ஈராண்டுகளுக்கு முன் இந்தத்தேர்தல் கூத்து
துவங்கியது. சனநாயக்கட்சி (டெமோகிரேட்), குடியரசுக்கட்சி (ரிபப்லிகன்)
கட்சிகளுக்குள் குடியரசுத்தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கும் கூத்து
துவங்கியது. சனநாயக்கட்சிக்குள் ஹில்லரி கிளிண்டனும், பெர்னி சாண்டர்சும்
போட்டியிட்டனர். ரிபப்லிகன் கட்சிக்குள் பலர் போட்டியிட்டனர். அதில்
முடிவில் டொனல்டு டிரம்பும், ஹில்லரி கிளிண்டனும் வென்று இன்று
வேட்பாளர்களாக நிற்கின்றனர். இந்த வாரம் செவ்வாய் கிழமையன்று குடியரசுத்
தேர்தல் நடைபெறவுள்ளது. யார் வெல்வார்கள் என்று தேர்தல் கணிப்பாளர்கள்
அவரவர் கொள்கைப்படி கூறிவருகின்றனர். இனி வேட்பாளர்கள் குறித்து
பார்ப்போம்.
டொனல்டு டிரம்பு: இவர்
ரிபப்லிகன் கட்சியின் வேட்பாளராக வெல்வார் என்பதை அக்கட்சியினரே
ஓராண்டிற்குமுன் கனவு கூட கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் இவரை எதிர்த்து
நின்றவர் அனைவரும் கோமாளிகளாக நடந்து கொண்டதாலும், அரசியல்
முதிர்ச்சியேதுமில்லாததாலும் தோற்றனர். டிரம்பு கட்சியினரின்
கோபத்தைப்புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டது அவரது
வெற்றிக்கு வழிவகுத்தது. டிரம்பு ஒரு பொழுதுபோக்காளர், தொலைக்காட்சியில்
நடந்து கொண்டது போலவே
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment