ஒரு அற்புதமான, திறமையான மருத்துவரை
தமிழகம் இழந்திருக்கிறது. இழக்க வைத்திருக்கிறார்கள். இந்த கொடுமையை
நம்மால் தடுக்க முடியவில்லையே என்று எண்ணும்போது நம் மனம்
குற்றயுணர்ச்சியில் தவிக்கிறதே. அதுவும் சமூகநீதியில் முன்னே நிற்கும் நம்
மாநிலம் இப்படிப்பட்ட ஒரு தவற்றை இழைத்திருக்கிறது என்றால், நம் வருங்கால
சந்ததியினர் நம்மை குற்றவாளிகளாக, துரோகிகளாக அல்லவா பார்ப்பார்கள்.
இந்தியாவிலேயே மருத்துவக்கல்வியில் முதல்
மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது என புள்ளிவிவரங்கள் நமக்கு
சொல்கின்றன. நம் மாநிலத்தில்தான் மிக அதிக அளவில் அரசு மருத்துவக்
கல்லூரிகள் இருக்கின்றன. நம் மாநில மாணவர்கள் படித்து அதிக அளவில் ஒவ்வொரு
ஆண்டும் வெளி வருகின்றனர். கிராமப்புற சேவைகளில் தங்களை
அர்பணித்துக்கொள்கின்றனர். ஆரம்ப சுகாதர மருத்துவமனைகளில்
பணிபுரிகிறார்கள். ஆனால், இவ்வாண்டு நம் மாணவர்களின் மருத்துவக் கனவை
தகர்த்து எறிந்திருக்கிறது இந்த நீட் எனும் நுழைவுத்தேர்வு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment