“அப்பா, அம்மாச்சி வீட்ல இருக்கிற, அந்த
சீணு பையன் நம்ம அம்மாவை அம்மா அம்மான்னு கூப்பிட்டு மடில உட்காரான்பா,
நானும் அண்ணனும் அவன தள்ளி விட்டுட்டோம்பா” என்று கண்களை விரித்தப்படி
சொன்னாள் ஐந்து வயது தங்கம்.
“அப்படியா கண்ணு, சரி நீங்க போய்
விளையாடுங்க” என பிள்ளைகளை வெளியே அனுப்பிய குமரன், அஞ்சலையிடம் “எத்தன தடவ
சொல்லிருக்கேன் அந்தப் பையன் அங்க இருக்கும் போது புள்ளைகள அங்க
அழைச்சிட்டு போகாதன்னு, அப்படியே கூட்டிட்டுப் போனாலும் அவன
கொஞ்சக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, என் புள்ளைங்க முன்னாடி அவன் உன்ன
அம்மான்னு கூப்பிடக் கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது? ” எனச் சீறினான்.
“இல்லங்க அவன் தான் ….” என இழுத்தாள் அஞ்சலை
“வாய மூடுடி, இனிமே அவன் உன்ன அம்மான்னு கூப்பிட்றத புள்ளைங்க சொன்னா தொலைச்சிடுவேன்” என அதட்டி விட்டு வெளியே சென்றான் குமரன்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment