“கடவுள் இல்லை” என்று தட்டச்சு செய்து
இணையத்தில் தேடினால் கூகுள் இணையத்தேடலில் கிடைப்பவை பெரும்பாலும்
‘பெரியார் ஈ. வெ. ராமசாமி’ அவர்களைப் பற்றிய செய்திகளையும் படங்களையும்
கொண்ட முடிவுகளாகவே இருக்கும். அவ்வாறே “பகுத்தறிவுப் பகலவன்” என்றாலும்
அவர் குறித்த செய்திகள்தான் கிடைக்கும். ‘பகுத்தறிவுப் பகலவன்’, ‘தந்தை’,
‘பெரியார்’ என்ற பெயர்களெல்லாம் மக்கள் அன்புடன் அவருக்கு வழங்கிய
பட்டங்கள். ஆனால், அவர் தானே தனக்குப் பற்பல புனைபெயர்களைப் புனைந்து
கொண்டு தனது பகுத்தறிவுக் கொள்கைகளை அப்புனைபெயர்களில் எழுதியுள்ளார்.
இவற்றில், ‘சித்திரபுத்திரன்’, ‘பழைய கறுப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட
புனைபெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி,
யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமது அரசியல் நிருபர்,
பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன்,
பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன்,
வம்பன், குட்டிச்சாத்தான் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம்
என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த
வாசகர்கள் கருதுவதுண்டு. இப்புனைப்பெயர்களில் பல அவரை வசைபாடிய
பெயர்களாகவும், அதையே அவர் புனைப்பெயராக வைத்துக் கொண்டதாக இருப்பதும்
வெள்ளிடைமலை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment