Monday, 11 January 2016

வாருங்கள், உங்கள் உடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்


2011-09-07-1417-46(52).jpg
உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயல் அடிப்படையில் மூன்று விதமான உடல் வாகு உள்ளது.
  1. வாத உடல்
  2. பித்த உடல்
  3. கப உடல்
இதில் உங்கள் உடல் எந்த வகையானது என உங்களுக்குத் தெரியுமா?
எவ்வாறு மூன்று விதமான உடல் உருவாகிறது?
moondru vidha udal3
ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே கரு உருவாகிறது. அவ்வாறு உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக உருவாகிறது.

வாதம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் வாத உடலாகவும்,பித்தம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வளரும் உடல் பித்த உடலாகவும்,கபம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் கப உடலாகவும் அமைகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 10 January 2016

யாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளீர் ; ஜார்ஜ் ஷாலர்


yaadhum oore6
அப்பொழுது அவருக்கு 26 வயதுதான் ஆகி இருந்தது. தனது முனைவர் பட்டப்படிப்பை விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் முடித்த கையோடு முதுகுப்பையை மாட்டிக்கொண்டு தெளிவான சிந்தனையுடன் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கால்பதித்தார். கொரில்லா எனும் மனிதக் குரங்கை அதன் வாழிடத்திலேயே தங்கிப் படிப்பது தான் அவர் நோக்கம். 1960கள் வரை பெரிதாக எந்தவொரு ஆய்வும் கொரில்லா குறித்து மேற்கொள்ளப்படவில்லை.. ஏற்கனவே கொரில்லாக்கள் பற்றி வந்த செய்திகள் பலவும் வேட்டை இலக்கியமாகவே இருந்தன. வேட்டைக்காரர்கள் தாய் கொரில்லாவைக் கொன்று குட்டி கொரில்லாவை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். குட்டியிலிருந்து பழக்கினால் தான் பழக்குவதற்கு எளிதாய் இருக்குமாம். இதனால் அந்த விலங்கினமே அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
வேட்டைக்காரர்கள் இப்படி இருந்தால் காட்டு விலங்குகளைப்பற்றி படிப்பவர்களோ ஆய்வுக் கூடத்திலும் வகுப்பறையிலும் விலங்குக் காட்சி சாலையிலும் மட்டுமே விலங்குகளைப் பற்றி படித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை அறுத்து படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் கொண்டிருந்தனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 6 January 2016

உடன்பிறப்பு(சிறுகதை)


udanpirappu1
டிசம்பர் மாதக் கடுங்குளிர் -7 டிகிரியைத் தொட்டிருந்தது. காலை 9 மணியான போதும் போர்வைக்குள் இருந்து வெளிவர மனமில்லை. நண்பன் யோஹான் வீட்டில் மதிய உணவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தது ஞாபகத்துக்கு வர, வேறு வழியில்லாமல் எழுந்து கிளம்பினேன்.
வீட்டை விட்டு வெளியில் வந்து பார்த்தால் லூவன் நகரமும் வெள்ளைப் போர்வையைப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் பனி படர்ந்து வெள்ளை வெளேரெனக் காட்சியளித்தது. ஆள் அரவமற்ற தெருக்களின் வழியே, எதிரே தென்பட்ட இந்தியரைப் பார்த்து “நமஸ்தே ஜி” சொல்லிவிட்டு, குளிரில் நடுங்கியவாறு லூவன் ரயில் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன். சனிக்கிழமை என்பதால் பெரும்பாலான கடைகள் பூட்டி இருந்தன.

ஹசல்ட். நான் வசிக்கும் லூவன் நகரிலிருந்து ஒரு மணி நேர ரயில் பயணம். சரியாக 11.12 க்கு ஹசல்ட் செல்லும் ரயில் வந்து நின்றது. அதனுள் ஏறி அமர்ந்தபின்தான் சற்று இதமாக உணர்ந்தேன். படத்தில் மட்டுமே பார்த்திருந்த பனி சூழ்ந்த இடங்களை நேரில் பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது. பனி சூழ்ந்த மலைகளுக்கு நடுவில் ரயிலில் செல்வது வியப்பாகவும், ஆனந்தமாகவும் இருந்தது. மதியம் 12.15 க்கு ஹசல்ட் ரயில் நிலையத்தை வந்தடைந்தேன்.
என்னை வரவேற்க நண்பன் யோஹான் காத்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் அவனுடைய காரில் ஏறி, அவன் வீட்டை நோக்கிச் சென்றோம். வீடு வரவும், அவன் மனைவி ஷானா வாசலில் வந்து என்னை வரவேற்கும் விதமாக கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுத்தாள். பெல்ஜியம் நாட்டில் விருந்தினரை வரவேற்க கன்னத்தில் மூன்று முத்தங்கள் கொடுப்பது வழக்கம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 5 January 2016

சங்க பெண்பாற் புலவர்கள் சித்தரிக்கும் பெண்ணின் இருப்பு


sanga penpaar pulavargal5
ஒரு நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம். அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, மக்கள் பாகுபாடு, உணவு, உடை, தெய்வ நம்பிக்கை, நிமித்தங்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள், போர்க்கருவிகள், அறநிலை, வீரர் மரபு, அரசர்கள், புலவர்கள், மரம் செடி கொடிகள், பூக்கள், விலங்கினங்கள், பறவைகள், பழமொழிகள், உவமைகள் போன்ற இன்ன பிற செய்திகளை இவ்வியல் ஆராய்கிறது. சங்க இலக்கியம் அகம், புறம் என்னும் நெறியில் அமைந்து மக்கள் வாழ்வினைப் பதிவு செய்துள்ளது. “புலமை வல்ல மகளிராக நாம் தெளிந்தோரின் பாடல்கள் சங்கத்து நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுள் மட்டுமே காணப்படுகின்றன. சங்க வரலாறும், போர் வரலாறும், சமுதாய மரபும், கலையியலும், உறிவியலும் பின்னிப் பொலியும் பதிவிலக்கியமாகவே சங்கப்பாடல்கள் திகழ்கின்றன” என்று டாக்டர் வ.சுப. மாணிக்கம் விளக்குகிறார். வாழ்க்கை நெறி வாழ்வில் ஆர்வத்தையும் ஆற்றலையும் மக்களுக்குப் புலவர்களே வளர்த்தனர், “தனிமரம் தோப்பாகாது” என்பது போல தனிமை வாழ்வு சிறந்த வாழ்வாகாது. சேர்ந்து வாழும் வாழ்வே சிறந்தது என்பதை,
“வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்”
எனப் புறநானூறு பறைசாற்றுகிறது.
திருமணம்:

sanga penpaar pulavargal1
இல்லறத்தின் நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத இடத்தைப்பெறுகின்றது. ‘திருமணம்’ என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. ‘திருமணம்’ என்ற சொல் ‘திரு’ மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு “ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம், திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன” என்கிறார் சசிவில்லி.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 4 January 2016

பயணமும் படங்களுமே என் வாழ்க்கை: சாதிக்கும் சாய்பிரியா


Saipriya (7)
ஆடை வடிவமைப்புத் துறையில் நல்ல வேலை, கை நிறைய ஊதியம் என்று போன தன் வாழ்க்கையில், கேமரா மீது கொண்டுள்ள காதலால் தனக்குப் பிடித்தமான புகைப்படத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த சாய்பிரியா. இந்தியாவின் பிரபலமான திருவிழாக்களை உயிரோட்டமான புகைப்படங்களாக கேமராவுக்குள் சிறைபிடித்து வருகிறார். மேலும் இந்திய கலாச்சாரத்தை வண்ணங்கள் சிந்தும் புகைப்படமாக்கி ரசிக்க வைக்கிறார். இவரது கலைப்பார்வையும் ஒளிநுட்ப நேர்த்தியும் பல புகைப்பட விருதுகளை வென்று தந்துள்ளது. கேமராவும் கையுமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து படங்கள் எடுத்துள்ளார். புகைப்படத்தின் எல்லா களங்கள் மீதும் இவர் கண் சென்றாலும் “டிராவல் போட்டோகிராபி’ எனப்படும் பயணப் புகைப்படங்கள் எடுப்பதில் அதீத ஆர்வம் இவருக்கு. சாய்பிரியாவின் ‘Castle Mountains’ என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் அறியப்படுகிறது. சாய்பிரியாவுடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
சாய்பிரியா: பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். அப்பா சஞ்சீவி பிரபல ‘ரேமண்ட்ஸ்’ ஆடை நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார். அம்மா இப்போது இல்லை. கோவையில் ஆடை வடிவமைப்பு படிப்பை படித்து முடித்து அது தொடர்பான பணியில் சேர்ந்தேன். சிறிது காலத்திலேயே புகைப்படத் துறைக்கு தாவிவிட்டேன்.
ஆடை வடிவமைப்பு பணியிலிருந்த உங்களுக்கு புகைப்பட ஆசை எப்படி வந்தது?

Saipriya (9)
சாய்பிரியா: சுற்றுலாப் பயணங்களில் தோழியின் கேமராவில் விளையாட்டாக புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். நான் எடுத்த படங்களை முகநூலில் வெளியிட்டேன். அவற்றைப் பார்த்து நிறைய பாராட்டுக்கள். ஒளி நுட்பம், கேமரா கோணம் எல்லாம் சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். இத்தகைய வரவேற்பும் பாராட்டுக்களும் புகைப்பட கலைத்துறையில் சாதிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. அமெரிக்காவில் இருக்கும் அக்காவின் உதவியுடன் Digital SLR கேமரா வாங்கி புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல்- இறுதிப் பகுதி


kasi aananthan nerkaanal fi
கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழின் நிலை என்ன? இதை மேலும் செம்மைப்படுத்த தாங்கள் கூறும் வழிமுறை என்ன?
பதில்: இதை நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக ஜெர்மனி, பிரான்சு, லண்டன் போன்ற இடங்களிலெல்லாம் தமிழ்ப்பள்ளிகளை, அங்கு வாழுகிற தமிழீழ மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்தவரை தமிழீழ மண்ணில் இருக்கிற அந்த தமிழ் தேசிய இனத்தன்மை அழியாத குழந்தைகளாக அவர்களை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். நான் நினைக்கிறேன், தமிழீழ விடுதலை கிடைக்கின்ற வரை உலகெங்கும் பரவி வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்களால், அந்தத் தமிழர்களை தமிழ் மக்களாக காப்பாற்றி வைத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்த மண் மீதான பற்றும், அந்த மொழியின் மீதான பற்றும் அந்த மக்களுக்கு இருக்கும்வரை, அவர்கள் அந்த மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன். காரணம் அந்த உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது.

kaasi ananthan nerkaanal2
திரும்பவும் போர்ச்சுகல் நாட்டுக்கு போகவே முடியாது என்ற நிலையில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் மட்டக்களப்பில் வந்து குடியமர்ந்த போர்ச்சுக்கீசியர்களின் சில குடும்பங்கள் இன்றும் மட்டக்களப்பில் வாழ்கின்றனர். இன்றைக்கும் அவர்களுடைய வீட்டில் போர்ச்சுக்கீசிய மொழிதான் பேசுகிறார்கள். வெளியில் தமிழ் பேசுகிறார்கள், ஐநூறு ஆண்டுகள். ஆனால் இந்தத் தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உண்டு, எங்கு போனாலும் அடுத்தவர்களாய் மாறிப்போகிற குணம். மொரிசியசு, பிஜி போன்ற நாடுகளிலெல்லாம் கூலிகளாகப் போன தமிழர்கள், இன்று அவர்களுக்குத் தமிழ் தெரியாது, பேச தமிழ் வராது. தென்னாப்பிரிக்காவிலும் தான். அந்தநிலை இன்று உலகில் சிதறி வாழுகிற, ஈழத்தில் சிங்கள இனவெறியர் கொடுமையால் சிதறிப்போன தமிழர்களுக்கு வரக்கூடாது, வராது என்று நான் நம்புகிறேன். அந்த மக்களைக் காப்பாற்றி விடுதலை பெற்ற தமிழீழத்திற்கு நாங்கள் என்றோ ஒரு நாள் அழைத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

இது முன்பனிக்காலம்


2011-09-07-1417-46(52).jpg
நோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், பித்தம், கபம் எனும் இயக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
அவைகளுக்கு தக்கபடி உணவு முறைகளையும் மாற்றுவதே ஆரோக்கியமான வாழ்க்கை முறை. ஆண்டு முழுவதும் ஒரே விதமான உணவை உண்ணும் பழக்கம் உடலுக்கு நல்லதல்ல.
சரி, முதலில் ஒரு ஆண்டில் என்னென்ன பருவ மாற்றங்கள் வருகின்றன என பார்ப்போம்.
munpanikaalam2
ஒரு ஆண்டை ஆறு பருவங்களாக பிரித்துள்ளோம்.
கார்காலம் – ஆகத்து – செப்டம்பர்
கூதிர் காலம் – அக்டோபர் – நவம்பர்
முன்பனிக்காலம் – திசம்பர் – சனவரி
பின்பனிக்காலம். – பிப்ரவரி – மார்ச்சு
இளவேனில் காலம் – ஏப்ரல் – மே
முதுவேனில் காலம் – சூன் – சூலை
இனி எந்தெந்த காலங்களில் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும், அதற்கேற்ப உணவில் என்னென்ன மாற்றங்கள் செய்துகொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் இப்போது நடந்து கொண்டிருக்கும் பனிக்காலத்தை பார்ப்போம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.