20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில்
பாரதியாரால் மேற்கொள்ளப்பட்ட மரபை மீறிய புதிய வகையிலான கவிதை அறிமுகம்
செய்யப்பட்டது. எனினும் “free verse”என்று மேலை நாட்டினரால்
மேற்கொள்ளப்பட்ட வசனகவிதை முறையை தமிழில் பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி
மேற்கொண்டு பல சோதனைகளைச் செய்தார். அவற்றில் வெற்றியும் பெற்றார்.
இந்நிலையில் செத்துக் கொண்டிருந்த பழைய
யாப்புக் கவிதை மரபிற்கு மாற்றாக புதிய முறை அவசியம் என்று
ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா, புதுமைப்பித்தன், க.நா.சு ஆகியோர்
கணித்திருந்தனர். இவர்களில் ந.பிச்சமூர்த்திக்குப் பின் புதிய சோதனைகளை
புதுமைபித்தன் தீவிரமாக கைகொண்டார். எனினும் இப்புது ரீதியான கவிதை
முறைக்கு பண்டிதர்கள் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
எந்த ஒன்றும் புதியதாக வருகிறபோது அவை
எதிர்ப்பை சந்திக்கும் என்று இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டு வருகிறது.
அது போல் மரபை மீறி முயன்ற கவிதைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்த நிலையில்
அதனைக் கையாண்டு வெற்றி பெற்றவர்களுள் க.நா.சு குறிப்பிடத்தக்கவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment