நவீன தமிழ் இலக்கியத்தில்
பெரும்பங்களிப்பைச் செய்தது சி.சு.செல்லப்பா அவர்கள் நடத்திய ‘எழுத்து’
இதழ். இலக்கிய விமர்சனங்களோடு தன் பயணத்தை தொடங்கிய எழுத்து இதழ்
பிற்காலத்தில் இதழ்களின் வளர்சிக்கு ஒரு குறியீடாக காட்டப்படுகிறது. அதோடு
மட்டுமல்லாது எழுத்து இதழில் எழுதியவர்களுக்கு முகவரியாக அமைந்துள்ளது
என்பதை மறுக்க முடியாது.
அவ்வகையில் ‘எழுத்து’ இதழில் கவிதைகள்
எழுதியவர்களின் அறுபத்து மூன்று கவிதைகளையும் அக்கவிதைகளை எழுதிய இருபத்து
நான்கு கவிஞர்களையும் “புதுக்குரல்கள்” என்று தொகுத்து வெளியிட்டது.
அத்தொகுப்பில் இடம்பெற்ற கவிஞர்களில் வெகுசிலர் மட்டுமே கவிதையை தொடர்ந்து
செய்து வந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் ‘பிரமிள்’ என்று
அழைக்கப்படுகிற இலங்கையில் பிறந்து தமிழகத்தில் வாழ்ந்த சிவராமலிங்கம்.
“புதுக்குரல்” தொகுப்பில் இடம்பெற்றுள்ள
கவிஞர்களில் வடித்தெடுப்பது சற்று கடினமென்றாலும் இக்கட்டுரைக்காகவாவது
பிரமிளை முன்னிலைப்படுத்த அவசியமாகிறது. மேலும் பிரமிள் கவிதை அமைப்பு,
உத்திமுறை மற்றும் படிமம் ஆகியவற்றின் காரணமாக
முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment