மெடிட்டரேனியன்
டயட் (Mediterranean Diet) என்ற பத்திய உணவுமுறை ஒரு ஆரோக்கியமான உணவுமுறை
என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உணவுமுறையாகும். இந்த மாதம்,
மார்ச் 2016, தேசிய ஊட்டச்சத்து மாதம் (March is National Nutrition Month
2016) என்பதால் இந்த உணவுமுறை மீண்டும் இம்மாதம் பரவலாக செய்திகளில்
பேசப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்
மருத்துவப்பிரிவு பிரசுரிக்கும் “ஹார்வர்ட் ஹார்ட் லெட்டர்”(Harvard Heart
Letter –
http://www.health.harvard.edu/newsletters/harvard_heart_letter/2016/april)
என்ற செய்தி அறிக்கையின் சமீபத்தியப் பதிப்பு (ஏப்ரல் – 2016);
மெடிட்டரேனியன் டயட் உணவுமுறை இதயநோய் வருவதைத் தடுக்க உதவும் என்பதுடன்
நிரந்தர உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஐந்து
ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
சற்றொப்ப 1,000 அதிக எடையும்,
உடற்பருமனும் (overweight or obese people) கொண்டவர்கள் பங்குபெற்ற ஆய்வில்
மெடிட்டரேனியன் டயட் உணவு முறையுடன், பிற உடல் எடை குறைக்கப்
பரிந்துரைக்கப்படும் உணவு முறைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவை
முறையே குறைந்த கொழுப்பு உணவு (low-fat diet), குறைந்த மாவுச்சத்து உணவு
(low-carb diet), மற்றும் அமெரிக்க நீரிழிவு சங்கம் (ADA-American Diabetes
Association) பரிந்துரைக்கும் உணவு ஆகிய உணவு முறைகளாகும். ஒரு
ஆண்டுக்குப்பிறகு மெடிட்டரேனியன் டயட் உணவு முறையைப் பின்பற்றியவர்கள் 5
முதல் 10 கிலோ வரை எடை குறைந்திருப்பதும், குறைந்த கொழுப்பு உணவு முறையைப்
பின்பற்றியவர்களையும் விட அதிக எடை குறைந்தவர்களாக அவர்கள் இருப்பதும்
தெரியவந்துள்ளது.
உடல்
எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்குப் பலவகை உணவுமுறைகளைப் பின்பற்ற
வாய்ப்பிருந்தாலும், 30% மாரடைப்பையும் பக்கவாதத்தையும் தடுக்க உதவும்
மெடிட்டரேனியன் டயட் முறையைப் பின்பற்றுவதை கடைப்பிடிக்கலாம், இதய
நோய்களைத்தடுக்க மெடிட்டரேனியன் டயட் உணவு முறை சிறந்தது என்று அந்த
அறிக்கையில் அறிவுரையும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment