இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம்
ஏராளமான சவால்கள் நிறைந்தது என பள்ளிக் குழந்தைகளுக்கு ஆலோசனை செய்து வரும்
வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன் சொல்கிறார்.
இது பற்றி அவரிடம் விரிவாகப் பேசினோம்.
இது பற்றி அவரிடம் விரிவாகப் பேசினோம்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப்
பணியாற்றுகிறேன். இன்றைய இளம் வயது குழந்தைகள் வாழ்க்கையில்
எதிர்க்கொள்ளும் சவால்கள் என்ன?, அதிலிருந்து அவர்கள் தப்புவது எப்படி?
என்பதை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று அவர்களை சந்தித்து உரையாடுவது எனது
சமூகப்பணி.
பெரும்பாலும் இன்று நகரங்களைப் பொறுத்தவரை
கணவன்-மனைவி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தையோடு அவர்கள்
நேரம் கழிப்பது என்பது மிகவும் குறைவு தான். மேலும் குழந்தைக்கு என்ன
தேவையோ அதனை உடனுக்குடன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இன்றைய
குழந்தைகள் படிப்பதற்கு தேவையான விசங்களைத் தவிர்த்து, பொழுது போக்கிற்காக
அம்மா, அப்பாவிடம் கேட்டு பெறும் விசயங்கள்தான் அதிகமாக உள்ளன.
எடுத்துக்காட்டாக மடிக்கணினி, அலைபேசி, இரு சக்கர வாகனம் என இந்தப்
பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இன்றைய தொழில் நுட்பம் என்பது புலி வாலைப்
பிடித்த கதை தான். அதை சற்று கவனக்குறைவாக பயன்படுத்தினாலும் நம்முடைய
வாழ்க்கையை காலி செய்து விடும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment