சங்கப்
புலவர்களிலே தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் கபிலர்.
அருளும் அன்பும் உளத்தூய்மையும் வாய்மையும் பாட்டியற்றும் வன்மையும்
பெற்றுத் திகழ்ந்தவர். அறவோராய், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோராய்
விளங்கியவர். சங்கப் புலவர்களால் போற்றிப் புகழப்பட்டவர். பாரியின் உற்ற
நண்பராகத் திகழ்ந்தவர். புறநானூற்றின் எட்டாவது பாடல் இவருடையது.
சேரலாதனைப் போற்றிப் புகழும் பாடல். பாடாண்திணையைச் சார்ந்தது. பாடப்படும்
தலைவனின் புகழும் ஆற்றலும் ஈகையும் அருளும் புகழ்ந்து உரைப்பதே பாடாண்திணை.
அந்த வகையில் அமைந்த பாடலிது.
சேரலாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டு யாரோ ஒரு
புலவர் பாடியிருக்கின்றார் போலும்! அதைக் கேட்ட கபிலர், கதிரவனிடமே
கேட்கின்றார், “கதிரவனே! நீ எப்படி என் மன்னனோடு ஒப்பாவாய்” என்று!.
அதற்கான காரணங்களையும் அடுக்கடுக்காக அடுக்குகின்றார் கபிலர்.
சேரலாதனைப் பிற அரசர்கள் வணங்கிச் செல்வர். ஆனால், சூரியனோ பிற கோள்களின் வழியே செல்கின்றான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment