ஒரு
நாட்டின் மாண்பையும், பண்பாட்டு வாழ்வையும் மகளிரின் திறத்தாலே அறியலாம்.
அவ்வடிப்படையில் வாழ்க்கை நெறி, மக்கள் பாகுபாடு, உணவு, உடை, தெய்வ
நம்பிக்கை, நிமித்தங்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள், போர்க்கருவிகள்,
அறநிலை, வீரர் மரபு, அரசர்கள், புலவர்கள், மரம் செடி கொடிகள், பூக்கள்,
விலங்கினங்கள், பறவைகள், பழமொழிகள், உவமைகள் போன்ற இன்ன பிற செய்திகளை
இவ்வியல் ஆராய்கிறது. சங்க இலக்கியம் அகம், புறம் என்னும் நெறியில் அமைந்து
மக்கள் வாழ்வினைப் பதிவு செய்துள்ளது. “புலமை வல்ல மகளிராக நாம்
தெளிந்தோரின் பாடல்கள் சங்கத்து நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு,
புறநானூறு, பதிற்றுப்பத்து ஆகிய நூல்களுள் மட்டுமே காணப்படுகின்றன. சங்க
வரலாறும், போர் வரலாறும், சமுதாய மரபும், கலையியலும், உறிவியலும் பின்னிப்
பொலியும் பதிவிலக்கியமாகவே சங்கப்பாடல்கள் திகழ்கின்றன” என்று டாக்டர்
வ.சுப. மாணிக்கம் விளக்குகிறார். வாழ்க்கை நெறி வாழ்வில் ஆர்வத்தையும்
ஆற்றலையும் மக்களுக்குப் புலவர்களே வளர்த்தனர், “தனிமரம் தோப்பாகாது”
என்பது போல தனிமை வாழ்வு சிறந்த வாழ்வாகாது. சேர்ந்து வாழும் வாழ்வே
சிறந்தது என்பதை,
“வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்”
எனப் புறநானூறு பறைசாற்றுகிறது.
எனப் புறநானூறு பறைசாற்றுகிறது.
திருமணம்:
இல்லறத்தின்
நுழைவாயிலான திருமணம் என்பது சமுதாயத்தில் இன்றியமையாத
இடத்தைப்பெறுகின்றது. ‘திருமணம்’ என்பது தற்போது சமுதாயத்தின் ஒரு
தகுதியாகக் கருதப்படும் தேவை எனப்படுகிறது. ‘திருமணம்’ என்ற சொல் ‘திரு’
மணம் எனப் பிரிக்கப்படுகிறது. மணம் என்பதே தமிழரின் பழைய மரபு “ஒரு கன்னிப்
பெண்ணின் கூந்தலிலே மலர் சூட்டி அவளை ஊரும் உறவும் அறியத் தன் மனத்திற்கு
இனியவளாக வாழ்க்கைத் துணைவியாக ஒருவன் ஏற்றுக்கொள்வதனாலேதான் மணம்,
திருமணம் என்னும் பெயர்கள் அச்சடங்கிற்கு ஏற்பட்டன” என்கிறார் சசிவில்லி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment