குதல்களிலிருந்து காக்கும் பொறுப்பை ஏற்ற மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ். இவரே இந்தியாவின் இராணுவத்தை முதலில் கட்டமைத்து உருவாக்கியவர் என்ற பெருமை பெற்றவர். இந்திய ராணுவத்தின் தந்தை என்று ஆங்கிலேயர் இவரைக் குறிப்பிட்டார்கள் (The First English Commander-in-Chief, India – Major-General Stringer Lawrence).
இவர் உருவாக்கி வளர்த்தெடுத்த கிழக்கிந்தியக் கம்பெனியின் பாதுகாப்புப்படையே பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவமாகவும், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் இராணுவமாகவும் ஆனது. இந்தியாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் எண்ணத்துடன் திறம்படச் செயலாற்றிக் கொண்டிருந்த பிரஞ்சு ஆளுநர் டூப்ளே (Dupleix) வின் கனவைக் கலைத்து, பிரான்ஸ் நாட்டிலேயே டூப்ளே மதிப்பிழந்து போகும் அளவிற்குத் தக்காணத்தில் அதிரடியாகப் போர்களை இவர் மட்டும் நடத்தியிராவிட்டால் இங்கிலாந்து இந்தியாவில் கால் ஊன்றி இருக்கமுடியாது. நாம் படித்த வரலாற்று நூல்களில் இவர் முக்கியத்துவம் சிறப்பித்துக் கூறப்படவில்லை என்பது மட்டுமல்ல, இங்கிலாந்திலும் இவர் சாதனையை யாரும் சென்ற நூற்றாண்டிலேயே நினைவு வைத்திருந்ததாகத் தெரியவில்லை. அவ்வாறுதான் மேஜர் ஸ்ட்ரிங்கர் லாரன்ஸ் வரலாற்றை 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நூலாக எழுதி வெளியிட்ட ஜான் பிட்டுல்ஃப் என்பவரும் கருதுகிறார் என்பதை அவர் நூலைப் படிக்கையில் அறிய முடிகிறது. வரலாற்றின் திருப்புமுனையை உருவாக்கிய ஒருவர் ஏனோ யாராலும் அறியப்படாமலே இருந்துவரும் நிலை தொடர்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 13 May 2019

பெண்களை கற்காலத்திற்கு அனுப்புவதா!?


siragu-pengal1
பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறிக் கொண்டு வருகின்றனர். இந்தியா போன்ற மிக பிற்போக்கு கொண்ட ஒரு நாட்டில் பெண்களின் முன்னேற்றம் என்பது பல போராட்டங்களை முன்னெடுத்தே இங்கு சாத்தியப்பட்டது. ஆனால் அண்மைக்காலங்களில் மீண்டும் பெண்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட வேண்டும் என்று மத பாசிச சக்திகள் செயல்படுவது மிகப் பெரிய அச்சமாக உருவாகி உள்ளது. மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்கள் ஒரு சமுகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பது மிகத் தேவை. ஆனால் அந்த மனித பங்களிப்பை மதப்பண்பாடு மொழிப்பண்பாடு என சிதைப்பது பெண்கள் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும்.

சமூக வலை தளங்களில் இயங்கும் பெண்களுக்கு தரப்படும் அச்சுறுத்தல்கள், அவர்கள் பெரியாரியல் கருத்துகளைப் பேசும் போது அந்தப் பெண்களை பாலியல் ரீதியாக வசை பாடுவது, பெண்களின் அங்கங்களை அவர்கள் அறியாது படம் எடுத்து மிரட்டுவது போன்ற கொடுஞ் செயல்களில் ஈடுபடுவது, டிக்டாக்கில் பேசும் பெண்கள் மீது மணவிலக்கு நடவடிக்கைகள் என்று பெண்களை அனைத்து மதங்களும் பாகுபாடில்லாமல் அழுத்துகின்றன.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 9 May 2019

குறிஞ்சி நிலத் தாவரங்கள்


siragu kurinji nilam1
கருவில் இருக்கும் குழந்தை நோயோடு மண்ணிற்கு வருகின்ற சூழலில் நமது வாழ்க்கை முறையுள்ளது. நம் ஆதிப்பண்பாட்டின் அழித்தொழிப்பினால், ஐம்பது வயதைக் கடந்து செல்வது இன்று அரிதாகிவிட்டது. கல்வியில் தொடங்கி உண்ணும் உணவு வரை வெள்ளையினப் பண்பாடே நம்மை ஆட்கொண்டுள்ளது. இந்தியக் கண்டத்தை ஐரோப்பியர்கள் தங்களுக்குரியதாகத் தகவமைத்துக் கொண்டதன் விளைவு சொந்த மண்ணில் சுகமற்று வாழ்ந்து வருகிறோம். உலகிற்கு நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்வதற்கான விதிகளைக் கற்றுக் கொடுத்த தமிழினம் சுகாதாரமற்ற விளிம்பிற்குச் சென்றுகொண்டிருக்கிற அவலநிலையின் வெளிப்பாடுதான் இயற்கையைப் புறந்தள்ளுதலின் அறியாமை. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மையுடைய தமிழர்களின் சூழலியல் சார்ந்த வாழ்வியல் முறைகள் குறித்து சங்கத் திணைக்கவிதைகள் வழி அறியமுடிகின்றன. எனவேதான், இச்சங்க காலத்தை ‘இயற்கை நெறிக்காலம்’ என வரையறை செய்துள்ளனர். ஐவகை நிலப்பகுப்பும் நிலத்திற்கானச் சூழல் தகவமைவும், சூழல் சார்ந்த மாந்தர் வாழ்வியலும் சார்ந்த திணைமவியல் கோட்பாட்டுச் சூழல் கட்டமைப்பில்தான் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இந்நிலம் தவிர்த்து பிறதேசத்து செல்வாக்கினை தமிழர்கள் வாழவிரும்பாத காலம்தான் திணைமவியல்காலம்.
தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் “வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” வழி அறியலாகிறது. “ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக்கூறுகளும், அந்த இனம் சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார். தமிழர்களுக்கு இக்கருத்து பொருத்தமாக அமைந்துள்ளது. திணைமவியல் சூழலில் பயிர்விக்கப்பட்ட உணவுப் பயிர்கள், உழவுமுறைகள், பயிர்அறுவடை, பயிர்க்காவல் முறை ஆகியன குறித்த பதிவுகள் திணைக்கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. திணைக்கட்டமைப்பில் முதன்மையாக அமைந்த குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். நாகரிக வளர்ச்சியின் விளைவாக நீர் மேலாண்மை உருவாக்கத்தில் மருதம் உதயமாயிருக்க வேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 8 May 2019

தமிழர்களின் போர்க்கருவிகள்


siragu porkkaruvigal1
தமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,
மன்னர்களும் அவர்களின் போர்க்கருவிகளும்:

மன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் – மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 7 May 2019

உற்பத்தித்திறன்


siragu urpaththi thiran2
கச்சாப் பொருள்களை மனித உழைப்பினால் இயந்திரங்களில் ஈடுபடுத்தி மாற்றங்கள் செய்வதன் மூலம் பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கச்சாப் பொருள்களையும், இயந்திரங்களையும் அப்படியே வைத்துக்கொண்டு மனித உழைப்பில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அதிக அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய முடிந்தால் அதை உற்பத்தித்திறன் அதிகரிப்பு என்று சொல்கிறோம். கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை உற்பத்தி செய்ய முடியுமானால் அதுவும் உற்பத்தித்திறன் அதிகரிப்பே.

இவ்வாறு உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் முதலாளிக்கு இலாபம் அதிகரிக்கும். ஆனால் இதை முன்னிட்டு எந்த ஒரு முதலாளியும் தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்துவது இல்லை. இந்த உற்பத்தித்திறன் அதிகரிப்பு நிகழ்வுகள் தொழில்கள் அனைத்திலும் நிகழ்கையில் முதலாளிகளுக்கு இலாப உயர்வு கிடைத்த விகிதத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்காததால் ஏற்றத்தாழ்வு அதிகமாகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 1 May 2019

தமிழும் கணித்தலும்


Siragu tamil in computer2
முன்னுரை :
கணினியில் தமிழ் தோன்றியது 1980 காலப்பகுதியிலேயே தான் தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல வியாபார நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத் தயாரித்து வெளியிட்டு சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான இயக்கு தளங்களைக் (Operating system) கொண்டிருந்தன. பின்னர் மக் ஓ.ஸ்.(MacOS), மைக்ரோசாப்ட் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயக்கு தளமுடைய கணினிகள் கிட்டத் தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ் வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில். இவை வெளிவந்து கொண்டிருக்கும்போது தமிழ்க் கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. நமது ஆழ்மனத்தின் எண்ணங்கள், உள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் கனவுகள், ஆசைகள், கற்பனைகள் இவற்றை எல்லாம் பிறரிடம் பகிர்ந்து கொள்கையில், அவற்றின் சாரம் மாறாமல், தயக்கமோ, தடையோ ஏதுமில்லாது எடுத்துக் கூற ஓர் கருவியாக இருப்பது அவரவரது தாய் மொழி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.