தமிழ்க்
காப்பியங்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பெற்றாலும், அவற்றிற்குள் ஒரு
பொதுத்தன்மை காணப்பெறுகின்றது. காப்பியப் படைப்பாளர்கள் தம் காப்பியங்களைத்
ஒரு பொது மரபிற்குள் கொண்டு வந்துவிடுகின்றனர். ஒற்றை மனிதராக
நியாயத்திற்காகப் போராடும்போது அவர்களுக்கு யாரும் துணையில்லாதபோது
நெருப்பு துணைசெய்வது என்பது தமிழகக் காப்பியங்களில் காணப்பெறும் பொதுமரபாக
உள்ளது. சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையைத் தீக்கொளுவச் செய்கின்றாள்.
கம்பராமாயணத்தில் கம்பர் அனுமன் வாயிலாக இலங்கையில் தீப்பரவச்செய்கின்றார்.
இரண்டு காப்பியங்களில் தனிமனிதர்கள் நியாயத்திற்காகப் போராடுகிறார்கள்.
இவர்களின் போராட்டம் வெற்றி பெற நெருப்பு உதவுகின்றது.
சிலப்பதிகாரத்தில் கண்ணகி நெருப்பினை
உருவாக்குகிறாள். இராமாயணத்தில் அனுமன் தன் வாலில் வைத்த நெருப்பை இலங்கை
முழுவதும் பரப்புகிறான். இரண்டு நெருப்புகளுமே உருவாக்கப்பட்டவைதான். ஒரு
வேறுபாடு உண்டு. கண்ணகி தானே உருவாக்கிய நெருப்பு மதுரையை அழிக்கிறது.
அனுமனை அழிக்க வைத்த நெருப்பு வைத்தவர்களையே சுடுகின்றது. இவ்விரு
காப்பியங்களில் காணப்படும் தீப்பரவல் பற்றிய செய்திகளை ஒப்பிட்டு காப்பிய
ஆசிரியர்களின் பொது முடிவுகளை அறிந்து கொள்ள இக்கட்டுரை முனைகின்றது.
கண்ணகி உருவாக்கிய நெருப்பு:
வானக்கடவுளரும் மாதவரும் கேட்டீமின்
யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
யானமர் காதலன் தன்னைத் தவறு இழைத்த
கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment