புலித்தேவர்
திருவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றிட படையுடன் சென்று போரிட்டார்.
இவரின் படையின் பாய்ச்சலுக்கு முன்பு, ஆற்காடு நவாப்பின் படைகளும்,
வெள்ளையனின் இராணுவத்தினர்களின் போய்வாய் பீரங்கி குண்டுகள்,
கூலிப்படையினர் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோட்டையை விட்டு
தலைத்தெறிக்க ஓடினர், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு. புலித்தேவரின் இந்த
வெற்றி மதுரை நகர் முழுவதும் பரவியது. மதுரை பாளையக்காரர்கள் அனைவரும்
புலித்தேவருக்கு ஆதரவு தர முன்வந்தனர். திருவில்லிபுத்தூர் கோட்டை இருந்த
இடம் தற்பொழுது கோட்டைத் தலைவாசல் என்று அழைக்கப்படுகிறது.
திருவில்லிபுத்தூர் கோட்டையை புலித்தேவர் 1755ல் கைப்பற்றினார்.
பின் திருநெல்வேலியில் இருந்த ஆற்காட்டு
நவாப்பின் படையையும், வெள்ளையர்களையும் விரட்டியடிக்க திட்டமிட்டார்
புலித்தேவர். திருநெல்வேலியில் இருந்த மாபூசுக்கான் புலித்தேவரின் படை
வருவதை அறிந்த உடனே, கிழக்கு பாளையக்காரர்களையும் வெள்ளையர்களையும் அழைத்து
ஒரு கூட்டம் கூட்டி, அதில் புலித்தேவருக்கு எதிராக போரில் எங்களுக்கு
நீங்கள் உதவ வேண்டும், உதவினால் உங்களுக்கு பதவி பணம், பொன்,
துரைமார்களிடம் நன்மதிப்பு ஆகியவைகள் கிடைக்கும் என்று நயவஞ்சகமான
வார்த்தைகளைக் கூறி, புலித்தேவருக்கு எதிராக திரும்பினான். போரில் கிழக்கு
பாளையக்காரர்கள் அனைவரையும் வெள்ளையன் அணியில் சேர்ந்து நின்றனர். இந்தப்
போர் 1756ல் நடந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment