உடலில்
உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான்.
ஆனால் செயல் அடிப்படையில் மூன்று விதமான உடல் வாகு உள்ளது.
- வாத உடல்
- பித்த உடல்
- கப உடல்
இதில் உங்கள் உடல் எந்த வகையானது என உங்களுக்குத் தெரியுமா?
எவ்வாறு மூன்று விதமான உடல் உருவாகிறது?
ஆணின்
விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே கரு உருவாகிறது. அவ்வாறு
உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த
இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக
உருவாகிறது.
வாதம் மிகுந்த நிலையில் உருவாகும்
கருவிலிருந்து வரும் உடல் வாத உடலாகவும்,பித்தம் மிகுந்த நிலையில்
உருவாகும் கருவிலிருந்து வளரும் உடல் பித்த உடலாகவும்,கபம் மிகுந்த
நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் கப உடலாகவும் அமைகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment