கடந்த 1991 ஆம் ஆண்டு அமெரிக்காவில்
வாழும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து தமிழர் உரிமைகளை வென்றெடுக்கும்
நோக்கில் சிகாகோ நகரில் கூடி உருவாக்கப்பட்ட “உலகத் தமிழ் அமைப்பு” இந்த
ஆண்டு வெள்ளி விழா கண்டுள்ளது. “தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழர் உரிமை”
என்ற முழக்கத்துடன் உலகமெங்கும் வாழும் தமிழர் நலனுக்காகவும், தமிழர்
உரிமைகளைப் பாதுகாக்கவும் கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்து வரும்
இவ்வமைப்பின் வெள்ளி விழா நிகழ்வு கடந்த 08 அக்டோபர் 2016 விர்சீனியாவில்
உள்ள ஆல்டி நகரில் நடைபெற்றது.
தமிழர்களின் உரிமைக்காகவும், அயல்மொழித்
திணிப்பில் இருந்து தமிழ் மொழி காக்கவும் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த
தமிழீழ, தமிழக மாவீரர்கள், ஈகியர்களுக்கு விழாவில் கூடியிருந்தவர்கள்
அனைவரும் அமைதி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு அழைப்பாளார்கள்
குத்துவிளக்கேற்ற, உலகத் தமிழ் அமைப்பின் தலைவர் ஐயா. வைத்தியலிங்கம் க.
தேவ் அவர்களின் வரவேற்புரையுடன் விழா தொடங்கியது. விழா ஒருங்கிணைப்பாளர்
திரு இரவி சுப்ரமணியம் அவர்கள் மாநாட்டு முன்னோட்டம் குறித்து விளக்கினார்.
வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையின் தலைவர் திருமதி செந்தாமரை
பிரபாகர், தமிழ்நாடு அறக்கட்டளையின் தலைவர் திரு. சிவசைலம் தெய்வமணி,
அமெரிக்கத் தமிழர் அரசியற் செயலவையின் சார்பாக திரு. எலியாசு அவர்களும்
வெள்ளி விழா காணும் உலகத் தமிழ் அமைப்பின் வரலாற்றையும் பணிகளையும்
நினைவுகூர்ந்து வாழ்த்துரை வழங்கினர். புரட்சிக்கவி பாரதிதாசன் “சங்கே
முழங்கு”, “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம்” பாடல்களுக்கு தமிழ்ப்
பள்ளிக் குழந்தைகளின் எழுச்சி நடனத்துடன் விழா தொடங்கியது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment