Monday, 4 January 2016

பயணமும் படங்களுமே என் வாழ்க்கை: சாதிக்கும் சாய்பிரியா


Saipriya (7)
ஆடை வடிவமைப்புத் துறையில் நல்ல வேலை, கை நிறைய ஊதியம் என்று போன தன் வாழ்க்கையில், கேமரா மீது கொண்டுள்ள காதலால் தனக்குப் பிடித்தமான புகைப்படத் துறையை தேர்ந்தெடுத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த சாய்பிரியா. இந்தியாவின் பிரபலமான திருவிழாக்களை உயிரோட்டமான புகைப்படங்களாக கேமராவுக்குள் சிறைபிடித்து வருகிறார். மேலும் இந்திய கலாச்சாரத்தை வண்ணங்கள் சிந்தும் புகைப்படமாக்கி ரசிக்க வைக்கிறார். இவரது கலைப்பார்வையும் ஒளிநுட்ப நேர்த்தியும் பல புகைப்பட விருதுகளை வென்று தந்துள்ளது. கேமராவும் கையுமாக இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து படங்கள் எடுத்துள்ளார். புகைப்படத்தின் எல்லா களங்கள் மீதும் இவர் கண் சென்றாலும் “டிராவல் போட்டோகிராபி’ எனப்படும் பயணப் புகைப்படங்கள் எடுப்பதில் அதீத ஆர்வம் இவருக்கு. சாய்பிரியாவின் ‘Castle Mountains’ என்ற முகநூல் பக்கம் சமூக வலைத்தளங்களில் அறியப்படுகிறது. சாய்பிரியாவுடன் ஒரு நேர்க்காணல்:
உங்களைப்பற்றி?
சாய்பிரியா: பிறந்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். அப்பா சஞ்சீவி பிரபல ‘ரேமண்ட்ஸ்’ ஆடை நிறுவனத்தில் ஆலோசகராக உள்ளார். அம்மா இப்போது இல்லை. கோவையில் ஆடை வடிவமைப்பு படிப்பை படித்து முடித்து அது தொடர்பான பணியில் சேர்ந்தேன். சிறிது காலத்திலேயே புகைப்படத் துறைக்கு தாவிவிட்டேன்.
ஆடை வடிவமைப்பு பணியிலிருந்த உங்களுக்கு புகைப்பட ஆசை எப்படி வந்தது?

Saipriya (9)
சாய்பிரியா: சுற்றுலாப் பயணங்களில் தோழியின் கேமராவில் விளையாட்டாக புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். நான் எடுத்த படங்களை முகநூலில் வெளியிட்டேன். அவற்றைப் பார்த்து நிறைய பாராட்டுக்கள். ஒளி நுட்பம், கேமரா கோணம் எல்லாம் சிறப்பாக இருப்பதாக கூறினார்கள். இத்தகைய வரவேற்பும் பாராட்டுக்களும் புகைப்பட கலைத்துறையில் சாதிக்கும் ஆர்வத்தை உண்டாக்கியது. அமெரிக்காவில் இருக்கும் அக்காவின் உதவியுடன் Digital SLR கேமரா வாங்கி புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment