இந்திய
ஐக்கிய குடியரசு எவ்வித மதத்தையும் சாராதது. இந்திய சட்டத்தின் முக்கிய
அம்சம் அனைத்து இந்தியர்களும் சமம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால்
அனைத்து அரசுகளும், இதை குப்பையில் தூக்கியெறிந்துதான் கடந்த 60
ஆண்டுகளுக்கும் மேலாக அரசாண்டு வந்திருக்கின்றன. ஆனால் இந்த சட்டமீறலின்
கோரத்தாண்டவம் பா.ஜ.க அரசு பதவியேற்றதிலிருந்து விண்ணைத் தொட்டுவிட்டது.
எப்படியெல்லாம் அரசாளக்கூடாதோ அப்படியெல்லாம் ஆண்டு வருகிறது இந்த
கொடுங்கோலரசு.
பட்ட இடத்திலேயே அடி படுவது போல் மீண்டும்
ஒரு பெரும் துயரம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடந்துள்ளது. ஐதராபாத் நடுவண்
பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆய்வாளர்களை பல்கலைக்கழக நிர்வாகம் அண்மையில்
நீக்கியது. அனைவரும் நடுத்தர குடும்பத்தை அல்லது ஏழைக்குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள். அவர்களது படிப்பும், வாழ்வும் பல்கலைக்கழகம் கொடுக்கும்
மானியத்தில்தான் ஓடிக்கொண்டிருந்தது. அவர்களை நீக்கியதற்கு சரியான காரணம்
கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களின் மீது நடவடிக்கையெடுக்கும்படி மத்திய
அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, மனித வள அமைச்சருக்கு கடிதம்
எழுதியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு, இவர்கள் தேச விரோத
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பதுதான். ஆனால் உண்மையோ வேறு, இவர்களை
நீக்கியதின் காரணம், இவர்கள் அனைவரும் அம்பேத்கர் மாணவர் இயக்கத்தில்
செயல்பட்டுவந்ததும், இந்த அமைப்பு மரண தண்டனைக்கு எதிரான போராட்டங்களை
நடத்தியதும்தான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment