எந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப
நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக
சரிசெய்துவிட முடியும். அதுமட்டுமல்ல, அந்நோய் மீண்டும் வராமலே
தடுத்துவிடவும் முடியும்.
ஆனால், என் அனுபவத்தில் நோயாளிகளிடம் நான்
பார்க்கும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், முதலில் ஏதேனும் ஒரு மருத்துவ
முறையைப் பார்க்க வேண்டியது, (ஒருவேளை அந்த மருத்துவ முறையில் அந்த நோயை
குணமாக்கக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். மாறாக வெறும்
நிவாரணம் மட்டும் இருக்கலாம்) இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த
மருத்துவ முறையிலேயே சிகிச்சை எடுப்பர். இதற்குள் நோய் முற்றிவிடும். பிறகு
மாற்று மருத்துவம் ஏதாவது செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து சித்த
மருத்துவரிடம் வருவர்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, நோய் மிகவும் முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம்.
ஒரு சில நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
“என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம்
எடுத்துக் கொள்வதே நல்லது” என்ற கட்டுரையில் (இந்த கட்டுரை
(http://siragu.com/?p=18084) இந்த இணையதளத்திலேயே உள்ளது) இந்த
நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
ஒரு உதாரணத்திற்கு வெண்புள்ளி நோயை வைத்து விளக்குகிறேன்.
வெண்புள்ளி நோயை சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தி விடமுடியும். ஆனால்,
• வெண்படை உள்ள இடத்தில் உள்ள தோல்
மட்டுமல்லாமல், அந்த இடங்களில் உள்ள முடிகளும் (Hair) சேர்ந்து வெண்நிறம்
அடைந்தால் நோய் குணமாவது கடினம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment