அண்மையில்
மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. மேனகா
காந்தி அவர்கள் இந்தியாவைப் பொருத்தவரை திருமணத்தில் நடைபெறும் பாலியல்
வல்லுறவு(Marital Rape) சட்டப்படி குற்றமாகப் பார்க்கப்பட மாட்டாது என்று
அறிவித்தது, மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை திருமணம் என்பது
புனிதமாகப் பார்க்கப்படுவதாலும், மதங்களும், சமூகக் கட்டமைப்பும் பெண்கள்
என்பவர்கள் ஆணின் உடைமை என்பதை அங்கீகரிக்கும் காரணத்தினாலும் இந்த
நாட்டில் திருமண உறவில் பெண் வல்லுறவு செய்யப்பட்டால் அது தவறு இல்லை என்று
சட்டம் சொல்கின்றது. இது மிகப் பெரிய மனித உரிமை மீறல் என்பதை நாம் ஏற்க
மறுக்கின்றோம். இந்தியாவில் திருமணத்தில் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகும்
பெண்களின் எண்ணிக்கை, தெரியாத பிற ஆண்களிடம் வன்புணர்விற்கு ஆளாகும்
பெண்களை விட 40 மடங்கு அதிகம் என்பதுதான் அதிர்ச்சித் தரும் தகவல் என்று
2014-இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.
குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013 -The
Criminal Law (Amendment )Act 2013- இல் “15 வயதிற்கு உட்பட்டவராக மனைவி
இல்லாத பட்சத்தில் கணவன் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்தால் அது
குற்றம் இல்லை.” என்று கூறுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment