பயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி,
எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத்
தரும். தனியே செல்லும்போது இதற்கான கால அவகாசம் அதிகம். உடன் பயணிக்கும்
உறவினர்கள் / நண்பர்களுடன் உரையாடினாலும் அமைதியாகச் சிந்திக்கும்
சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
நாம் நெருக்கமானவர்களுடனும்
அறிமுகமானவர்களுடனும் மட்டும் பயணம் செய்வதில்லை. முன் பின் அறிமுகமில்லா
முகங்கள் பலவற்றைக் கடந்து வருகிறோம். இரயில் சிநேகிதம் என்று
பொதுவில்குறிப்பிட்டாலும் பயணங்கள் ஏற்படுத்தும் நட்பையே இங்கே
குறிப்பிடுகிறேன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment