படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்
வரையில் உணவகங்களில் உணவு தயாரிப்புப் பணியில் இருக்கிறேன் என்று
தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் இளைஞர் தனம் என்று செல்லமாக அழைக்கப்படும்
தனசேகர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் ஆற்றுப்பாலம்
அருகில் உள்ளது ராஜேஸ் என்ற இளைஞர் நடத்தும் உணவகம். இங்குதான்
பணியாற்றுகிறார் தனசேகர் (26). உணவு தயாரிப்புப் பணிதான் இவரது முக்கியப்
பணி. இருப்பினும் சாப்பிட வருபவர்களுக்கு சேவை செய்வதையும் விரும்பி
செய்கிறார்.
தூய்மையாக அழுத்தம் திருத்தமாக “ழ”-கரத்தை
உச்சரிக்கும் இவரது மொழியால் இவரிடம் பேச்சு கொடுக்க, ஆச்சரியம் மேல்
ஆச்சரியமாக கிடைத்தது. காரணம் இவரது படிப்புதான். தனசேகர் முதுநிலை
பட்டதாரி அதாவது எம்.எஸ்.சி., பி.எட்., எம்.பில். முடித்துள்ளார்.
படிப்புக்கேற்ற வேலைதான் வேண்டும் என்று
வீட்டில் சும்மா படுத்து சுவற்றுச் சுண்ணாம்பை சுரண்டிக் கொண்டிருக்கும்
இக்கால இளைஞர்கள் மத்தியில், உணவுக் கரண்டியை கையில் பிடித்து தகுந்த வேலை
கிடைக்கும் வரை ஓய்ந்து கிடந்தால், அது வாழ்க்கை இல்லை என்று உணவு
தயாரிப்பதிலும்… வாடிக்கையாளர்கள் சாப்பிட்ட பாத்திரங்களை எவ்வித
முகச்சுளிப்பும் இன்றி எடுத்துப் பரிமாறுவதிலும் தனசேகர் நெஞ்சை
அள்ளுகிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment