உதய
கீர்த்திகா… ஒரு சாதாரண நடுத்தர குடும்ப தேனி பெண்ணுக்கு உக்ரைன்
நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான Kharkov
Air Force பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிக்க இடம்
கிடைத்திருக்கிறது. அவரது விண்வெளி கனவுகளும், திறமைகளும், ஆர்வங்களும்
வியப்பூட்டக் கூடியவை. அவருடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப் பற்றி?
உதய கீர்த்திகா: சொந்த
ஊர் தேனி. அப்பா ‘அல்லிநகரம்’ தாமோதரன் சிறுகதை எழுத்தாளர், ஓவியர். அம்மா
அமுதா வழக்கறிஞர் ஒருவரிடம் தட்டச்சராக வேலை பார்க்கிறார். வீட்டுக்கு
நான் ஒரே மகள். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500 க்கு 487
மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் மதிப்பெண். +2 வில் 1030
மதிப்பெண்கள். அறிவியல் பாடத்தில் நூற்றுக்குநூறு. தமிழ்வழிக் கல்விதான்
பயின்றேன். தற்போது உலகின் சிறந்த விண்வெளி கல்வி நிறுவனங்களில் ஒன்றான
மேற்குஉக்ரைன் நாட்டில் உள்ள Kharkov Air Force பல்கலைக்கழகத்தில் விண்வெளி
ஆய்வு தொடர்பான Aerospace engineering என்ற படிப்பில் சேர்ந்திருக்கிறேன்.
விண்வெளி துறையில் ஆர்வம் எப்படி வந்தது?
உதய கீர்த்திகா: நிலவைக்
காட்டி அப்பா கதை சொன்ன காலத்திலேயே, ‘என்னை நிலாவுக்குக்
கூட்டிக்கிட்டுப் போங்கப்பா’-ன்னு அடம்பிடிச்சிருக்கேன். 9-ம்வகுப்புப்
படித்தபோது, எந்தத் துறையைத் தேர்வு செய்தால் என் சுபாவத்துக்கு நன்றாக
இருக்கும் என்று யோசித்தபோது, விண்வெளி ஆராய்ச்சிதான் என்ற முடிவுக்கு
வந்தேன். மாணவர்களுக்கு விண்வெளி தொடர்பாக எங்கே, எந்தப்போட்டி நடந்தாலும்
உடனே என் பெயரைக் கொடுத்து விடுவேன்.
நிலா, வானம், அண்டம், விண்வெளி,
விண்வெளிவீரர் தொடர்பான நூல்களைத் தேடித்தேடிப் படிப்பேன். அவை தொடர்பான
தகவல்கள், துணுக்குகளை குறிப்பு எடுத்துவைத்துக் கொள்வேன். அதுதான் பல
விண்வெளி ஆய்வுப்போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்க உதவியது. +2
க்குப்பிறகு விண்வெளித்துறை சார்ந்த படிப்புதான் படிக்கவேண்டும் என்ற
உறுதியான கனவோடு இருந்தேன். இப்போது அந்தக்கனவு நனவாகியிருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment