Sunday, 6 September 2015

தற்காலக் கல்வி முறை பகுதி -3

ஆசிரியர் – மாணவர் உறவு
aasiriyar1

கல்லூரிப் பேராசிரியர் பணி அவ்வளவு எளிதல்ல. அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல் மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். நம்முடைய திரைப்படங்கள் அவர்கள் மனதில் பதிய வைத்துள்ள கல்லூரி பற்றிய பதிவுகள் நடப்பியலுக்கு அப்பாற்பட்டவை. இளமையில் அனுபவிக்கக் கூடிய உல்லாசமான பருவ வயது குறும்புகளை வெளிப்படுத்தவே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பதிவுகளே மிகுதி. கல்லூரியில் முறையாகக் கற்று கடினமாக உழைத்து, கல்வியினால் முன்னேறிய ஏழை மாணவன் செல்வந்தனமாக மாறுவது போல எந்தப் படத்திலாவது ஒரு காட்சியாவது பதிவாகியிருக்கிறதா என்றால். . . . சொல்லும்படி இல்லை.

கல்லூரி என்றாலே விதவிதமான ஆடை அலங்காரங்கள், முடி அலங்காரங்கள், கலாட்டா, கேலி, கிண்டல். . . . . இவை ஒருபக்கம். கல்லூரி ஆசிரியர்களை நையாண்டியாக்கி சித்தரிக்கும் காட்சிகள் மறுபக்கம். இந்த நினைவோடு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் முறையாக பாடம் நடத்தும் ஆசிரியர்களையும், முறையாக நடக்கும் வகுப்புகளையும் விரும்புவதில்லை. இயல்பிற்கு மாறாக, அவனுடைய சுதந்திரத்தைப் பறிப்பது போல கருதி அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Thursday, 3 September 2015

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-4

puli thevar9
புலித்தேவர் திருவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றிட படையுடன் சென்று போரிட்டார். இவரின் படையின் பாய்ச்சலுக்கு முன்பு, ஆற்காடு நவாப்பின் படைகளும், வெள்ளையனின் இராணுவத்தினர்களின் போய்வாய் பீரங்கி குண்டுகள், கூலிப்படையினர் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோட்டையை விட்டு தலைத்தெறிக்க ஓடினர், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு. புலித்தேவரின் இந்த வெற்றி மதுரை நகர் முழுவதும் பரவியது. மதுரை பாளையக்காரர்கள் அனைவரும் புலித்தேவருக்கு ஆதரவு தர முன்வந்தனர். திருவில்லிபுத்தூர் கோட்டை இருந்த இடம் தற்பொழுது கோட்டைத் தலைவாசல் என்று அழைக்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் கோட்டையை புலித்தேவர் 1755ல் கைப்பற்றினார்.
பின் திருநெல்வேலியில் இருந்த ஆற்காட்டு நவாப்பின் படையையும், வெள்ளையர்களையும் விரட்டியடிக்க திட்டமிட்டார் புலித்தேவர். திருநெல்வேலியில் இருந்த மாபூசுக்கான் புலித்தேவரின் படை வருவதை அறிந்த உடனே, கிழக்கு பாளையக்காரர்களையும் வெள்ளையர்களையும் அழைத்து ஒரு கூட்டம் கூட்டி, அதில் புலித்தேவருக்கு எதிராக போரில் எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும், உதவினால் உங்களுக்கு பதவி பணம், பொன், துரைமார்களிடம் நன்மதிப்பு ஆகியவைகள் கிடைக்கும் என்று நயவஞ்சகமான வார்த்தைகளைக் கூறி, புலித்தேவருக்கு எதிராக திரும்பினான். போரில் கிழக்கு பாளையக்காரர்கள் அனைவரையும் வெள்ளையன் அணியில் சேர்ந்து நின்றனர். இந்தப் போர் 1756ல் நடந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

அடுத்த பேருந்து எப்போது வரும் என்பதைப் போல மாரடைப்புக்கு காத்திருக்காதீர்கள்

Irudhayam5
தமிழில் ‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும், ‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும் ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது. தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.
சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.
முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல் முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ் அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள் தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல் அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத் தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல் முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Wednesday, 2 September 2015

தொழில்நுட்ப, பொருளாதார ஆய்வுகளும், சோதனைகளும் முதலீடுகளுக்கு இன்றியமையாதது.

aaivugal1
நாதன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகே, வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை, வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் நடத்தி வந்தார். வணிகம் அதிகரித்ததால் புறநகர் பகுதியில் சொந்த இடத்தில் நிறுவனத்தை மாற்ற எண்ணினார். மிகவும் முயற்சி செய்து சென்னைக்கு வடக்கே புறநகர்ப் பகுதியில் பத்தாயிரம் சதுரடி நிலத்தை வாங்க முடிவு செய்தார். வளரும் தனது வணிகத்துக்காகவும், இட நெருக்கடி காரணமாகவும் இந்த முடிவை தான் எடுப்பது சரியானது என்று அவர் தீர்க்கமாக நம்பினார். பத்தாண்டுகளாக வாடகை இடத்தில் நிறுவனம் நடந்து வந்ததும் அந்த முடிவை வலுப்படுத்தியது.
ஆறே மாதங்களில் தமது நிறுவனத்துக்கான கொட்டகை ஒன்றை நன்கு செலவு செய்து நிறுவி, வேலையைத் துவங்கினார், நிலம், கட்டிடம், இயந்திரங்கள் மற்றும் பிற தேவைகள் என செலவு மொத்தம் எட்டு கோடியைத் தொட்டது. அந்த எட்டு கோடி ரூபாயில் மூன்றில் இருமடங்கை வங்கிக் கடனாகவும், மீதியை தமது சொத்தை விற்றும் நாதன் திரட்டினார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

விவசாய நிலங்களை விற்கமாட்டேன்.. விவசாயம் செய்வதை நிறுத்த மாட்டேன்..

குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெற்றுள்ளார் தமிழக பெண் விவசாயி அமலாராணி. அவருடன் ஒரு நேர்காணல்:
vivasaayam2
உங்களைப்பற்றி 
அமலராணி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் தான் எனது சொந்த ஊர். நான் ஒரு ஆங்கில இலக்கியப் பட்டதாரி. எனது கணவர் திருமலை கணேசன், சொந்தமாக மருத்துவ கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 15 வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன்.

வசதியுள்ள குடும்பம். பிறகு ஏன் விவசாயம்?  
அமலாராணி: நான் இப்போதுதான் வசதி வாய்ப்புடன் இருக்கிறேன். அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவள். என் பெற்றோர் விட்டுச்சென்ற விவசாய நிலங்களை விற்கவும் மனமில்லை. தரிசாகவும் போட மனமில்லை.  அதுவும் போக எனக்கு விவசாயத்தில் அதிக ஆர்வமுண்டு. அதனாலேதான் விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறேன், தொடர்ந்து செய்வேன். வசதி வாய்ப்புள்ளவர்கள் விவசாயம் செய்யக்கூடாதா என்ன?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

Tuesday, 1 September 2015

தற்காலக் கல்வி முறை பகுதி -2

ஆசிரியர்- மாணவர் உறவு

aasiriyar- maanavar4
ஒரு சொல் சிறுசொல் அதுகுரு சொல்
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

இது திருமந்திரப்பாடல் வழி வெளிப்பாடலாகும் குரு – சீடர் உறவு நிலை. இது குருகுலத்தில் பயிலும் சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள். குருகுலத்தில் வாழ்க்கைக் கல்வியாகிய சுயஒழுக்கம், பொது ஒழுக்கம், தன்னமின்மை, தனது தேவைகளைத் தானே பூர்த்தி செய்தல், வேற்றுமையின்மை, நட்பு பாராட்டல், பிறருக்கு உதவுதல் இவை குருகுல மாணவர்கள் கற்றுக் கொண்ட வாழ்க்கைப்பாடங்கள். குருகுல முறையில் அனைவருக்கும் சமமான கல்வி தராமை, ஓராசிரியர் போன்ற குறைகளும் உள்ளன. அது போல  நிறைகளும் உள்ளன. குரு – சீடன் முறையில் குரு சொன்னதை செய்து முடிப்பவன் சீடன். தற்கால ஆசிரியர் – மாணவர் உறவில் ஆசிரியர் சொன்னதை உடனே மறந்து விடுபவன் மாணவன். இந்து மதத்தில் குரு தெய்வமாகவே வணங்கப்படக் கூடியவர். கபீர்தாசர் கடவுளும் குருவும் ஓரிடத்தில் தோன்றினால் யாரை வணங்குவது என்பதற்கு குருவைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்கிறார். கடவுளைக் காட்டியவரே குரு என்பதால் குருதான் மேன்மையானவர். கடவுளை மட்டுமா காட்டுபவர் குரு?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும். 

மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்

jaadhikkaai2
மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாவட்டம் ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியராஜா. அவருடன் ஒரு நேர்க்காணல்:
ஜாதிக்காய் சாகுபடியின் சாதகமான வானிலை என்னென்ன?
சுப்பிரமணியராஜா: ஜாதிக்காய் மரங்கள் பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது. அடர்ந்த இலைப் பரப்புகளைக் கொண்டு இருபது மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. ஆண்டில் சராசரி மழை அளவு 150 செ.மீ. மற்றும் அதற்கு மேலாகக் கிடைக்கும் கதகதப்பான ஈரப்பதம் உள்ள சூழலில் மட்டுமே ஜாதிக்காய் மரம் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள் இதற்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

ஜாதிக்காய் மரங்களை சமவெளியில் வளர்ப்பது எப்படி சாத்தியமாகியது?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.