அப்பொழுது
அவருக்கு 26 வயதுதான் ஆகி இருந்தது. தனது முனைவர் பட்டப்படிப்பை
விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் முடித்த கையோடு முதுகுப்பையை
மாட்டிக்கொண்டு தெளிவான சிந்தனையுடன் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில்
கால்பதித்தார். கொரில்லா எனும் மனிதக் குரங்கை அதன் வாழிடத்திலேயே தங்கிப்
படிப்பது தான் அவர் நோக்கம். 1960கள் வரை பெரிதாக எந்தவொரு ஆய்வும்
கொரில்லா குறித்து மேற்கொள்ளப்படவில்லை.. ஏற்கனவே கொரில்லாக்கள் பற்றி வந்த
செய்திகள் பலவும் வேட்டை இலக்கியமாகவே இருந்தன. வேட்டைக்காரர்கள் தாய்
கொரில்லாவைக் கொன்று குட்டி கொரில்லாவை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர்.
குட்டியிலிருந்து பழக்கினால் தான் பழக்குவதற்கு எளிதாய் இருக்குமாம்.
இதனால் அந்த விலங்கினமே அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.
வேட்டைக்காரர்கள் இப்படி இருந்தால் காட்டு
விலங்குகளைப்பற்றி படிப்பவர்களோ ஆய்வுக் கூடத்திலும் வகுப்பறையிலும்
விலங்குக் காட்சி சாலையிலும் மட்டுமே விலங்குகளைப் பற்றி படித்துக்
கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை அறுத்து படம்
வரைந்து பாகங்களைக் குறித்துக் கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment