Monday, 30 September 2019

பள்ளிகளின் ஊடே ஒரு பயணம்


siragu NIRMALA BOOK COVER
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் மலேய பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒரு தமிழ்ப்பெண் எதிர்கொண்ட சூழல் எத்தகையதாக இருந்திருக்கும் என அறிய விரும்பினால் படிக்க வேண்டிய நூல் இது. அதை விளக்கும் வகையில், 50 சிறு சிறு நிகழ்வுகளின் தொகுப்பாக அக்கால வாழ்க்கையை ஆவணப்படுத்துகிறது இந்த புதினம். மலேய பள்ளிகளில் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெறுகிறார் அகிலா என்ற பெண்மணி. அவர் தனது ஏறத்தாழ ஒரு 30 ஆண்டுக்கால பணி குறித்த நிகழ்ச்சிகளின் நினைவுக்கடலில் மூழ்கி அவற்றை அவ்வப்பொழுது தனது கணவரிடமும் பகிர்ந்து கொள்ளுவதாக நூலின் போக்கு அமைந்துள்ளது. தான் தமிழில் எழுதியதை ஆங்கில மொழி பெயர்ப்பாக “எ ஜர்னி துரு ஸ்கூல்ஸ்” (A Journey through Schools,  Nirmala Raghavan, 2019) என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளார் மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன்.

நிர்மலா ராகவன் இந்தியாவில் பிறந்து வளர்ந்து கல்விகற்று திருமணத்திற்குப் பிறகு மலேசியாவில் குடியேறிய தமிழர். மலேய கல்வித்துறையிலும் பள்ளிகளிலும் பணியாற்றியவர். பெண்ணியச் சிந்தனை கொண்ட சமூக ஆர்வலரான நிர்மலா வானொலி நாடகங்களையும், நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 20க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டவர். இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். உளவியல் கோணத்தில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மனவளக் கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். அக்கட்டுரைகள் பல்கலைக்கழக ஆய்விற்கான பொருண்மையாகத் தேர்வு செய்யப்பட்டதும், இவரது சிறுகதை நூல்களுள் ஒன்று கல்லூரி பாடநூலாக எடுத்துக்கொள்ளப்பட்டதும் இவர் பெற்ற சிறப்பு.  இவரது வாழ்நாள் இலக்கியப் பங்களிப்பு பாராட்டப்பட்டு அதற்கான விருதும் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 25 September 2019

கார் பருவம்


siragu kaarparuvam1
இயற்கை கூறுகளின் சங்கமமாக அமைந்திருப்பதே உலகம். உலகின் முதல்பொருளாக நிலமும் பொழுதும் அமைந்துள்ளன. பொழுதுகள் பற்றியதான சங்கப் புலவர்களின் திறனை நற்றிணைவழி அறிவதே இக்கட்டுரையாகும்.
பொழுதுகள்
வானிலை மாற்றங்களுக்கு ஏற்ப பாகுபடுத்தப்பட்டதே பொழுதுகள் ஆகும். பொழுதுகள் பற்றி வானிலை அறிவியல் பருவமழைக்காலம், பருவ மழைக்கு பிந்தைய காலம், குளிர்காலம், கோடைகாலம் என நான்காக வகைப்படுத்துகின்றது. இவ்வகைப்பாடானது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளது. பொழுதுகளை பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டாகப் பிரித்து, ஒரு ஆண்டின் கூறுகளாக அமைவது பெரும்பொழுது எனவும் ஒரு நாளின் கூறுகளாக அமைவது சிறுபொழுது எனவும் கூறி, கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என பெரும்பொழுதுகளையும் மாலை, யாமம், வைகறை, காலை, நண்பகல், எற்பாடு என சிறுபொழுதுகளையும் வகைப்படுத்தியிருப்பது சங்கப்புலவர்களின் பொழுதியியல் அறிவைக் காட்டுகின்றது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 24 September 2019

சங்க இலக்கியங்களில் மனையியல் செய்திகள்


siragu-manayiyal1
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை, நீர்மை என்று நிகண்டு பொருள் உரைக்கின்றது. ‘‘இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” (பிங்கலநிகண்டு), “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்கிறார் பாவேந்தர். இப்பண்புகளே தமிழ் மொழியைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கன்னித் தமிழாக முன்னைப் பழமைக்கும் பழையதாகவும், பின்னைப் புதுமைக்கும் புதியதாகவும் வளமையும் செழுமையும மிக்கதாக அழியாத் தன்மையுடன் நிலை நிறுத்தி வருகின்றன. இவ்வாறாகத் திகழும் தமிழ் மொழியில் இன்று பல துறைகளை நிறுவி சாதனைப் படைக்கின்றனர் சான்றோர்கள். அந்த வகையில் செம்மொழித் தகுதி பெற்ற தமிழ் இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற தலைப்பில் “மனையியல்” துறையினை அடித்தளமாகக் கொண்டு “அகநானூற்றுப் பாடல்களில் மனையியல் செய்திகள்” என்ற தலைப்பில் இக்கட்டுரை வரையறுக்கப்பட்டுள்ளது.
மனையியல் – அறிமுகம்


மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு. குடும்பம் வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு கல்வித்துறை ஆகும். மனையியல் என்ற சொல்லுக்கு அகராதியில் ‘‘வீட்டைநிர்வகித்தல், குடும்பத்தினருக்குத் தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவு தயாரித்தல் முதலியவற்றை அறிவியல் முறையில் கற்றுத் தரும் படிப்பு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 23 September 2019

அமெரிக்காவில் இந்திய பிரதமரின் ஊர்வலம்


siragu howdy modi4
செப்டம்பர் 17, 2019 எழுத்தாளர் Pieter Friedrich ஹுஸ்டன் சிட்டி கவுன்சில் கூட்டத்தில், இந்திய பிரதமர் மோடி அவர்களின் “Howdy Modi” என்ற ஊர்வலத்திற்கு எதிராக முழங்கியுள்ளார். அதன் தமிழாக்கம் வருமாறு:-
இந்து தேசியத்தை வலியுறுத்தும் பா.ச.க-வின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, செப்டம்பர் 22, “Howdy Modi” எனும் ஊர்வலத்தில் பங்கேற்க ஹுஸ்டன் வருகின்றார். அந்த ஊர்வலத்தில் ஹுஸ்டன் மேயர் சில்வஸ்டர் டர்னர் பங்கேற்க உள்ளார்.
மோடியின் கரங்களில் குருதி தோய்ந்துள்ளது. அவரை வரவேற்க கைக்குலுக்கும் நபர்களின் கரங்களில் ஒட்டிக்கொள்ளப் போகும் குற்றங்களின் பங்களிப்பிலிருந்து அவர்கள் தங்கள் கைகளை கழுவிட முடியாது.

“Howdy Modi” எனும் இந்த ஊர்வலம் அமெரிக்காவில் இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளையால் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்எஸ்எஸ் துணை இராணுவ அமைப்பு போல் செயல்படக்கூடிய ஒன்று. அதன் சீருடை ஹிட்லர் யூத் அமைப்பின் உறுப்பினர்கள் அணிந்திருந்தை ஒத்திருக்கும். இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு 1925 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதே வருடம் தான் ஹிட்லரின் நாஜி அமைப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆர்எஸ்எஸ் இத்தாலியின் முசோலினி பாசிச அமைப்பை போல் தன்னை வடிவமைத்துக்கொண்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 20 September 2019

செம்மொழி இலக்கியங்களில் கடல் சார் உயிரியல்

siragu kadalsar uyirinam3
கிழக்கு மேற்கு கடற்கரை பகுதிகள் மற்றும் அந்தமான், லட்சத்தீவுகள் கடற்கரைகள் உள்ளடங்கிய இந்திய கடற்பகுதி வெப்ப மண்டல பகுதியில் உள்ளடங்கியது. இந்திய கடற்கரையின் நீலம் சுமார் 7916 கி.மீட்டர்கள் ஆகும். இதில்22.6 விழுக்காடு தீவு பகுதிகளைச் சார்ந்தது. இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலம் சுமார் 2மில்லியன் கி.மீட்டர்கள்.
உலகளவில் உள்ள கடல்களில், இந்து மகாசமுத்திரம் சிறியது. அதில் பெரும் பங்கு வகிப்பது இந்திய கடல்தான். அரபிக் கடல், வங்காள விரிகுடா, அந்தமான் கடல் மற்றும் லட்சத்தீவு கடல் ஆகியவை இந்திய கடலில் அடங்கும். கட்ச் வளைகுடா, காம்பட் வளைகுடா மற்றும் மன்னார் வளைகுடா ஆகியவை இந்திய கடல்பகுதியில் உள்ள மூன்று முக்கிய வளைகுடாக்களாகும்.
siragu kadalsar uyirinam4

சுமார் 980 கி.மீட்டர் நீளம் கொண்ட தமிழ்நாட்டின் கடற்கரை, இந்திய கடற்கரையின் மொத்த நீளத்தில் 17விழுக்காடு ஆகும். இதில், வங்காள விரிகுடா 355 கி.மீட்டர் அளவிலும், பாக் சலசந்தி, மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடல் ஆகியவை 625 கி.மீட்டர் அளவிலும் இடம் பெற்றுள்ளன. மணல் பாங்கான கடற்கரை,சதுப்பு நிலங்கள், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் பவளப்பாறைகள் ஆகியவை தமிழ்நாட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய சூழ்நிலைகளாகும். பவளப்பாறைகள், இராமநாதபுரம் மற்றும் தூத்தூக்குடி மாவட்டங்கள் உள்ளடங்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் சலசந்தி பகுதிகள் இடம் பெற்றுள்ளன. இயற்கை மற்றும் இயற்கை வளம் பேணுதலுக்கான சர்வதேச ஐக்கிய கூட்டுறவு அமைப்பின்படி, கடல் ஏற்ற – வற்ற இடைப்பகுதி மற்றும் அது சார்ந்தநீர்ப்பகுதி, தாவர, விலங்கினங்கள், சரித்திர மற்றும் கலாச்சார விசேச அம்சங்கள் ஆகியவை சட்டங்கள் மற்றும் ஏனைய நற்பயனளிக்கும் முறைகள் மூலமாக முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி மட்டும் பாதுகாக்கப்பட்டிருந்தால், அது கடல்சார் பாதுகாக்கப்பட்ட பகுதி எனப்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 19 September 2019

முல்லைப்பாட்டில் மேலாண்மைச் சமுதாயம்


siragu mullaipaattu1
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைகளைச் சிறப்பாகப் பயன்படுத்தும் வழிமுறை” என்று வரையறுக்கிறார். மக்களைக் கொண்டு ஓர் அமைப்பு தன் நோக்கத்தை வெற்றிகரமாக அடையும் செயல்திட்டம் மேலாண்மை என்ற பொதுக்கருத்தை இவ்விரு அறிஞர்களின் கருத்துகள் வழியாகப் பெறமுடிகிறது.
மேலைநாடுகளில் மேலாண்மை என்ற துறை வளர்ச்சி பெற்று ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் வளரும் நாடுகளுக்கு இம்மேலாண்மைத் தத்துவங்கள் பரவி அவையும் அத்தத்துவங்கள் வழி நிற்க முயலுகின்றன. இவற்றோடு பழமையான மொழிகளில், இலக்கியங்களில், பல மேலாண்மைக் கூறுகள் அமைந்துகிடப்பதை இன்றைக்கு அறியமுடிகிறது. குறிப்பாகத் தமிழ் இலக்கியங்களில் பல்வேறு மேலாண்மைச் சிந்தனைகள் விரவிக்கிடக்கின்றன. பண்டை இலக்கியமான சங்க இலக்கியங்களில் பல மேலாண்மைக் கருத்துகள் தெரிவிக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முல்லைப்பாட்டில் காணப்படும் மேலாண்மைக் கூறுகளை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.


மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 17 September 2019

பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டிய காரணம் …


siragu periyar1

“பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்கவேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’, ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும்” (பக்கம் – 286); என்று நகைச்சுவையாகத் தனது கருத்தை வலியுறுத்த முனையும் பெரியார், நாம் ஒருவரை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது அவருடைய பணம், படிப்பு, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, திறமை ஆகியவற்றுக்காக அல்ல என்கிறார்.
அப்படியானால் எதற்காக நாம் ஒருவரை நினைவில் நிறுத்துகிறோம்? அதற்குப் பெரியாரே கூறும் விடை, “மனிதர்களாக — மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத்தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆகுங்கள் என்பதற்காகவே யாகும்” என்ற தெளிவான ஒரு வரையறையை வகுக்கிறார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.