Sunday, 29 November 2015

நீரின்றி அமையாது உலகு


neerindri3
நீரின்றி அமையாது உலகு என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய திருவள்ளுவரின் குறளை மட்டும் மாணவர்களுக்குப் பாடமாக வைத்துவிட்டு, அதை உணரவில்லை நமது அரசு. எனவேதான், இயற்கை தமிழக அரசுக்கு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. மழையின் சிறப்பினை திருவள்ளுவர் மட்டும் கூறவில்லை, மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் என மழையைப் போற்றி வணங்கித் தம் காப்பியத்தைத் தொடங்கினார் இளங்கோவடிகள். ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் மழையின் அருமைபெருமைகளை உணர்ந்துள்ளோம். இந்த ஆண்டில் நமக்கு இயற்கை கொடுத்த மழைநீரை வீணாக்கியதுதான் நாம் செய்த சாதனை. ஆய்வாளர்கள் நிலத்தடி நீர் குறைந்து வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என தமது அறிக்கையில் வெளியிட்டுள்ளனர். இதனைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை, அரசும் மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.
neerindri7
நமது தமிழகத்தில் 13 ஆயிரத்து 799 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதில் 10 ஆயிரத்து 64 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. தனது ஆவண அறிக்கையில், சென்னையில் முன்பு இருந்த ஏரிகள் இன்று காணவில்லை. ஆம், நுங்கம்பாக்கம் ஏரி, வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கத்தில் சில பகுதிகள், பனகல் மாளிகை, மாம்பலம் ஏரி, மாம்பலம் பகுதியின் சில பகுதிகள், வேளச்சேரி ஏரி, 100 அடி சாலை, ரானே கம்பெனி, ஃபீனிக்ஸ் மால், அல்லிக்குளம், நேரு ஸ்டேடியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், கோயம்பேடு ஏரி, கோயம்பேடு பேருந்து நிலையம், கோயம்பேடு சந்தை, மெட்ரோ ரயில் நிலையம், முகப்பேர் ஏரி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, விருகம்பாக்கம் ஏரி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்களுக்கான குடியிருப்பு மற்றும் இன்று கல்வித்துறையில் உயர்ந்த நிலையில் உள்ள நிறுவனங்களின் ஏரி, பொத்தேரி முதலான பல ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 26 November 2015

வாயுத்தொல்லை நீங்க குறிப்புகள்


vaayuththollai1
  1. வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.
  2. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
  3. சுக்கு மல்லி கசாயம் வாயுக்கு நல்லது.
  4. பசும்பாலில் பத்து பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால்வாயு சேராது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்

Wednesday, 25 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு- 218


sanga paadalgal2
கண்ணகனார் என்ற புலவர் பாடியது.
கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டபோது அவரோடு பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரும் உயிர் துறந்தார். அதனைக் கண்ட புலவர்கள் வியந்து நின்றனர்.  வியப்பில் இருந்த புலவர்களுக்கு விடை தந்தார், புலவர் கண்ணகனார்.

தங்கமானது, நிலத்தின் அடியிலிருந்து கிடைப்பது; பவளம், காட்டிலே கிடைப்பது; முத்து, கடலிலே பிறப்பது. மணி, மலையிலிருந்து பெறுவது. இவை அனைத்தும் தோன்றுமிடம் ஓரிடமல்ல… என்றாலும், அணிகலனாக அமைக்கின்றபோது ஒன்றிணைகின்றன. அதைப்போல்தான் மன்னனாக இருந்தால் என்ன, புலவனாக இருந்தால் என்ன, தொலைவில் இருந்தால் என்ன, இவையெல்லாம் காரணங்கள் அல்ல… இங்கே, வேறோரு முக்கியமான பந்தம் இருக்கிறது. உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரோடுதான் இணைவர். அந்த இணைப்புத்தான் மன்னனையும் புலவனையும் இணைத்தது என்கின்றார் புலவர்.  இதோ அவரின் புறநானூற்றுப் பாடல்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 24 November 2015

சிறுமியும் காண்டாவிலங்கும்


rhinoceros3
அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில் இருந்தது. பக்கத்து வீட்டுக்கு நகரத்திலிருந்து தனது அம்மாவைப் பார்க்க அவரது மகன் வருவார். வரும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் அவர் வருவார். என்மேல் தனது அக்கறையைக் காட்டுவதற்காக என் அப்பா முன்னிலையில் எதையாவது ஒன்றைச் சொல்லி அதற்கு இங்கிலீஸில் என்ன? இதற்கு இங்கிலீஸில் என்ன? என்று கேட்பார். வாட் இஸ் யுவர் நேம்? என்ற கேள்வியைத் தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது.
அழைத்துக்கொண்டு எங்களது வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல அன்றும் நான் மாட்டிக்கொண்டேன். அவரது புதல்வி முன்னிலையில் ‘காண்டாமிருகத்திற்கு’ இங்கிலீஸில் பெயர் என்ன? என்று கேட்டார். நான் திருதிருவென விழித்தேன். உடனே, நீர்யானைக்கு இங்கிலீஸில் என்ன? என்று அடுத்து கேட்டார். அதற்கும் நான் விழித்தேன். அதே கேள்வியைத் தனது மகளிடம் கேட்டார். அவர் மகள் உடனே அதற்கு பதில் சொன்னாள். இவனை இதுக்குத்தான் இங்கிலீஸ் டியூசன் அனுப்புங்கிறேன் என்றால் கேட்க மாட்டிங்கிறீங்களே அண்ணே’ என்று படிக்காத என் தந்தையிடம் அலுத்துக் கொண்டார். என் வயதுடைய பெண்பிள்ளை முன் அவமானப்பட நேர்ந்ததை எண்ணி நான் கூனிக் குறுகி அழுதே விட்டேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

இதற்கு முன் காண்டாமிருகத்திற்கு ரைனோசரஸ் என்பதும் நீர் யானைக்கு ஹிப்போபொடமஸ் என்பதும் எனக்குத் தெரியாது. அந்த வார்த்தையையே நான் கேட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் காண்டாமிருகம் என்ற சொல் கூட எனக்குப் புதிது தான். இந்த சம்பவம் நடந்து முப்பது வருடத்திற்கும் மேலாகி விட்டது. சரி. அதை எதற்கு உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன்? என்று கேட்கிறீர்களா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை


438 days1
(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)
நிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில், பசிபிக் பெருங்கடலின் மையத்தில், மார்ஷல் தீவுகளின் (Marshall Islands) கடற்காயலில் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் இருந்த கடலோரக் காவல்படையினர் தமது படகின் மேல்தளத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த உருவத்தை வெறித்துப் பார்த்தனர். அவர் பலநாட்கள் கடலில் தனித்துவிடப்பட்டவர் என்ற மறைக்கமுடியாத உண்மையை அவரது தோற்றம் காட்டியது. சிக்குப்பிடித்துப் புதர் போல மேல்நோக்கி மண்டியிருந்த தலைமுடியும், சீரற்று வளைந்த முடிக்கற்றையுடன், பலநாட்களாகச் சவரம் செய்யப்படாத ஒழுங்கற்ற தாடியும் கொண்டிருந்தார் அந்த மனிதர். மணிக்கட்டுகள் சிறுத்துப்போய், கணுக்கால்களும் வீங்கியிருந்த நிலையில் கொஞ்சமும் நடமாடாத முடியாதவராக அவர் இருந்தார். யாருடைய கண்களையும் சந்திக்க விருப்பமின்றிப் பார்வையைத் தவிர்த்து அவ்வப்பொழுது முகத்தையும் மூடிக் கொண்டார்.

எல் சல்வடோர் (El Salvador) நாட்டைச் சேர்ந்த 36 வயதான ‘ஹோஸே சல்வடோர் ஆல்வரெங்கா’ (José Salvador Alvarenga) என்ற மீனவர் தனது உதவியாளரான இளைஞருடன் பதினான்கு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகில் தனது பயணத்தைத் துவக்கினார். இப்பொழுது அவர் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மார்ஷல் தீவுகளின் தென்முனையில் இருக்கும் ஏபான் ஆட்டல் (Ebon Atoll) என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். புயலில் சிக்கி, தான் புறப்பட்ட இடத்திலிருந்து 6,700 மைல்களுக்கு அப்பால், கடலில் 438 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 23 November 2015

சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம்

chennai thaththalikkiradhu5
உங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.
இவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா?
திடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.

இருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின்  மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 November 2015

சங்கப் பாடல்களை அறிவோம் – குறுந்தொகை-5

kurundhogai 4பாடலைப் பாடியவர்- நரிவெரூஉத் தலையார்
இக்குறுந்தொகைப் பாடலில், மனிதனின் வளர்ச்சிப் படிநிலைகளில் மன உணர்வுகளும் மாறுபடுகின்ற தன்மையினைப் பதிவு செய்திருக்கின்றார் புலவர்.
காதலின் தன்மை இதுவென அறியாத வளரிளம் பருவத்துப் பெண். காதலன் பிரிவினால் அவளுடைய கண்கள் தூங்க மறுக்கின்றன. இதுதான் காதலின் தன்மையா என்று வியப்படைகின்றாள் அவள். இங்கே அவளின் உள்ளத்து உணர்வுகள் பாடலாகிறது. இதோ பாடல்…
அதுகொல் தோழி காம நோயே
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை
உடைதிரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்லிதழ் உண்கண் பாடு ஒல்லாவே.
“இனிய நிழலைத் தரும் புன்னை மரம். அதில் வந்து தங்கிய குருகு உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புன்னை மரத்தின் மீது கடலலைகள் வந்து மோதுகின்றன. மோதும் அலைகளால் வீசப்படும் துளிகளால் புன்னையின் அரும்புகள் மலருகின்றன. இத்தகைய இனிய நீரினையுடைய மென்புலத்துத் தலைவன் என்னைப் பிரிந்தான் என்று பல இதழ்களையுடைய தாமரை போன்ற என் கண்கள் தூக்கம் இல்லாததாயின. இதுதான் காதல் நோயா? ” என்று தோழியிடம் வினா எழுப்புகின்றாள் தலைவி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.