Thursday, 29 December 2016

பாவேந்தரின் பகுத்தறிவுப் பார்வையில் திருவாரூர்த் தேர்த்திருவிழா


siragu-bharathidasan1

பாரதிதாசன் கவிதைகளில் தமிழுணர்வும்,  நகைச்சுவை உணர்ச்சியும், புரட்சிக் கருத்துகளும் பரவிக்கிடக்கும். அவரின் சிறிய கவிதை முதல் காப்பியம் வரை இப்பொதுவியல்பு காணப்படும். அவரின் ஒரு நெடுங்கவிதை திருவாரூர் தேர் என்பதாகும். இது அருள்சுடர் பதிப்பகம் வெளியிட்ட பாரதிதாசன் கவிதைகள்  என்ற தலைப்புடைய முழுத்  தொகுப்பில், குயில் பாடல்கள் என்ற பகுதியில் உள்ளது.  இக்கவிதையில் நகையுணர்வும், புரட்சிக் கருத்துகளும் அமைந்து சிறக்கின்றன. எல்லா இடத்திலும் இறைவன் இருக்கிறான் என்றால் எதற்காக ஓரிடத்தில் எல்லா மக்களும் சென்று நெருக்கடியை உண்டு செய்யவேண்டும் என்ற அடிப்படைக் கேள்வியை முன்வைக்கும் நிலையில் இக்கவிதை வரையப்பெற்றுள்ளது.

திருவாரூரில் அருள்மிகு தியாகராசர் மூலக்கடவுளாக விளங்குகிறார். அவருக்குத் தேர்த் திருவிழா நடைபெறும். அத்தேர்த்திருவிழாவில் மக்கள் அதிக அளவில் கூடுவர். இத்தேர் ஆழித்தேர் என்று அழைக்கப்பெறும் அளவில் மிகப் பெரிதானது. எண்கோணத்தில் இருபது பட்டைகள் உடையதாய் முன்னூற்று ஐம்பது டன் எடை கொண்டதாக இத்தேர் விளங்குகிறது. பாரதிதாசன் காலத்தில் இத்தேர்த்திருவிழா நடைபெற்றுள்ளது. அத்தேர்த் திருவிழாவைக் காண அக்காலத்தில் புகைவண்டியில்தான் செல்லவேண்டும். இதற்காக மக்கள் புகைவண்டியில் பதிவுசெய்ய முண்டியடித்தனர். தேருக்கு முதல் நாள் புகைவண்டியில் ஏறுவதற்கு இயலாத நிலை. மக்கள் கூட்டம் கூட்டமாக திருவாரூர் தேர் காண வந்த காட்சியை, அவர்கள் அக்கூட்ட நெரிசலில் சிக்கித்தவிப்பதை பாடமாக படிப்பவர்முன் சித்தரித்துக் காட்டுகிறார் பாரதிதாசன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

வாசிப்பு


siragu-ilakkiyam1

எழுத்தறிவை அடைவதன் அடிப்படைக் காரணம் வாசிப்பு. வாசிப்பிலிருந்தே அறிதலென்னும் விருட்சத்தின் பெரும்பாலான கிளைகள் கிளைக்கின்றன. அறிதல் வாழ்வை செறிவுள்ளதாக்குகிறது. அறிதல்கள் தடைசெய்யப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை உண்மையில் மனிதன் வாழும் எல்லையைச் சுருக்குகிறது, அனுபவங்களை அடைவதிலிருந்து விலக்குகிறது. அனுபவங்களின் விரிவே வாழ்க்கையின் விரிவு.


வாசிப்பிற்குத் தேவையான முக்கியத்துவத்தை சமூகம் அளிக்கிறதா? முறைப்பட்ட கல்வியைக் கடந்த வாசிப்பை சமூகம் ஊக்குவிக்கிறதா? இல்லை என்றே தோன்றுகிறது – முறைப்பட்டக் கல்வியில் அளிக்கப்படும் வாசிப்பு நுண்தகவல்களை மிக அபூர்வமாகவே அளிக்கிறது. வாசிப்பை ஊக்குவிக்கும் எந்தக் காரணிகளும், இந்தியாவில் பெரும்பாலான கல்வித்துறைகளில் இல்லை. எனவே வாசிப்பை இயல்பாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. இதையும் கடந்து, சுய விருப்பங்களின் மூலம் வாசிப்பவர்களும் பெரும்பாலும் பொழுதுபோக்கு வாசிப்புகளையை நாடுகிறார்கள், அல்லது வெற்று உணர்ச்சிகளைத் தூண்டும் வாசிப்புகள். காட்சி ஊடகங்கள் பெருகிவிட்ட இக்காலத்தில், பொழுது போக்குகளுக்குக் குறைவில்லை. காட்சி ஊடகங்களின் பரவலாக்கத்துக்கு முந்தைய காலகட்டத்தில் பொழுதுபோக்குக்காக வாசிப்பது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பொழுதுபோக்குகளுக்கு குறைவில்லாத இந்தக் காலத்திலும் வெறும் பொழுதுபோக்கு வாசிப்பு பரவலாக இருப்பது ஒரு முரணாகவே தெரிகிறது. ஆனாலும் வாசிப்பு நிகழ்கிறது என்பது ஊக்கமளிக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 27 December 2016

அடித்தட்டு மக்களும், பணமில்லா வர்த்தகமும்


siragu-atm-bank3

கடந்த நாற்பத்தைந்து நாட்களாக மக்கள் தங்கள் பணத்திற்காக அலையும் ஒரு அவலத்தை நாம் எல்லோரும் பார்த்தும், அனுபவித்துக் கொண்டும்தான் இருக்கிறோம். மத்திய பா,ஜ.க. அரசின் முன்யோசனையின்றி செய்த இந்த செயலால் மிகவும் பாதிப்புள்ளவர்கள் அடித்தட்டு மக்கள் தான்.!


திடீரென்று ஒருநாள் இரவு, ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்களை மதிப்பிழக்கச் செய்தபோது மக்கள் சற்று அதிகமாவே அதிர்ச்சிக்குள்ளாகினர் என்பது மறுக்க முடியாத உண்மை. பின்பு கருப்புப்பண ஒழிப்பிற்காகத் (கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு விட்டதா என்பது வேறு செய்தி…!) தான் இந்த நடவடிக்கை என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொண்டனர். முதலில் இரண்டு நாட்கள் என்றும், பிறகு மூன்று வாரங்கள் ஆகி, அதற்குப் பிறகு ஐம்பது நாட்கள் என்று சொல்லப்பட்டு, இன்றுவரை மக்கள் படும் அவதிக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 26 December 2016

துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை


siragu-cance-medicine2

அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் (2,00,000) ஆண்களுக்கு ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கான’ (Prostate cancer/Prostatic carcinoma symptoms) அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 46,000 புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்கள் கண்டறியப்படுகிறார்கள், அவர்களில் 11,000 பேர் இந்த நோயினால் மரணத்தை எதிர்கொள்கிறார்கள். இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில், விந்தணுக்களை (sperm) கடத்துவதற்குத் தேவையான ‘விந்துநீரைச்’ (seminal fluid) சுரப்பதில் ஆண்மைச்சுரப்பி என அழைக்கப்படும் புரோஸ்டேட் சுரப்பி (prostate gland) பங்களிக்கிறது.


பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நிரந்தரமாக எதிர் கொள்வது ஆண்மைக்குறைவு எனப்படும் ஆண்குறியின் விறைப்புத் தன்மை குறைபாட்டினால் (erectile dysfunction) ஏற்படும் செயலிழப்பின் காரணமாக இல்லறவாழ்வு பாதிக்கப்படுவதும்; சிறுநீர்க்கழிப்பதில் (urination) கட்டுப்பாடின்மை (incontinence) என்ற நிலை ஏற்படுவதுமாகும். இரவில் அடிக்கடி சிறுநீர்க்கழிக்கும் தேவையால் உறக்கம் கெடுவது, சிறுநீரகப்பையில் சேகரிக்கப்பட்ட சிறுநீரை முழுமையாக வெளியேற்றப்பட முடியாமல் போதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிவிடுதல், சிற்சில சமயம் சிறுநீரில் உதிரப்போக்கு, சிறுநீர் கழிக்கும் பொழுது வலி எனப் பல தொல்லைகளை அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக நோயாளிகள் எதிர் கொள்வார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 20 December 2016

கவிதைச்சோலை (நூல்களைப் படி!, ஒளிவீசாத தீபங்கள்!)


நூல்களைப் படி!

-இல.பிரகாசம்
siragu-reading-books1


சிந்திக்க நல்ல நூல்களைப் படி
சிறந்தநற் பண்பினை ஓதுவாய் உள்ளபடி
பழமையை சீர்தூக்கி புதிய சிந்தனைப்
புரட்சியை செய்வாய் உன்றன் நற்
சமுதாயம் உயர்ந்திடும் படி!- இலக்கியக்
காடென இவ்வுலகம் விரிந்துள்ளதை இப்போ
துணர்ந்து சீரிய எழுத்துக்களால் உழைப்பை

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=24697


Monday, 19 December 2016

கவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்


siragu-kannadasan1

“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார். அவற்றால் அவர் கொண்ட விருப்பு வெறுப்புகளும் ஏராளம். அவைகளை தன் சுயசரிதை நூல்களான மனவாசம் மற்றும் வனவாசத்தில் உரைநடையாக பதிவு செய்திருந்த போதிலும் தன் உணாச்சிகளை வீரியமிக்க கவிதைகளால் எழுதி எழுதித் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார்.
தன் முரண்பாட்டை வெளிப்படுத்திய தன்னுணர்ச்சிக் கவிஞர்:
“மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்”

என்று தான் கொண்ட கருத்து முரண்பாடுகளின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறார். தனது தெய்வமிருகத் தன்மையைத் தன் வாழ்நாளில் போற்றியவர்களை உடன் தூற்றியும் தூற்றியவர்களை மறுநிகழ்வில் போற்றியும் வந்துள்ளதனை அவரே பதிவிடுகிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 18 December 2016

திருமணமாகாத தாய் – குழந்தையின் இயற்கை பாதுகாவலராக இருக்க முடியுமா?


siragu-natural-guardian5

ஒரு குழந்தையை பத்து மாதம் கருவில் சுமந்து, பெற்று, கண்ணும் கருத்தும் கொண்டு வளர்க்கும் தாய்தான் ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலர் (natural guardian) என்பது தான் சரியாக இருக்க முடியும். ஆனால் இந்தியா போன்ற குடும்ப அமைப்பும், ஆண் ஆதிக்கமும் கொண்ட நாட்டில் அத்தகைய பரந்த நோக்கு மக்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஒரு பெண் திருமணம் ஆகாமல் தாய் ஆகும் நிலையில், அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்பதை வெளியிட்டே தீர வேண்டும், அந்த நபர் தான் குழந்தையின் முதன்மை பாதுகாவலர் என்ற நிலையே இருந்து வந்தது. இந்த நிலையினை மாற்ற, இந்திய உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மிகச் சிறந்த தீர்ப்பினை வழங்கியது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.