தமிழில்
‘இரத்தம்’ என்ற வார்த்தை ‘இருத்தம்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாகவும்,
‘அயம்’ என்ற சொல்லுக்கு ‘கருவி’ என்ற பொருள் உள்ளதாகவும், இருத்தத்தை
இயக்குகின்ற கருவி என்பதால் ‘இருத்தயம்’ → இருதயம் என அழைக்கப்படுவதாகவும்
ஒரு விளக்கம் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இது சரி என எனக்குத் தெரியாது.
தமிழில் மீது உள்ள ஆர்வத்தால் இதை பதிவு செய்தேன்.
சரி, இனி விசயத்திற்கு வருவோம். சித்த மருத்துவத்தில் இருதய பாதுகாப்பு என்பதை பற்றிய கட்டுரை இது.
முதலில் இதயத்தைப் பற்றி மிகவும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.
ஒவ்வொருவரும் உங்கள் கை விரல்களை
மூடிக்கொள்ளுங்கள், இப்போது உங்கள் கை என்ன அளவில் இருக்கிறதோ, அந்த அளவு
உடையதே உங்கள் இருதயம். இதில் நான்கு அறைகள் உள்ளன. வலது மேல் அறை உடல்
முழுவதும் இருந்து வரும் பிராண வாயு இல்லாத இரத்தத்தை உறிஞ்சி, வலது கீழ்
அறைக்கு தள்ளிவிடுகிறது. வலது கீழ் அறை அந்த இரத்தத்தை நுரையீரலுக்குள்
தள்ளி விடுகிறது. நுரையீரலில் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு
அந்த இரத்தத்துடன் கலந்து, நல்ல இரத்தமாக மீண்டும் இதயத்தின் இடது மேல்
அறைக்கு உறிஞ்சப்படுகிறது. பின் அங்கிருந்து இடது கீழ் அறைக்குத்
தள்ளப்படுகிறது. பின் இங்கிருந்து இரத்தக்குழாய்கள் மூலமாக உடல்
முழுவதற்கும் செலுத்தப்படுகிறது. ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு
செல்லும் வழியில் கதவுகள் போல செயல்படுவையே இதய வால்வுகள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment