19
வயதான ராம்நாத் down syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்
என்றாலும், பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவிகிதம் மதிப்பெண்களும், பிளஸ்
2 தேர்வில் 72 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்று தன்னம்பிக்கையின்
அடையாளமாக தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்து வருகிறார்.
அவரை சந்திப்பதற்காக ராம்நாத் வசிக்கும் சென்னை மந்தவெளி இல்லம் சென்ற
போது ஆங்கிலத்தில் நம்மை வரவேற்று நலம் விசாரிக்கிறார். முதலில்
ராம்நாத்தின் அம்மா உஷா சுப்ரமணியத்திடம் பேசினோம்.
“1996ஆம் ஆண்டு ராம்நாத் பிறந்தவுடன்
அவனிடம் உள்ள குறைபாட்டை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம். என் கணவரின் மன
உறுதியாலும், இரு வீட்டாரின் அன்பினாலும், பிரார்த்தனையினாலும்,
ஆதரவினாலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு படிப்படியாக பல்வேறு கடின முயற்சி
அதாவது பிசியோதரபி மற்றும் குரல் வளை பயிற்சியின் காரணமாக இன்று அவனுடைய
இந்தக் கல்வி வளர்ச்சி என்பது சாத்தியமாகி இருக்கிறது.
கேள்வி: எப்போது பள்ளியில் சேர்த்தீர்கள்?
பதில்: “8 வயதில்
பள்ளியில் சேர்த்தோம். அவன் படித்த S.I.E.T Dyslexia Center-ல் உள்ள
ஆசிரியர்களின் அன்பும் விடாமுயற்சியும் அவனுக்கு வாழ்க்கையில் மிக
முக்கியமாகும். குறிப்பாக வீட்டில் வந்து பாடம் சொல்லித்தரும்
லலிதாராமசாமியின் பங்கு இன்றியமையாதது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment