”பத்மலட்சுமி குழந்தைகள் காப்பகம்“ அன்று
கோலாகலமாயிருந்தது. அங்கு ஒரு வயதிலிருந்து நான்கு வயது வரை உள்ள பிஞ்சுக்
குழந்தைகள் தன் பிஞ்சுப் பாதங்களுடன் அங்குமிங்கும் குதித்தோடிக்
கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்துக் கொள்ளும் ஆயாக்களோ மூச்சு வாங்க
அவர்கள் பின்னால் ஒடிக்கொண்டிருந்தனர். மேடை போட்டு பந்தல் கட்டி வண்ண வண்ண
பலூன்களால் அலங்கரித்து விழா ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
பார்வையாளர்கள் உட்கார நாற்கலிகள் வரிசையாகப் போடப்பட்டிருந்தன. ஒரு ஆயா
இன்னொரு ஆயாவைக் கேட்டாள், ”இன்னைக்கு என்ன விசேசம்? நம்ம டாக்டர்
அம்மாவுக்குப் பிறந்த நாளா?
நீ வேறே…………. இன்னிக்குக் குழந்தைகள்
காப்பகத்தின் மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறதாம்.
டாக்டர் அம்மாவைப் போல இந்த உலகத்திலே யாரும் இருக்க மாட்டாங்க. தன்னலம்
கருதாமே இந்த அநாதை குழந்தைகள் காப்பகத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க.”.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment