ஆசிரியர்- மாணவர் உறவு
ஒரு சொல் சிறுசொல் அதுகுரு சொல்தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திரு வார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
இது திருமந்திரப்பாடல் வழி
வெளிப்பாடலாகும் குரு – சீடர் உறவு நிலை. இது குருகுலத்தில் பயிலும்
சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய வழி முறைகள். குருகுலத்தில் வாழ்க்கைக்
கல்வியாகிய சுயஒழுக்கம், பொது ஒழுக்கம், தன்னமின்மை, தனது தேவைகளைத் தானே
பூர்த்தி செய்தல், வேற்றுமையின்மை, நட்பு பாராட்டல், பிறருக்கு உதவுதல் இவை
குருகுல மாணவர்கள் கற்றுக் கொண்ட வாழ்க்கைப்பாடங்கள். குருகுல முறையில்
அனைவருக்கும் சமமான கல்வி தராமை, ஓராசிரியர் போன்ற குறைகளும் உள்ளன. அது
போல நிறைகளும் உள்ளன. குரு – சீடன் முறையில் குரு சொன்னதை செய்து
முடிப்பவன் சீடன். தற்கால ஆசிரியர் – மாணவர் உறவில் ஆசிரியர் சொன்னதை உடனே
மறந்து விடுபவன் மாணவன். இந்து மதத்தில் குரு தெய்வமாகவே வணங்கப்படக்
கூடியவர். கபீர்தாசர் கடவுளும் குருவும் ஓரிடத்தில் தோன்றினால் யாரை
வணங்குவது என்பதற்கு குருவைத் தான் முதலில் வணங்க வேண்டும் என்கிறார்.
கடவுளைக் காட்டியவரே குரு என்பதால் குருதான் மேன்மையானவர். கடவுளை மட்டுமா
காட்டுபவர் குரு?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment