Wednesday, 30 March 2016

சித்த மருத்துவமும் மன நோய்களும்


Psychic1
சித்த மருத்துவத்தில் மன நோய்களுக்கான முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன என்பதை அறிமுகப்படுத்தவே இந்தக் கட்டுரை.
பொதுவாக மன நோயாளிகள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்வரை சரியாக இருப்பார்கள். மருந்தை இடையில் கொஞ்சம் நிறுத்தினாலும் மீண்டும் பிரச்சனைகள் உருவாக ஆரம்பிக்கும்.
Psychic2
அப்படியானால் மன நோயாளிகள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?
இல்லை.

அப்படியானால் ஏன் பெரும்பாலானவர்களுக்கு மன நோய் முற்றிலுமாக குணமாவதில்லை?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 29 March 2016

தமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!


tamilanin1
வெள்ளஅபாயத்தை முன்னரே உணர்ந்து அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடடத்தை வடிவமைத்துள்ளனர் தாமிரபரணி கரையோர பகுதி மக்கள்!
2015 டிசம்பர். சென்னை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பயமுறுத்திவிட்டு கடைசியில் நெல்லையில் மையம் கொண்டிருந்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அங்கு கனமழை தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டன. தாமிரபரணி நதி பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை இருந்ததால், வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் கரைபுரண்டு ஓடிய போதும் அது எங்கும் கரையை உடைக்கவில்லை. நதியோர குடியிருப்புகளை மூழ்கடிக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. இத்தனைக்கும் சென்னையில் பொங்கிய அடையாற்றை விடவும் பலமடங்கு பெரியது தாமிரபரணி. ஓடும் தண்ணீரின் அளவும் மிகஅதிகம். கடந்த 1992-ம் ஆண்டு கடைசியாக தாமிரபரணியில் பெருவெள்ளம் வந்தபோது கூட, இன்றைய சென்னை அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏன்?

தாமிரபரணி நதிக்கரை மக்களின் வெள்ளநீர் மேலாண்மை மற்றும் கட்டிட அறிவியல் பாரம்பரியம் மிக்கது. இன்றளவும் அவர்கள் ஆற்றை சிறப்பாக மேலாண்மை செய்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 18-ம் நூற்றாண்டில் ஒன்பது முறை பெருவெள்ளம் வந்து ஊர்களை அழித்திருக்கிறது.   வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால், தாமிரபரணி நதிக்கரை மக்கள் அந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 28 March 2016

ஆரோக்கிய வாழ்விற்கு வழிகோலும் மத்தியதரைக்கடல் நாடுகளின் உணவுமுறை


arokiya vaazhvirku1
மெடிட்டரேனியன் டயட் (Mediterranean Diet) என்ற பத்திய உணவுமுறை ஒரு ஆரோக்கியமான உணவுமுறை என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுமுறையாகும். இந்த மாதம், மார்ச் 2016, தேசிய ஊட்டச்சத்து மாதம் (March is National Nutrition Month 2016) என்பதால் இந்த உணவுமுறை மீண்டும் இம்மாதம் பரவலாக செய்திகளில் பேசப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பிரிவு பிரசுரிக்கும் “ஹார்வர்ட் ஹார்ட் லெட்டர்”(Harvard Heart Letter – http://www.health.harvard.edu/newsletters/harvard_heart_letter/2016/april) என்ற செய்தி அறிக்கையின் சமீபத்தியப் பதிப்பு (ஏப்ரல் – 2016); மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்பதுடன் நிரந்தர உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஐந்து ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சற்றொப்ப 1,000 அதிக எடையும், உடற்பருமனும் (overweight or obese people) கொண்டவர்கள் பங்குபெற்ற ஆய்வில் மெடிட்டரேனியன் டயட் உணவு முறையுடன், பிற உடல் எடை குறைக்கப் பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை முறையே குறைந்த கொழுப்பு உணவு (low-fat diet), குறைந்த மாவுச்சத்து உணவு (low-carb diet), மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA-American Diabetes Association) பரிந்துரைக்கும் உணவு ஆகிய உணவு முறைகளாகும். ஒரு ஆண்டுக்குப்பிறகு மெடிட்டரேனியன் டயட் உணவு முறையைப் பின்பற்றியவர்கள் 5 முதல் 10 கிலோ வரை எடை குறைந்திருப்பதும், குறைந்த கொழுப்பு உணவு முறையைப் பின்பற்றியவர்களையும் விட அதிக எடை குறைந்தவர்களாக அவர்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

verkadalai8
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்ற வாய்ப்பிருந்தாலும், 30% மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்க உதவும் மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவதை கடைப்பிடிக்கலாம், இதய நோய்களைத்தடுக்க மெடிட்டரேனியன் டயட் உணவு முறை சிறந்தது என்று அந்த அறிக்கையில் அறிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 27 March 2016

மத்திய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுபெற்ற தமிழறிஞர் திரு. இ.கோமதி நாயகம் அவர்களின் நேர்காணல்


gomathi-nayagam7
கேள்வி: உங்களது பூர்வீகம், பிறப்பு, படிப்பு பற்றி கூறுங்கள்?
பதில்: என்னுடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவில். நான் பள்ளிக் கல்வி வரை அங்கு உள்ள கோமதி அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். அதன் பிறகு தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு என்கிற ஒரு திருத்தலத்தில் உள்ள அரசர் மொழிக் கல்லூரியில் இணைந்து நான்காண்டுகள் படித்து வித்வான் பட்டம் பெற்றேன். 1970ல் வித்வான் பட்டத்தை முடித்த நான் சென்னை வந்து அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். 2008 முடிய சென்னை கோடம்பாக்கம், வில்லிவாக்கம், ஆவடிக்குப் பக்கத்திலுள்ள தண்டரை போன்ற பள்ளிகளில் ஏறத்தாழ முப்பத்து எட்டு ஆண்டுகள் நான் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, சென்னை பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையில் கௌரவ விரிவுரையாளராக இரண்டரை ஆண்டுகள் பணியாற்றி, 2011வது ஆண்டுடன் என்னுடைய அரசுப்பணி நிறைவு பெற்றது. இது என்னுடைய கல்வி மற்றும் கல்வி சார்ந்த பணிகளைப் பற்றியது.

சித்தர்கள் காட்டும் வாழ்வியல் கல்வி, திருமந்திரம் ஒரு சிறப்பு நோக்கு என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் நான் பெற்றுள்ளேன். மேலும் 1979ம் ஆண்டு முதல் 2003 வரை தமிழக பாடநூல் கழகத்தினுடைய தமிழ் பாடநூல் உருவாக்கக் குழு, பாடத்திட்டக்குழு மற்றும் அது சார்ந்த பணிகளில் ஈடுபட்டு முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்ப் பாடநூல்களை உருவாக்குகின்ற ஒரு நல்ல வாய்ப்பினை இறைவன் எனக்குத் தந்தான். அதோடுகூட தமிழகக் கல்வித்துறையின் சார்பில் மக்கள்தொகைக் கல்வி, பெண் கல்வி மற்றும் கைவினைக் கல்வி, திறந்தவெளி பள்ளிக் கல்வி, வயது வந்தோர் கல்வி இதுபோன்ற பல்வேறு கல்வி நிலையில் பாடநூல்கள், பயிற்சி நூல்களை உருவாக்குகின்ற பணி தமிழகமெங்கும் தொடக்கப்பள்ளி முதல் ஆசிரியர் கல்வி வரை ஆசிரியர் பெருமக்களுக்கு பணியிடைப் பயிற்சி நடத்துகின்ற ஒரு வாய்ப்பு, B.Ed பயிற்சி பெறுகின்ற கல்லூரிகளிலே சிறப்புப் பயிற்சி கொடுக்கின்ற, சிறப்பு சொற்பொழிவாற்றுகின்ற வாய்ப்பு இவற்றையெல்லாம் நான் செய்தேன். இன்றும் இயன்ற அளவிற்கு செய்துகொண்டிருக்கின்றேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 23 March 2016

தன்னம்பிக்கை தாய்


thannambikkai thaai
19 வயதான ராம்நாத் down syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றாலும்,   பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவிகிதம் மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 72 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்று தன்னம்பிக்கையின் அடையாளமாக  தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்து வருகிறார்.  அவரை சந்திப்பதற்காக ராம்நாத் வசிக்கும் சென்னை மந்தவெளி இல்லம் சென்ற போது ஆங்கிலத்தில் நம்மை வரவேற்று நலம் விசாரிக்கிறார்.  முதலில் ராம்நாத்தின் அம்மா உஷா சுப்ரமணியத்திடம் பேசினோம்.
“1996ஆம் ஆண்டு ராம்நாத் பிறந்தவுடன் அவனிடம் உள்ள குறைபாட்டை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம். என் கணவரின் மன உறுதியாலும்,  இரு வீட்டாரின் அன்பினாலும், பிரார்த்தனையினாலும், ஆதரவினாலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு படிப்படியாக பல்வேறு கடின முயற்சி அதாவது பிசியோதரபி மற்றும் குரல் வளை பயிற்சியின் காரணமாக இன்று அவனுடைய இந்தக் கல்வி வளர்ச்சி என்பது சாத்தியமாகி இருக்கிறது.
கேள்வி: எப்போது பள்ளியில் சேர்த்தீர்கள்?

பதில்: “8 வயதில் பள்ளியில் சேர்த்தோம். அவன் படித்த S.I.E.T Dyslexia Center-ல் உள்ள ஆசிரியர்களின் அன்பும் விடாமுயற்சியும் அவனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமாகும்.   குறிப்பாக வீட்டில் வந்து பாடம் சொல்லித்தரும் லலிதாராமசாமியின் பங்கு இன்றியமையாதது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 22 March 2016

நியாயத்திற்குத் துணையாகும் நெருப்பு


niyaayam fi
தமிழ்க் காப்பியங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றாலும், அவற்றிற்குள் ஒரு பொதுத்தன்மை காணப்பெறுகின்றது. காப்பியப் படைப்பாளர்கள் தம் காப்பியங்களைத் ஒரு பொது மரபிற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். ஒற்றை மனிதராக நியாயத்திற்காகப் போராடும்போது அவர்களுக்கு யாரும் துணையில்லாதபோது நெருப்பு துணைசெய்வது என்பது தமிழகக் காப்பியங்களில் காணப்பெறும் பொதுமரபாக உள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையைத் தீக்கொளுவச் செய்கின்றாள். கம்பராமாயணத்தில் கம்பர் அனுமன் வாயிலாக இலங்கையில் தீப்பரவச்செய்கின்றார். இரண்டு காப்பியங்களில் தனிமனிதர்கள் நியாயத்திற்காகப் போராடுகிறார்கள். இவர்களின் போராட்டம் வெற்றி பெற நெருப்பு உதவுகின்றது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி நெருப்பினை உருவாக்குகிறாள். இராமாயணத்தில் அனுமன் தன் வாலில் வைத்த நெருப்பை இலங்கை முழுவதும் பரப்புகிறான். இரண்டு நெருப்புகளுமே உருவாக்கப்பட்டவைதான். ஒரு வேறுபாடு உண்டு. கண்ணகி தானே உருவாக்கிய நெருப்பு மதுரையை அழிக்கிறது. அனுமனை அழிக்க வைத்த நெருப்பு வைத்தவர்களையே சுடுகின்றது. இவ்விரு காப்பியங்களில் காணப்படும் தீப்பரவல் பற்றிய செய்திகளை ஒப்பிட்டு காப்பிய ஆசிரியர்களின் பொது முடிவுகளை அறிந்து கொள்ள இக்கட்டுரை முனைகின்றது.
கண்ணகி உருவாக்கிய நெருப்பு:

niyaayam1
வானக்கடவுளரும் மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 21 March 2016

இந்தியாவில் திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு (Marital Rape ) -ஒரு பார்வை


thirumanaththil2

அண்மையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மேனகா காந்தி அவர்கள் இந்தியாவைப் பொருத்தவரை திருமணத்தில் நடைபெறும் பாலியல் வல்லுறவு(Marital Rape) சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்பட மாட்டாது என்று அறிவித்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது புனிதமாகப் பார்க்கப்படுவதாலும், மதங்களும், சமூகக் கட்டமைப்பும் பெண்கள் என்பவர்கள் ஆணின் உடைமை என்பதை அங்கீகரிக்கும் காரணத்தினாலும் இந்த நாட்டில் திருமண உறவில் பெண் வல்லுறவு செய்யப்பட்டால் அது தவறு இல்லை என்று சட்டம் சொல்கின்றது.  இது மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாம் ஏற்க மறுக்கின்றோம். இந்தியாவில் திருமணத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை, தெரியாத பிற ஆண்களிடம் வன்புணர்விற்கு ஆளாகும் பெண்களை விட 40 மடங்கு அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தரும் தகவல் என்று  2014-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 -The Criminal Law (Amendment )Act 2013- இல் “15 வயதிற்கு உட்பட்டவராக மனைவி இல்லாத பட்சத்தில் கணவன் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தால் அது குற்றம் இல்லை.” என்று கூறுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.