Wednesday, 29 April 2020

முல்லைப்பாட்டுக்கு எழுதப்பட்ட உரைகள்


siragu mullaippaatu2
பத்துப்பாட்டு வரிசையில் ஐந்தாவதாக வைக்கப்பட்டுள்ள முல்லைப்பாட்டு நூல் 103 அடிகளைக் கொண்ட பாடல். நூலின் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் என்பவர். சோழநாட்டைச் சேர்ந்த வணிகராக இவர் இருந்திருக்க வாய்ப்புண்டு. நேரிசை ஆசிரியப்பாவில் இந்நூலை எழுதியுள்ளார் நப்பூதனார். பாடலில் பாடப்பட்டவர் பெயர் இன்னதென்றுக் குறிப்பு இல்லாவிட்டாலும் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது. நப்பூதனார் நெடுஞ்செழியனின் அவைப்புலவர் என்றும் கருதப்படுகிறது. போருக்குச் சென்ற தலைவன் தான் மீண்டும் கார்காலத் துவக்கத்தில் திரும்புவதாக அறிவித்துச் செல்ல, அவன் வரவை எதிர்நோக்கித் தலைவியும், தலைவியின் நினைவாகப் போர்முனையிலிருந்த தலைவனும் வருத்தமுற்று, பின் மீண்டும் இணைவதைச் சொல்கிறது முல்லைப்பாட்டு நூலின் கருத்து. பாடலில் இரண்டிலிருந்து மூன்று விழுக்காடு வடமொழிச் சொற்கள் இருப்பதாகவும் பாடலில் காலம் கி. மு. 2 ஆம் நூற்றாண்டு என்பதும் மறைமலையடிகளின் கருத்து.

கார்காலத்தின் இயற்கை, தலைவியின் தனிமை உணர்வு, போர்க்களத்தின் சூழல் ஆகியன செம்மையாக விவரிக்கப்படுவதாகத் தமிழறிஞர்களின் பாராட்டைப் பெரும் இலக்கியம் முல்லைப்பாட்டு. முல்லை சார்ந்த ஒழுக்கங்களாகப் பாடலில் இடம்பெறுவது; பகை வெல்லும் பொருட்டு, வேற்றோர் அரசனின் நாடு கைப்பற்றும் நோக்கத்துடன் தலைவன் தானே போருக்குச் செல்லுதலான வஞ்சித்திணை புறவொழுக்கமும்,அதனால் பிரிந்த தலைவியும் தலைவனும் தனது காதல் துணையை எண்ணிக் காத்து இருத்தலும் இருத்தல் நிமித்தமுமான அகவொழுக்கமும் பாடலில் காணப்படுகிறது. இச்சூழல் உணர்த்தும் நிகழ்வை இக்காலத்தில் இயக்குநர் மணிரத்தினம் தளபதி படத்தில்,”சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இன்னாள் நல்ல தேதி” என்ற பாடலில் மிகச் சிறப்பாகக் காட்சிப் படுத்தியதையும் [https://youtu.be/6PPpbSB0iME] இங்கு நினைவு கூரலாம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 28 April 2020

கரோனாவும் உலக நாடுகளில் அதன் பரவலும்


siragu coronavirus6
சீனாவின் வூஹான் நகரில் ஆரம்ப்பித்து உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ள ஒரு வித வைரஸ் இந்த கரோனா. இதன் நோய் பாதிப்பை விட இது ஏற்படுத்திய பீதி மற்றும் பொருளாதார பாதிப்பு மிக அதிகம்.
உலகம் முழுக்க பரவினாலும், இதன் தாக்கம் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலேயே அதிகமாக உள்ளது. மூன்றில் ஒரு பகுதி மக்கள்தொகை கொண்ட ஆசியா, ஆப்பிரிக்காவைக் காட்டிலும் வெறும் 15% கொண்ட ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவையே அதிகம் தாக்கியுள்ளது. ஏன் தென் அமெரிக்காவில் கூட அவ்வளவு பாதிப்பு இல்லை.
காரணம் என்ன?

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பரவ மிக முக்கியக்காரணம் விமான போக்குவரத்து. ஆனால் உள்நாட்டிற்குள் பரவுவது அந்நாட்டில் தட்பவெப்ப நிலை மற்றும் அந்நாட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தே அமைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

சர்வோதயம்


siragu agimsai1
காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த நூல் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல். இதனை எழுதியவர் ரஸ்கின் ஆவார். இவரின் இந்நூலைக் குஜராத்தி மொழியில் காந்தியடிகள் சர்வோதயம், அதாவது சர்வ ஜனநலம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அவருக்குள் பெருத்த மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது. இந்நூல் ஏன் தன்னைக் கவர்ந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்று காந்தியடிகளே சொல்கிறார்.
எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.
தங்கள் உழைப்பினால் தங்கள் வாழ்வினை நடத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் ஒரே வகையான உரிமை உண்டு. உயர் தொழில் செய்பர்கள், கீழ்நிலைத் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. விவசாய வாழ்க்கை, பாட்டாளி வாழ்க்கை, கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கை போன்ற அனைத்துமே வாழ்வதற்கு உகந்த மென்மையான வாழ்க்கை முறைகள்.
இந்த மூன்று கருத்துகளை அந்நூல் காந்தியடிகளுக்குத் தெரிவித்தது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல்.

இந்நூலின் வழியாகச் சர்வோதயம் அறிமுகமாகிறது காந்தியடிகளுக்கு. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள் என்ற நன்னிலை அவருக்குள் உதயமாகிறது. கிராமமக்கள், நகர மக்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி தன்னிறைவான வாழ்க்கையை அனைவரும் அடைதலே ஆகும். 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Friday, 24 April 2020

பாம்பையும் பார்ப்பானையும் கண்டால் பாம்பை விட்டுவிட்டுப் பார்ப்பானை அடிக்கச் சொன்னாரா பெரியார்?


siragu karpu4
பெரியரைப் பற்றி பல அவதூறுகள் தொடர்ந்து பரப்பப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. இன்றைய இணையக் காலத்தில் தான் என்றல்ல, அவர் என்றைக்குக் காங்கிரசு கட்சியை விட்டு வெளியேறி, பார்ப்பன ஆதிக்கத்தை அடக்கியே தீருவேன் என்று சுயமரியாதை இயக்கத்தை 1925 இல் தொடங்கினாரோ அன்றிலிருந்தே அவரைப் பற்றிய அவதூறுகளும் தொடங்கி விட்டன. இதனைப் புராணக் கதைகளோடு பொருத்திப் பார்க்க இயலும். கதைகளில் அரக்கர் எனச் சொல்லப்படுவோர் அனைவருமே திராவிடர் இன மக்கள் தான் அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு போன்றவர்களே ஆதாரத்துடன் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த அரக்கர் என்பவர்கள் தேவர்களுக்கு (பார்ப்பனர்கள்) இடையூறாக இருந்தனர் என்றும், அவர்கள் மிக மோசமானவர்கள் என்றும் கதைகளில் எழுதி வைத்தவர் பார்ப்பனர்கள்.
அவர்களைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைத் தட்டிக் கேட்டால் அவர்கள் கெட்டவர்கள் என்று கதை கட்டுவது அவர்களுக்கு வழக்கம். அந்த வகையில் தான் திராவிடர் இயக்கத் தலைவர்கள் அனைவரின் மீதும் ஆதாரம் இல்லா கதை எழுதிப் பரப்பி விடுவார்கள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

நோய்நாடி நோய்முதல் நாடி…


siragu coronavirus2
ஊரடங்கு – இன்று நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் நாள்தோறும் எதிரொலிக்கும் வார்த்தை. தமிழ் அகராதியில் நாமனைவரும் மிக அதிகம் பயன்படுத்தும் வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கும். விலகியிரு, தனித்திரு, வீட்டிலிரு – இவையெல்லாம் இந்த பந்தயத்தில் அடுத்ததடுத்து பதக்கம் பெறும் சொற்கள். தெருவெல்லாம் டிராபிக்ஜாம், ஜவுளிகடை, பாத்திரக்கடை, நகைக்கடை, பரோட்டாகடை என்று எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்த நாம் எப்படி இப்படி ஒடுங்கிபோனோம்? ஆஸ்பத்திரி அல்லது வீடு இந்த இரண்டு இடங்களைத் தவிர இன்று வேறு எந்த இடத்திலும் ஒரே மனிதனை பத்து நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடியாது. ஏன்? எவ்வாறு? கொரோனா – ஆடாத ஆட்டம் ஆடிய மானுடத்தை பெட்டி பாம்பாக கட்டி போட்டிருக்கும் இந்த குட்டி வைரஸின் நதிமூலம், ரிஷிமூலம் சிறிது ஆராய்வோம் …

நவம்பர் 2019 உலகின் வல்லரசுகளில் ஒன்றான சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரம். இங்குதான் அந்த நாட்டின் மிகப்பெரிய இறைச்சி சந்தைகளில் ஒன்றான ஹுனான் மொத்த விற்பனைச்சந்தை செயல்படுகிறது. இங்கு இறைச்சி, உயிருள்ள மீன்கள் மற்றும் உயிருள்ள வனவிலங்குகளும் விற்பனைக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 22 April 2020

அகிம்சையின் வெற்றி


 siragu agimsai1
அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார். அகிம்சை  வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச் சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது.
அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும், சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள் வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும், ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது அகிம்சை.
அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம். அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள்.

      “ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

குறள் கூறும் பகுத்தறிவின் இலக்கணம்


siragu thirukkural1
அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10 குறள்கள் கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர். மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா, அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன், அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த 50க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்), 100க்கும் மேற்பட்ட முறை (163 முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம் ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார். இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும் அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை குறித்து வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி மேலும் பல அதிகாரங்களிலும் தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.
அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச் செய்வது அறிவு (429),

இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.