Wednesday, 26 July 2017

விதியின் விளையாட்டு(சிறுகதை)


Siragu kanavanaal1
சிலருடைய வாழ்க்கை முரண் நிறைந்தது. நகை முறன் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாய் இருக்கும். என்னுடைய அக்கா பெண் கிருத்திகாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியைச் சொன்னால் உங்களுக்கு நன்றாக விளங்கும்.


கிருத்திகா மிகவும் நல்ல பெண். படிப்பில் கெட்டிக்காரி. நல்ல அழகும், அழகுக்கேற்ற படிப்பும் படிப்புக்கேற்ற குணமும் உடையவள். நாவல்களில் வர்ணனை வரும் பொற்சிலை போல் இருப்பாள். அது மாதிரி மிகவும் அழகாயிருப்பாள்.தாமரையை விட மென்மையானவள் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். சாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து திலீப்பைக் கல்யாணம் செய்ஒரு வருடம்தான் ஆகிவிட்டது. கணவன் கொடுமை தாங்க முடியாமல் கிருத்திகா குடும்பம் என்னும் வட்டத்தில் அடங்காமல் பிறந்த வீட்டுக்கு வந்துவிட்டாள். திரும்பிப் போக மாட்டேன் என்று திட்ட வட்டமாக சொல்லி இருக்காள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 25 July 2017

திருமுருகாற்றுப்படையின் அமைப்பு


Siragu tamil2

தமிழ் நிலை பெற்ற மதுரையில் மூன்றாம் சங்கமான கடைச் சங்கம் அமைந்திருந்தது. இச்சங்கத்தில் புலவர்கள் பலர் இருந்துத் தமிழ் வளர்த்தனர். இக்கடைச் சங்ககாலத்து நூல்களுள் தற்போது கிடைத்திருப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சங்க இலக்கியங்கள் என்கிறோம். இந்தச் சங்க நூல்கள் செம்மொழிக் கால நூல்கள் ஆகும். செம்மொழிப் பண்புடைய நூல்கள் ஆகும். செம்மொழி வயப்பட்டதான இந்தப் பதினெட்டு நூல்களில் திருமுருகாற்றுப்படையும் ஒன்று.


பத்துப்பாட்டு நூல்களில் முதன்மையானதாகவும், இறைவணக்கப் பாடலாகவும் அமைந்திருப்பது திருமுருகாற்றுப்படையாகும். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் ஆவார். எட்டுத்தொகை நூல்களான குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் முருகன் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. முருகனை தெய்வமாக வணங்கி அவனுக்கு வெறியாட்டு என்னும் வணக்கம் செய்யும் முறை சங்க காலத்தில் இருந்துள்ளது. பரிபாடல் என்னும் எட்டுத்தொகை நூலில் செவ்வேள் பற்றிப் பாடப் பெற்ற எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. இந்த எட்டுப் பாடல்களில் முருகனின் பிறப்பு, அவனின் வெற்றிச் சிறப்பு போன்ற பல செய்திகள் எடுத்துரைக்கப் பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனை வழிபடும் வழிபாடு மெல்ல வளர்ந்து வந்துள்ளதை இந்த வளர்ச்சி எடுத்துக்காட்டுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 24 July 2017

செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள்


Siragu sevvandhi2
பழமைபேசி என்னும் எழுத்தாளருக்குக் கிடைத்த கொழுகொம்பு கதைசொல்வது. பழமைபேசியின்  மொழியையே கடன் வாங்கி இதை விவரித்தால்… காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம்.  உயிர்த்தோம்; இருந்தோம்; மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை கடைபிடிக்க உதவும் கொழுகொம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்றால், பழமைபேசிக்கு அது அவரது எழுத்து. அதை அவர் திறம்பட செய்துள்ளதற்குச் சான்று அவரது ‘செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு. எழுதுவதே அவருக்கான தொடுப்பு. செவ்வந்தி பழமைபேசியின் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு.

அந்தியூர் பழமைபேசியின் “செவ்வந்தி” சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளைப் படிப்பவர்கள் எவரும் அவருக்குச் சற்றும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால், அவர் ஒரு அமெரிக்கத் தமிழர் என்பதையே நம்ப மாட்டார்கள். கொங்குதமிழ் கொஞ்சுகிறது அவரது கதைகளில். வட்டார பேச்சு வழக்கு வனப்புடன் ஆட்சி செய்கிறது அவரது வரிகளில். அவரது கதை மாந்தர்கள் யாவரும் அவர் நேரில் சந்தித்த ஏதோ ஒருவரின் ஆளுமையின் தாக்கம் என்பது  நமக்குத் தெளிவாகப் புரிவதால், அவர் எழுத்தின் வழி நாமும் கொங்குமண்டலத்தின் அழகிய அமைதியான வயல் வரப்புகளிலும், ஏரிக்கரையிலும், சிற்றூர் வீதிகளிலும் மண்வாசனையை நுகர்ந்து கொண்டே அவர் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டே நடக்கும் உணர்வைப் பெறுவோம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 21 July 2017

வாழிய எம்தமிழ்ச் சமுதாயம் (கவிதை)


tamil-mozhi-fi
வாழிய வாழியவே! –தமிழ்மக்கள்
நீடூழி வாழிய வாழியவே!

சீராளும் புகழ்வைய மீதிலே –தமிழ்ச்
சீரர்பெற்று வாழிய வாழியவே!
காவிரிப் பொய்கை புகழ்போல –தமிழ்
காக்கும் அடியோர் நல்புகழ் வாழியவே!
(வாழிய வாழியவே)
திராவிட தேசிய கீத மெங்கும்
பொங்கொலி சங்க நாதத்தோடு –எங்கும்
மங்கல நாதமாக எங்குமிசைத் திடுகவே!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/

Thursday, 20 July 2017

மோனா(சிறுகதை)


Siragu mona2
மோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ஒன்றிரெண்டு வார்த்தைகள் மழலையாகப் பேசுவாள். எதையாவது பிடித்துக் கொண்டு எழுந்துநிற்க இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறாள். வீட்டின் தலைவாசல் கதவை யாராவது திறந்துவிட்டால் போதும். வேகமாகத் தவழ்ந்து வெளியேசெல்ல முற்படுவாள். அம்மாவிட மாட்டார். அவளைத் தூக்கி உள்ளே விட்டுவிட்டு கதவைச் சாத்திவிடுவார். மாலை வேளைகளில் அப்பா மோனாவைத் தூக்கிக்கொண்டு கடைவீதிக்குப் போவார். கண்ணில் தென்படுகிற ஒவ்வொன்றையும் மோனா வேடிக்கை பார்த்தபடி வருவாள். வீட்டிற்கு வெளியே ஒரு சுவராசியமான உலகம் இருப்பது அவளுக்குப் புரிந்தது.


மோனாவிற்கு அவள் வீட்டில் மிகவும் பிடித்தமான இடம் பால்கனி. விசாலமான போர்டிகோவின் மேல் அமைந்த பெரியபால்கனி அது. மோனா எட்டிப்பார்க்கும் அளவில் அமைந்த குட்டையான கைப்பிடிச்சுவர். பாதுகாப்பிற்குக் கம்பிஅழிகள். அந்தக் கம்பிஅழிகளோடுவீட்டின் முகப்பில் இருக்கும் மாமரத்தின் கிளைகள் உரசிக் கொண்டிருக்கும். பெரும்பாலான சமயங்களில் அம்மா அங்கிருந்தபடிதான் மோனாவிற்கு உணவு தருவார். ஒரு நண்பகல் வேளை. பால்கனியில் அமர்ந்தபடி அம்மா மோனாவிற்கு சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது மோனா மரத்தைக் காட்டி ஏதோ சொன்னாள். அவள் சொன்னதை அம்மா சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவள் மாங்காய்களைக் கைகாட்டுவதாக எண்ணிக்கொண்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 19 July 2017

தகர்க்கப்படும் தமிழக மாணவர்களின் மருத்துவ இலக்குகள்

Siragu-state-govt3
மத்திய பா.ச.க அரசின் இந்த நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு, இலக்குகள் தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. நாட்டிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளைப் பெற்றிருப்பதும், அதிக திறமையான மருத்துவ மாணவர்களைக் கொடுப்பதும் நம் மாநிலமே. அப்படி இருக்கையில், 2017 ஆம் ஆண்டான இவ்வாண்டு கடைசி இடத்திற்கு சென்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீட் தேர்வு தான்.!

பொதுத்தேர்வு தேவையில்லாத ஒன்று என்பது தான் நம் நிலைப்பாடு. இதன் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிப்படைவார்கள், மேலும் சமூகநீதிக்கு எதிரான, அதாவது இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு செயல் தான் இந்த பொதுத்தேர்வு என்ற நீட் தேர்வு. பொதுத்தேர்வு என்ற போர்வையில், கேள்வித்தாள்கள் மாநிலத்திற்கு மாநிலம், குறிப்பாக பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் மாறுப்பட்டிருந்தன. கடினமான கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. மறுத்தேர்வு வேண்டும் என்று கேட்டிருந்தும், அது உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மாநில அரசு கொண்டுவந்த, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடமும் கொடுக்கப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 17 July 2017

தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசே – பேரவையின் தமிழ் விழா 2017


Siragu fetna1
 கொட்டு முரசே, தமிழோங்கிச் சிறக்குதென்று கொட்டு முரசேயென பெருமுரசு முழங்கவும், தவில், நாகசுரமுள்ளிட்ட இசைக்கருவிகள் ஒலிக்கவும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் முப்பதாவது ஆண்டு விழா முதன் முறையாக மினசோட்டா மாகாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. முத்தமிழான “இயல், இசை, நாடகத்தையும்” போற்றும் வகையில் இவ்வாண்டு விழா அமைந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தோடும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க நாட்டுப்பண்ணும் இசைக்க மின்னசோட்டாவின் மினியாபொலிசு நகரில் விழா எழுச்சியுடன் தொடங்கியது. அதனையடுத்து, மங்கள பறை, தவில் இசையினை மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த நுண்ணிசைக் கருவி மாணவர்கள், தத்தம் ஆசான்களான தவில் கலைஞர்  சிலம்பரசன் கசேந்திரன், நாதசுரக்கலைஞர் இராமச்சந்திரன், வெங்கடசாமி ஆகியோருடன் இணைந்து அரங்கேற்றம் செய்தனர். நிமிர்வு பறையிசைக் குழுவின் பறையிசைக் கலைஞர் சக்தி பறையிசையை அதிரவிட, சிலம்பம், கரகாட்டம் உள்ளிட்ட தமிழர் மரபுக் கலைகள் விழா மேடையை அலங்கரித்தன.
Siragu fetna4
நெஞ்சக்களிப்பினில் கூத்தைச் சேர்க்கும் கனற் பொருளே, ஆழ்நீரில் வெளிப்பட எழும் கதிரேயென்கிற தமிழ்ப் போற்றுதலுடனான திருக்குறள் மறையோதலைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் 
மேடையேறி பெருமுரசை அடித்து நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

Siragu fetna9

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.