ஆசிரியர் – மாணவர் உறவு
கல்லூரிப் பேராசிரியர் பணி அவ்வளவு
எளிதல்ல. அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளம் போல்
மாணவர்கள் கல்லூரிக்கு வருவர். நம்முடைய திரைப்படங்கள் அவர்கள் மனதில் பதிய
வைத்துள்ள கல்லூரி பற்றிய பதிவுகள் நடப்பியலுக்கு அப்பாற்பட்டவை. இளமையில்
அனுபவிக்கக் கூடிய உல்லாசமான பருவ வயது குறும்புகளை வெளிப்படுத்தவே
கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது போன்ற பதிவுகளே மிகுதி. கல்லூரியில்
முறையாகக் கற்று கடினமாக உழைத்து, கல்வியினால் முன்னேறிய ஏழை மாணவன்
செல்வந்தனமாக மாறுவது போல எந்தப் படத்திலாவது ஒரு காட்சியாவது
பதிவாகியிருக்கிறதா என்றால். . . . சொல்லும்படி இல்லை.
கல்லூரி என்றாலே விதவிதமான ஆடை
அலங்காரங்கள், முடி அலங்காரங்கள், கலாட்டா, கேலி, கிண்டல். . . . . இவை
ஒருபக்கம். கல்லூரி ஆசிரியர்களை நையாண்டியாக்கி சித்தரிக்கும் காட்சிகள்
மறுபக்கம். இந்த நினைவோடு கல்லூரிக்கு வரும் மாணவர்கள் முறையாக பாடம்
நடத்தும் ஆசிரியர்களையும், முறையாக நடக்கும் வகுப்புகளையும்
விரும்புவதில்லை. இயல்பிற்கு மாறாக, அவனுடைய சுதந்திரத்தைப் பறிப்பது போல
கருதி அதற்கு எதிர்வினையாற்ற முயல்கிறான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment