Thursday, 30 July 2015

குறுகிய காலத்தில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் தமிழக விவசாயி அந்தோணிசாமி!

pudhu raga elumichchai2
நெல்லை மாவட்டம் புளியங்குடி, எலுமிச்சை சாகுபடிக்கும் பழங்களுக்கும் பெயர் பெற்றது. ‘லெமன் சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதியில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் இதனை கூடுதல் விலைக்கு வாங்குவது வழக்கம். இவை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலேயே எலுமிச்சைக்கு என்று பிரத்யேகமான தினசரி சந்தை இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் எலுமிச்சை சாகுபடி செய்துவரும் அந்தோணிசாமி, இரண்டே ஆண்டில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கியுள்ளார். பொதுவாக எலுமிச்சை செடிகள் காய்ப்புக்கு வர 5 முதல் 6 ஆண்டுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புது ரக எலுமிச்சைக்காக, 2004-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அந்தோணிசாமிக்கு ‘சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்து பாராட்டியுள்ளார். அந்தோணிசாமியுடன் ஒரு நேர்க்காணல்:
இந்த யோசனை எப்படி வந்தது?
”நான் 50 வருடங்களாக எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் நிறைய எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போகிறதாகவும் இருந்ததால் கடும் நஷ்டமும், மன உளைச்சலும் அடைந்தேன். அதற்கு தீர்வு காண நானே ஒரு புது எலுமிச்சை ரகத்தை உருவாக்க முடிவெடுத்தேன்.
எப்படி உருவாக்கினீர்கள்?

அதிக நீர்ப்பாசனமும், பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு ஒட்டுக் கட்டினேன். பின்பு, ஒட்டுக் கட்டிய செடியிலிருந்து சிறந்த விளைச்சல் தரும் ஒரு செடியை எடுத்து மீண்டும் ஒட்டுக்கட்டினேன். இப்படி மறுபடியும், மறுபடியும் ஒட்டுக்கட்டி ஒரு ரகத்தை உருவாக்கினேன். இந்த ரகம் 4 தலைமுறை செடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட என்னுடைய 15 ஆண்டு கால உழைப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 28 July 2015

சித்த மருத்துவம் நாட்டு மருத்துவமல்ல…

Dr.Jerome
இந்தத் தலைப்பில் ஒரு சித்த மருத்துவராகிய நான் ஒரு கட்டுரை எழுதுவது உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். ஆகவே, இதற்கான விளக்கத்தைக் கூறுவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
சித்த மருத்துவம் நாட்டு மருத்துவம் என்றால், எந்த நாட்டு மருத்துவம்;?
ஒரு வேளை சற்று யோசித்துவிட்டு, ‘தமிழ்நாட்டு மருத்துவம்’ என நீங்கள் பதில் அளிக்கலாம்.
அலோபதி மருத்துவத்தின் தந்தை என ஹிப்போ கிரேடஸ் அழைக்கப்படுகிறார்.
இப்போது இன்னொரு கேள்வியையும் நமக்கு நாமே கேட்டுப்பார்ப்போம்.
ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை என கிறிஸ்டியன் சாமுவேல் ஹனிமன் என்பவரை அழைக்கிறோம்.
அப்படி சித்த மருத்துவத்தின் தந்தை என யாரை அழைக்கலாம்?
இதற்கு சிலர் அகத்தியர் எனவும், சிலர் போகர் எனவும் கூறிவருகின்றனர். ஆனால் சித்த மருத்துவம் இப்படி ஒரு குறிப்பிட்ட நபரால் தோற்றுவிக்கப்படவில்லை. பல கணங்களாக (group) சித்த மருத்துவ அறிஞர்கள் இயங்கி வந்துள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒரு கல்லூரிபோல இயங்கி வந்துள்ளனர். ஒரு மருத்துவ அறிஞரிடம் பலர் மாணவர்களாக இருந்து மருத்துவம் கற்றிருக்கிறார்கள். இந்த மருத்துவ அறிஞர்களிடையே கருத்து பரிமாற்றம் நடந்திருக்கிறது. இப்படி பல்வேறு சித்த மருத்துவ அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட மருத்துவத் தொகுப்பே சித்த மருத்துவம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 27 July 2015

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?

indhiyaavin2
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி அவர்கள் சென்றவாரம் (ஜூலை 15, 2015) கடந்த அறுபதாண்டுகளில் இந்தியாவில் இருந்து உலகை அதிரவைக்கக் கூடிய கண்டுபிடிப்புகள் எதுவும் தோன்றவில்லை, புதுமையான கருத்துகள் எதையும் இந்தியர்கள் உருவாக்கவில்லை என்றக் கருத்தை வெளியிட்டிருந்தார். இந்தியாவின் இளைய தலைமுறையினர் மேலைநாட்டினர் போலவே அறிவும் திறனும் இருந்தும், உலகிற்குப் பயன்தரும் ஆக்கப்பூர்வமான ஆய்வுகளில் ஈடுபடுவதில்லை என்றும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பொழுது அவர் கூறினார்.
இக்கருத்து இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தைப் பற்றி சிந்திக்க வைக்கும் கருத்தாகும். இதன் அடிப்படையில் உலகநாடுகளின் மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தோடு நம் இந்திய மாணவர்கள் பெறும் கல்வியின் தரத்தையும் ஒப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
சென்ற வாரம் (ஜூலை 17, 2015) உலகப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் மையமான ‘செண்டர் ஃபார் வேர்ல்ட் யுனிவர்சிட்டி ரேங்க்கிங்ஸ்’ (Center for World University Rankings – http://cwur.org/) நிறுவனமும் உலகின் 59 நாடுகளில் இருந்து 1,000 பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி, 2015 ஆம் ஆண்டிற்கான அறிக்கையையும் வெளியிட்டது. ஒவ்வொரு ஆண்டும் உலகப் பல்கலைக்கழகங்களின் தரத்தை இந்த ஆய்வு மையம் ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இவர்களது தளத்தில் 2012, 2013, 2014, 2015 ஆகிய நான்கு ஆண்டுகளுக்கான தரவுகள் கிடைக்கின்றன. இவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது அமெரிக்க, இங்கிலாந்து நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருப்பது தெரிய வருகிறது.

குறிப்பாக, முதல் ஐந்து இடங்களில் இருக்கும் கீழ்காணும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து முதல் “ஐந்து” இடங்களிலேயே இருந்து வருகின்றன. அதிலும் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தொடர்ந்து ஒவ்வொருமுறையும் முதலிடத்தையே பிடித்து வருகிறது. மற்ற பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் முன்னும் பின்னும் நகர்ந்தாலும் முதல் ஐந்து இடங்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஹார்வர்ட், ஸ்டான்ஃபோர்ட், எம்.ஐ.டி., கேம்ப்ரிட்ஜ், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகங்கள் மட்டுமே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Sunday, 26 July 2015

தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அசோகன் அவர்களின் நேர்காணல்

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: எனது பெயர் A.அசோகன். நான் வழக்கறிஞராக இருக்கிறேன். அதுமட்டுமல்லாது நுகர்வோர் நல கவுன்சில் என்ற அமைப்பில் 1991ம் ஆண்டிலிருந்து படிக்கும்பொழுதில் இருந்து இன்றுவரை நுகர்வோர் நலனுக்காக செயல்பட்டுக்கொண்டு வருகிறேன். தற்பொழுது தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு FEDCOT – Federation of Consumer Organizations in Tamilnadu என்ற அமைப்பில் மொத்தம் 400 குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது. அதில் நான் பொதுச்செயலாளராக செயல்பட்டு வருகிறேன்.
கேள்வி: உங்களது இயக்கத்தின் பணிகள் என்னென்ன?
பதில்: குறிப்பாக நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அதேபோல் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே நுகர்வோர் பற்றியான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கு நுகர்வோர் தொடர்பான பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி இம்மாதிரியான போட்டிகள் நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஒரு குறிப்பிட்ட நுகர்வோரின் பிரச்சனைகளை மையமாக, தலைப்பாக வைத்து மாணவர்களின் மத்தியில் பட்டிமன்றத்தின் வாயிலாகவும் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, அதுமட்டுமல்லாது பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பாக நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்காக நிவாரணத்தைப் பெற்றுத் தருவது, அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய கிராமப்புற, நகர்ப்புற ஏழை மக்களுக்கு இலவசமாக பயிற்சி நடத்தி அதன் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது. அந்தந்த பகுதியிலே தாலுகா அளவிலான பயிற்சி இருக்கிறது.
குறிப்பாக கூட்டமைப்புக்கு இதற்கு முன்பு ஹென்றி திபென் என்பவர்தான் பொதுச்செயலாளராக இருந்தார். ஆர்.தேசிகன் என்பவர் தான் தலைவராக இருந்தார். ஜேம்ஸ் ஆரோக்கியசாமி பயிற்சி இயக்குனராக இருந்தார். இந்தக் கூட்டமைப்பினுடைய முன்னாள் நிர்வாகிகளான இவர்களுடைய தீவிர செயல்பாடு தமிழகம் முழுக்க நுகர்வோர் விழிப்புணர்வைக் கொண்டுவருவதற்கு ஏதுவாக இருந்தது.
கேள்வி: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பற்றிய விளக்கங்கள் கூறவும்?

nugarvor5
பதில்: 1986ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. நுகர்வோருக்கு எட்டு உரிமைகள் இருக்கிறது. பாதுகாப்பு உரிமை, தகவல் பெறும் உரிமை, தேர்ந்தெடுக்கும் உரிமை, முறையீட்டு உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமை, நுகர்வோர் குறை தீர்ப்பதற்கான உரிமை, நல்ல சுற்றுச்சூழலைப் பெறுவதற்கான உரிமை, அடிப்படைத் தேவைகளுக்கான உரிமை. இந்த எட்டு உரிமைகள் நுகர்வோர் உரிமைகள் என்று சொல்லப்படுகிறது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோர் என்பவர் யார் என்று குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் ஒரு பொருளையோ அல்லது சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். உதாரணத்திற்கு நாம் வாங்கக்கூடிய பொருள், அதாவது அது மளிகைப் பொருட்களாகட்டும், எலக்ட்ரானிக் பொருட்களாகட்டும், மருந்துப் பொருட்களாகட்டும் என்று எந்த ஒரு பொருளையும் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவோர் நுகர்வோர்கள். அதே மாதிரி சேவைகளான மருத்துவசேவை, போக்குவரத்து சேவை, வழக்கறிஞரிடமிருந்து பெறக்கூடிய சேவை, நிதி நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவை, தபால், தந்தி இதுபோன்ற நிறுவனங்களிடமிருந்து பெறக்கூடிய சேவைகளை பயன்படுத்துவோர்கள் நுகர்வோர்கள். சாதாரணமாக காசு கொடுத்து வாங்கக்கூடியவர்கள் நுகர்வோர்கள், அதேபோல் காசுகொடுத்துதான் என்று இல்லாமல், உத்திரவாதம் கொடுக்கப்பட்டு பெறக்கூடிய பொருட்கள் மற்றும்சேவைகளைப் பெறுவோரும் நுகர்வோராகக் கருதப்படுகிறார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 22 July 2015

அமெரிக்காவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் எவை?


americaavin2












உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயில வேண்டும் என்பது படிப்பில் முனைப்பாக இருக்கும் ஒவ்வொரு மாணவரின் கனவாக இருக்கும். தங்கள் பிள்ளைகளைப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்பாத பெற்றோர்களும் இருப்பது அரிது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் மிகவும் சிறந்ததாக இருப்பதால் சராசரி மதிப்பெண் பெற்ற மாணவருக்கு என்ன பயன், அவரது தகுதி அடிப்படையில் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் அவருக்கு எட்டாக் கனியாக இருக்கும். அந்த மாணவர், ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக தனது தகுதிக்கு ஏற்ற கல்வி நிறுவனத்தைத்தான் கணக்கில் கொள்ள முடியும். அதே போல, எம்.ஐ.டி ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பக் கல்வி பயில விரும்பாத மாணவர் அங்கு சென்று பயில வேண்டும் என்று கனவு காண மாட்டார்.
மேலும், மிகப் பெரிய புகழ் பெற்ற சில கல்வி நிறுவனங்களில், பள்ளிகளில் முதல் மாணவர்களாகத் தேறிய மாணவர்களுக்கும் கூட இடம் கிடைக்காது. இதற்கு சில கல்வி நிறுவனங்கள் சமத்துவம் கடைப்பிடிக்கும் நோக்கில் பல்வேறு பின்புலம் உள்ள மாணவர்களையும் ஆதரிக்கும் நோக்கில், மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் கொள்கைகளைத் தங்கள் நோக்கத்திற்கு ஏற்ற வகையில் வகுத்துக் கொள்வது காரணமாகும். சமீப காலமாக ஆசிய நாட்டுப் பின்புலம் கொண்ட மாணவர்கள், குறிப்பாக சீன மற்றும் தெற்காசிய நாட்டினை பூர்வீகமாகக் கொண்டவர்களின் வாரிசுகள், புகழ் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் இது போன்ற கொள்கைகளினால் நல்ல திறமையும், தகுதியும், மதிப்பெண்களும் இருந்தும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற வழக்கும் அமெரிக்க நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 21 July 2015

எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?

Dr.Jerome
மருத்துவம் என்பது ஒரு அறிவியல். இன்று அறிவியல் துறை ஒரு துறையாக இல்லாமல் பல்வேறு துறையாக பிரிந்து வளர்ந்துள்ளது. அதிலும் மருத்துவ அறிவியல் மிக நுட்பமாக வளர்ந்து வருகிறது. கண்ணுக்கு ஒரு மருத்துவர், பல்லுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலைமாறி பல் மருத்துவத்திலேயே எத்தனை விதமான மருத்துவர்கள் பாருங்கள்.
siththa maruththuvaththil1
-               Orthodontist– பல் சீரமைப்பு நிபுணர்.
-               Periodontist – ஈறு நோய் நிபுணர்.
-               Oral Maxillofacial surgeon – வாய் முக அறுவை சிகிச்சை நிபுணர்
-               Pedodontist– குழந்தைகள் பல் மருத்துவர்
-               Gerodontist– முதியோர் பல் மருத்துவர்
-               Conservative dentist – வேர் சிகிச்சை நிபுணர் (பல் பாதுகாப்பு)
-               Community dentist – சமூக பல் மற்றும் வாய் நல மருத்துவர்.
-               Prostodontist– செயற்கை பல் கட்டும் நிபுணர்.
-               Implantologist – செயற்கை துளை பல் பொருத்தும் மருத்துவர்.
இது பல்லுக்கு மட்டும்தான். இப்படி ஒவ்வொரு மண்டலத்திற்கும் மிகவும் விரிவாக மருத்துவம் வளர்ந்துகொண்டே செல்லும் இக்காலத்தில் எல்லா நோய்களையும் சித்த மருத்துவத்தில் குணமாக்க முடியுமா?

இதே போல சித்த மருத்துவமும் வளர்ந்துள்ளதா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Monday, 20 July 2015

குழந்தைகளை வளர்க்க கற்றுக் கொள்வோம்

kulandhai4முன்பெல்லாம் குழந்தைகளின் பிறப்பு “முட்டுவீடு” எனக் கூறக்கூடிய கூரை வீட்டில், ஒரு பாட்டியின் தலைமையில் நடக்கும். அன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் தவிர வேறு பால் எதுவும் கொடுத்ததில்லை நம் தாய்மார்கள். அவ்வளவு ஏன் 5 முதல் 8 வயது வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த, வளர்த்தவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அன்று குழந்தைகளை எவரும் பொத்திப் பொத்தி பார்த்துக் கொண்டது இல்லை. குழந்தைகளின் விருப்பம் போல் வீதியில் விட்டு விடுவார்கள். அவர்களாகவே சாப்பிடுவார்கள், அவர்களாகவே கிளம்பி பள்ளிக்கூடம் செல்வார்கள். மாலையானதும் பற்பல தமிழர் விளையாட்டுக்களை பல குழந்தைகளுடன் குறிப்பாக ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் விளையாடி மகிழ்வர். இரவானதும் தெருவிளக்கில் கூட்டாக அமர்ந்து படிப்பார்கள். என்ன… வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு படமும் பார்ப்பார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.