Sunday, 31 January 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்


devaneyan3
கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?
பதில்: என்னுடைய பெற்றோருடைய சொந்த ஊர் திருநெல்வேலி. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகில் கோபி பாளையம் என்கிற கிராமம். அங்கு எட்டாம் வகுப்பு வரையிலும் அரசு உதவி பெறுகிற கிறித்துவப் பள்ளியிலும், பின் அரசுப் பள்ளியிலும் படித்தேன். பத்தாம் வகுப்பு திண்டுக்கலில் அரசு உதவி பெறுகிற பள்ளியில் படித்தேன். அதன்பிறகு இளங்கலை இயற்பியல் கோபி கலைக்கல்லூரியிலும், முதுகலை இயற்பியல் லயோலா கல்லூரியிலும் படித்திருக்கிறேன். அப்பா ஒரு தனித்தமிழ் ஆர்வலர், பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மாணவர்.
அடிப்டையில் எங்களது கிராமப்புரத்தில் நிறைய விடயங்களைக் கொண்டுவருவதற்கு என்னுடைய அப்பா ஒரு காரணம். பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியராக இருந்து பள்ளிக்கூடத்தையே ஒரு சமூகக்கூடமாக மாற்றியவர். அதனால் என்னுடைய வீட்டில் அனைவருக்குமே சமூகப்பணி என்பது சாதாரண விடயம்தான். என்னுடைய வீடு இயல்பாகவே தமிழறிஞர்கள், சமூக அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பெரியாரிய தொண்டர்கள், அம்பேத்கர் தொண்டர்கள் என்று இந்த மாதிரி சமூகம் சார்ந்து இயங்கும். அதனால் எனக்கு இயல்பாகவே சிறிய வயதிலிருந்தே அதில் ஆர்வம் உண்டு.
அதன்பிறகு என்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலகட்டத்தில், ஈழத்தமிழர் போரில் என்னுடைய அப்பா தீவிரமாக ஈடுபட்டார். அவருடன் இணைந்து வேலைசெய்ததால், பெரியாரிய அமைப்பு கூட்டங்கள், தமிழ் அமைப்பு கூட்டங்கள் என்று இந்த மாதிரி கூட்டங்களுக்கெல்லாம் சென்று சென்று இயல்பாகவே வீடே அந்த அடிப்படையில் இருந்தது. அதன்பிறகு கல்லூரியில் படிக்கும் பொழுது பெரியாரிய சிந்தனையாளர் திராவிட கழகம் மரியாதைக்குரிய ராமகிருஷ்ணனோடு இனைந்து பணியாற்றுவதற்கும், மரியாதைக்குரிய ஐயா பெருஞ்சித்திரனாருடைய மகன் பொழிலனோடு இணைந்து பணியாற்றுவதற்கான வேலைகளை நிறைய செய்ததற்குப்பின், இயல்பாகவே பெரியாரிய, தமிழ்தேசிய, அம்பேத்கரிய பார்வையும் வந்தது.

அதன்பிறகு கல்லூரி படிப்பு MSc-யை லயோலா கல்லூரியில் முடித்ததற்குப் பிறகு, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தது மட்டுமல்லாமல், தமிழ்சான்றோர் அமைப்பில் ஒருங்கிணைக்கிற பொறுப்பை ஏற்படுத்திதமிழ்நாடு முழுவதும் 100 தமிழர்கள் சாகும் வரை பட்டினிப் போராட்டம், தமிழ்வழி கல்விக்கான போராட்டத்திற்கான நெறிப்படுத்துகிற வேலைகளையும், தந்தை பெரியார் தமிழிசை மன்றத்தில் தமிழிசை நிகழ்ச்சிகளை நெறிப்படுத்துகிற வேலைகளையும், தமிழ்நாட்டில் இருக்கிற தமிழ், தமிழர் அமைப்புகளோடு இணைந்து ஒருங்கிணைக்கிற பணியிலும் இருந்தேன். குறிப்பாக சுப.வீரபாண்டியன், தோழர் தியாகு, மணியரசன், பெரியார்தாசன் இவர்களோடு இயங்குவதற்கான ஒரு பெரிய வாய்ப்பையும், அவர்களோடு நெருங்கிப் பழகி அம்பேத்கார், பெரியாரிய சிந்தனைகளை கிராமப்புற கூட்டங்களில் எற்படுத்துவதற்கும், வீதி நாடகங்கள் போன்ற அமைப்புகள் இயக்கப் பாடல்களோடு பாடுவதற்கான பிரச்சார பயணங்களிலும், தனித்தமிழ் இதழ்கள், பெரியாரிய, மாக்சீய அறிஞர்களின் இதழ்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணிகளையும் பல்வேறு கட்டங்களில் வேலைசெய்து வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 28 January 2016

சங்கப் பாடல்களை அறிவோம்- புறநானூறு-8


sangappaadalgal2
சங்கப் புலவர்களிலே தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் கபிலர். அருளும் அன்பும் உளத்தூய்மையும் வாய்மையும் பாட்டியற்றும் வன்மையும் பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய் விளங்கியவர். சங்கப் புலவர்களால் போற்றிப் புகழப்பட்டவர். பாரியின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவர். புறநானூற்றின் எட்டாவது பாடல் இவருடையது. சேரலாதனைப் போற்றிப் புகழும் பாடல். பாடாண்திணையைச் சார்ந்தது. பாடப்படும் தலைவனின் புகழும் ஆற்றலும் ஈகையும் அருளும் புகழ்ந்து உரைப்பதே பாடாண்திணை. அந்த வகையில் அமைந்த பாடலிது.
சேரலாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டு யாரோ ஒரு புலவர் பாடியிருக்கின்றார் போலும்! அதைக் கேட்ட கபிலர், கதிரவனிடமே கேட்கின்றார், “கதிரவனே! நீ எப்படி என் மன்னனோடு ஒப்பாவாய்” என்று!. அதற்கான காரணங்களையும் அடுக்கடுக்காக அடுக்குகின்றார் கபிலர்.

சேரலாதனைப் பிற அரசர்கள் வணங்கிச் செல்வர். ஆனால், சூரியனோ பிற கோள்களின் வழியே செல்கின்றான். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 27 January 2016

தேனி பெண்ணின் விண்வெளி கனவு..


vinveli kanavu1
உதய கீர்த்திகா… ஒரு சாதாரண நடுத்தர குடும்ப தேனி பெண்ணுக்கு உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்க இடம் கிடைத்திருக்கிறது. அவரது விண்வெளி கனவுகளும், திறமைகளும், ஆர்வங்களும் வியப்பூட்டக் கூடியவை. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப் பற்றி?
உதய கீர்த்திகா: சொந்த ஊர் தேனி. அப்பா ‘அல்லிநகரம்’ தாமோதரன் சிறுகதை எழுத்தாளர், ஓவியர். அம்மா அமுதா வழக்கறிஞர் ஒருவரிடம் தட்டச்சராக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு நான் ஒரே மகள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500 க்கு 487 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண். +2 வில் 1030 மதிப்பெண்கள். அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு. தமிழ்வழிக் கல்விதான் பயின்றேன். தற்போது உலகின் சிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான மேற்குஉக்ரைன் நாட்டில் உள்ள Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆய்வு தொடர்பான Aerospace engineering என்ற படிப்பில் சேர்ந்திருக்கிறேன்.
விண்வெளி துறையில் ஆர்வம் எப்படி வந்தது?
உதய கீர்த்திகா: நிலவைக் காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, ‘என்னை நிலாவுக்குக் கூட்டிக்கிட்டுப் போங்கப்பா’-ன்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம்வகுப்புப் படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சிதான் என்ற முடிவுக்கு வந்தேன். மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பாக எங்கே, எந்தப்போட்டி நடந்தாலும் உடனே என் பெயரைக் கொடுத்து விடுவேன்.

நிலா, வானம், அண்டம், விண்வெளி, விண்வெளிவீரர் தொடர்பான நூல்களைத் தேடித்தேடிப் படிப்பேன். அவை தொடர்பான தகவல்கள், துணுக்குகளை குறிப்பு எடுத்துவைத்துக் கொள்வேன். அதுதான் பல விண்வெளி ஆய்வுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க உதவியது. +2 க்குப்பிறகு விண்வெளித்துறை சார்ந்த படிப்புதான் படிக்கவேண்டும் என்ற உறுதியான கனவோடு இருந்தேன். இப்போது அந்தக்கனவு நனவாகியிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 26 January 2016

பாயும் காளை


paayum kaalai1
“ஆர்ட்டுரோ டி மோடிக்கா” (Arturo Di Modica) என்ற சிற்பி உருவாக்கிய “சார்ஜ்ஜிங் புல்” (Charging Bull) என அழைக்கப்படும் நியூயார்க் நகரின் “பாயும் காளை” சிற்பம் 3,200 கிலோகிராம் எடையும், 11 அடி உயரமும், 18 அடி நீளமும் கொண்ட ஒரு வெண்கல சிற்பம் (bronze sculpture). நியூயார்க் நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் பார்க்கவிரும்பும் இடங்கள் என்ற பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தப் புகழ்பெற்ற சிற்பம் “வால் ஸ்ட்ரீட் புல்” (Wall Street Bull) எனவும், “பவுலிங் கிரீன் புல்” (Bowling Green Bull) எனவும் அழைக்கப்படுவதுண்டு. அமெரிக்க நியூயார்க் நகரின், மன்ஹாட்டனில் உள்ள நிதி மாவட்டத்தின் பவுலிங் கிரீன் பார்க் (at Bowling Green Park, Financial District of Manhattan, New York City, USA) என்ற இடத்தில்தான், இந்தப் பாயும் காளை சிற்பம் நிறுவப்பட்டுள்ளது. இதனை உருவாக்க இதன் சிற்பி ஆர்ட்டுரோ டி மோடிக்கா $360,000 டாலர்களைச் செலவிட்டார்.
paayum kaalai2
பாயும் காளை நியூயார்க் நகரின் சின்னமாகவும், வால் ஸ்ட்ரீட்டின் சின்னமாகவும் கருதப்படுவதால் வால் ஸ்ட்ரீட் ஐகான் (Wall Street icon), ஃபைனான்சியல் டிஸ்ட்டிரிக்ட் ஐகான், நியூயார்க் ஐகான் என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. முரட்டுக்காளை தோற்றத்துடன் பின்னோக்கிச் சரிந்து, கூர்மையான கொம்புகள் கொண்ட தலையைத் தாழ்த்தி, சீற்றத்துடன் முன்நோக்கிப் பாயத் தயாராக உள்ள காளையின் அமைப்பில் வடிக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பம் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆளுமைத் தன்மையையும், செழிப்பையும், நிதிநிலை முன்னேற்றத்தில் கொண்டுள்ள ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் வால் ஸ்ட்ரீட்டின் பண்பையும் சித்தரிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. உருவில் மிகப் பெரியதாக அமைந்ததால், பல பாகங்களாக செய்யப்பட்டு, அவையாவும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டச் சிற்ப வடிவம் இது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 25 January 2016

சித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல


mutriya noikkaana maruthhuvam4

எந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக சரிசெய்துவிட முடியும். அதுமட்டுமல்ல, அந்நோய் மீண்டும் வராமலே தடுத்துவிடவும் முடியும்.
ஆனால், என் அனுபவத்தில் நோயாளிகளிடம் நான் பார்க்கும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், முதலில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையைப் பார்க்க வேண்டியது, (ஒருவேளை அந்த மருத்துவ முறையில் அந்த நோயை குணமாக்கக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். மாறாக வெறும் நிவாரணம் மட்டும் இருக்கலாம்) இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை எடுப்பர். இதற்குள் நோய் முற்றிவிடும். பிறகு மாற்று மருத்துவம் ஏதாவது செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து சித்த மருத்துவரிடம் வருவர்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, நோய் மிகவும் முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம்.
ஒரு சில நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
“என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே நல்லது” என்ற கட்டுரையில் (இந்த கட்டுரை (http://siragu.com/?p=18084) இந்த இணையதளத்திலேயே உள்ளது) இந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
ஒரு உதாரணத்திற்கு வெண்புள்ளி நோயை வைத்து விளக்குகிறேன்.
வெண்புள்ளி நோயை சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தி விடமுடியும். ஆனால்,
mutriya noikkaana maruthhuvam5
•    நோய் ஆரம்பிக்கும் போதே உதடு, ஆண்குறி போன்ற இடங்களில் தோன்றினால் குணமாவது கடினம்.
mutriya noikkaana maruthhuvam6

•  வெண்படை உள்ள இடத்தில் உள்ள தோல் மட்டுமல்லாமல், அந்த இடங்களில் உள்ள முடிகளும் (Hair) சேர்ந்து வெண்நிறம் அடைந்தால் நோய் குணமாவது கடினம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 24 January 2016

சாதிவெறி அரசியலின் அடுத்த பலி ரோகித் வெமுலா


Student commits suicide
இந்திய ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய அம்சம் அனைத்து இந்தியர்களும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின் கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது. எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த கொடுங்கோலரசு.
பட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும் ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில் நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும் மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில் செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை நடத்தியதும்தான்.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Saturday, 23 January 2016

என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி)


my father2
(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)
என் அப்பாவின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்தால் என் இதயமே அவருக்காக இரத்தம் வடிக்கும். “விதியை மதியால் வெல்லலாம்” என்று வாழ்நாள் முழுவதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் எப்படி இடிந்து போயிருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.
நான் மதிக்கும் சில சிறப்பான பொருட்களை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதில் என் அப்பாவின் இரு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று கருப்பு வெள்ளைப்படம் கொண்ட அவருடைய உயர்நிலைப்பள்ளியின் மாணவர் அடையாள அட்டை. அதில் ஆளைக் கவரும் தோற்றத்தில் அவர் இருக்க மாட்டார், ஆனால் புத்திசாலி என்பது வெளிப்படும் தோற்றத்துடன், கொஞ்சம் கூச்ச சுபாவம் தோற்றம் கொண்டவராக, அக்காலத்தில் பொதுவாக வழக்கில் இருந்த கருப்பு வண்ண சீருடையில் இருப்பார். மற்றொன்று பள்ளி நாட்களில் அவர் எழுதிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதி. கருநீல மையில், அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட பதிவின் இறுதியில் 1972 இல் “டாய்” எழுதியது (By Tai, 1972) என்ற குறிப்பிருக்கும்.
இவையிரண்டையும் நான் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் என் தாத்தா வீட்டிற்குப் போன பொழுது ஒரு புத்தகக் குவியலில் கண்டெடுத்தேன். அவற்றைப் பார்த்த பொழுது நான் எவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன் என்பது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நான் அறிந்தவரை அறுவையான, பலவீனமான மனிதராக, புகை பிடிப்பதும், சீட்டு விளையாடுவதும், சீன சதுரங்கம் விளையாடுவதும், குடிப்பதும் எனப் பொழுதைக் கழிக்கும் என் அப்பாவினுடையவை அவை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்பொழுதாவது புன்னகைக்கும் அவர், என்னை அரவணைத்து முத்தமிட்டதையோ, என்னுடன் பேசி என் இன்ப துன்பங்கள், அச்சம், கவலைகள் என எதிலும் பங்கு கொண்டதையோ நான் அறிந்ததில்லை. என் பள்ளியில் தேர்வுகளில் நான் பெறும் மற்றொரு முதல் மதிப்பெண் மட்டுமே அவருக்கு மகிழ்ச்சியைத்தரும்.

என் அப்பா குடித்திருக்கும்பொழுது அவரை எனக்குப் பிடிக்கும், அப்பொழுதுதான் அவர் அதிகம் பேசுவார். அந்தச் சமயம் அவர் அரசியல், வரலாறு என்று பேசுவதை விரும்புவார். ஒருமுறை குடித்திருந்த பொழுது கவிதை ஒன்றை எழுதினார். அதன் கடைசி இரு வரிகளும் எனக்கு நினைவிருக்கிறது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.