வானம்பாடிப்பறவை ஒன்று வானில்
பறந்துசென்று கொண்டிருந்தது. அப்போது அது, ஒரு சிறுமி மிகுந்த
வருத்தத்துடன் தன்வீட்டுக் கொல்லையில் அமர்ந்திருப்பதைப் பார்த்தது.
அந்தச்சிறுமியின் பெயர் மாயா. நான்காம் வகுப்புப் படிக்கிறாள்.
வானம்பாடிக்குக் குழந்தைகள் வருத்தத்துடன் இருப்பது பிடிக்காது. உடனடியாக
அது அந்தச்சிறுமியின் முன்னால் போய் அமர்ந்தது.
“நான் தான் வானம்பாடி! நீ ஏன் வருத்ததுடன் இருக்கிறாய்?” – என்று கேட்டது.
“ஓ…வானில் பாடியபடி பறக்கும் பறவை நீதானா? உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” – என்றாள் மாயா. அவள் குரல் சுரத்தில்லாமல் இருந்தது.
“உன் பிரச்னை என்னன்னு சொல்லு! என்னால தீர்த்து வைக்கமுடியுமான்னு பாக்குறேன்!” – என்றது வானம்பாடி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment