Thursday, 11 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 148 ஆவது பாடல்


sangappaadalgal 1
காதலும், பிரிவும், அதைச் சார்ந்த மனித மன உணர்வுகளும் நூற்றாண்டுகள் கடந்தாலும் நூறு கோடி ஆண்டுகளானாலும் தொடர்ந்து கொண்டிருப்பன என்றும், மாறா தன்மையன என்றும் சொல்லாமல் சொல்லி நிற்கின்றன நம் சங்க இலக்கியங்கள்.
கார்காலம் வந்துவிட்டது; ஆனால், கார்காலத்தில் வருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தோழியோ, ‘இது கார்காலம் அன்று’ என்று கூறுகின்றாள். விடுவாளா தலைவி? கொன்றையும் குருந்தும் மலர்ந்திருக்கின்றன; குளிர்க்காற்று வேறு. இந்தப் பருவத்தைப் போய் ‘கார்காலம் அன்று’ என்று நீ சொன்னால் எப்படி? என்னிடமே நீ தவறாகக் கூறலாமோ? என்று அழகாகச் சாடுகின்றாள் தலைவி.

தலைவிக்கும் தோழிக்கும் இடையே நடக்கும் சொல் நாடகத்தைப் பார்ப்போமா?

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 10 February 2016

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் !!


puratchi kavignar1
தனக்குப்பின் ஒரு கவிப் பரம்பரையினரை உருவாக்கியதில் முதன்மையானவர் பாரதிதாசன் அவர்கள். அவரின் கவிதை வரிகளில் அனல் தெறிக்கும். குறிப்பாக பெண்ணியம் குறித்தும், பெண் கல்வி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும்  அவர் எழுதிய கவிதைகள் பழமைவாதிகளின் ஆதிக்கத்திற்கு சவுக்கடியாக இருந்தது எனின் அது மிகையன்று!!
புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
   பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
“உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
   உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!”
   அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
   குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
என்று “பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா” என்ற  கவிதையில், கேள்வி எழுப்புகிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.

puratchi kavignar3
விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது ஒரு பெண் தன் துணை இழந்து தவிக்கும் தவிப்பினை “கைம்மைப் பழி” என்ற கவிதையில்,

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 8 February 2016

வெறுப்பூட்டும் கேள்வி: நீ எங்கிருந்து வருகிறாய்?


veruppoottum1
சில இனவெறிச்செயல்கள் அதிகத் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தாததாகவும், மறைமுகமானதாகவும் இருப்பதுண்டு. அதைச் செய்பவருக்கும் தன்னால் ஒருவர் பாதிக்கப்படுகிறார் என்பது தெரியாது; பாதிக்கப்படுபவருக்கும் தன் மனதை அது வருத்தும் காரணம் தெளிவாகப் புரியாத அளவுக்கு நுட்பமான செயலாக அது அமைந்திருக்கும். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆசிய அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து எதிர்கொண்டு வருவது. அது சீனா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட கிழக்காசிய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி அல்லது இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா போன்ற தெற்காசிய நாடுகளின் வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரி; புலம் பெயர்ந்த தங்களது முன்னோர்கள் எதிர்கொண்ட “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்ற அதே கேள்வியையே அமெரிக்க நாட்டில் பிறந்து அமெரிக்க குடிமக்களாகவே தங்களைக் கருதி வாழ்ந்து வரும் பிற்காலத் தலைமுறையினரும் எதிர்கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் அயல்நாட்டில் இருந்து வந்து குடியேறிய பெற்றோர்களுக்கு அமெரிக்க மண்ணில் பிறந்த “முதல் தலைமுறை அமெரிக்கர்கள்” (The first generation Americans) ஆக இருந்தாலும், முதல் தலைமுறை அமெரிக்கர்களுக்குப் பிறந்த தொடர்ந்து வரும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை அமெரிக்கர்களாக இருந்தாலும் சரி, விதிவிலக்கின்றி அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்’ என்றக் கேள்வியை எதிர் கொள்வார்கள். அதற்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியும் அவர்களது ஆசிய இனத்தைக் குறிக்கும் தோற்றம்.

Business accusations
இதனைப் புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் திரு. வ.ந. கிரிதரன் அவர்கள் ‘நீ எங்கிருந்து வருகிறாய்? என்ற தனது கதையிலும் குறிப்பிட்டுள்ளார். பொதுவாகப் புலம் பெயர்ந்து வருபவர்கள் இக்கேள்வியை முதலில் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஏனெனில் அதுதான் உண்மையும் என்பதால் அவர்களுக்கு அக்கேள்வி முதலில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. காலப்போக்கில் தன்னை அந்நாட்டின் குடியுரிமை பெற்றவராக ஆக்கிக் கொண்டு, அவ்வாறே வாழத் துவங்கியதும், அக்கேள்வியின் அடிப்படை இனபேதம் கொண்டதாக இருக்குமோ என்று சந்தேகிக்கும் நேரங்களும் உண்டு. ‘உன்நாட்டிற்குத் திரும்பிப் போ’ அல்லது ‘நீ எங்களில் ஒருவர் அல்ல’ போன்ற மறைமுகப் பொருள் பொதிந்திருப்பதாகக் கூட கருதும் நிலையும் சில மோசமான சூழ்நிலைகளில் ஏற்படக் கூடும். தனது பணி வாய்ப்பு, அதில் முன்னேற்றம் போன்றவற்றில் தாங்கள் தட்டிக்கழிக்கப்பட நேர்ந்தால் தங்களது புலம் பெயர்ந்த பின்னணி அதற்குக் காரணமாக இருப்பதாகவும் ஐயுறுவதுண்டு.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 7 February 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்: பகுதி 2


devaneyan3
கேள்வி: உரிமை சார்ந்து தமிழகத்தில் குழந்தைகளின் நிலைமை என்ன?, இதற்கு களப்பணி செய்யவேண்டியுள்ளதா?, அரசு இதில் போதிய கவனம் செலுத்துகிறதா?
பதில்: உலகத்தில் முதலில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் குழந்தைகள் என நான் முதலிலேயே சொன்னேன். கண்டிப்பாக அவர்களுக்கு உரிமை சார்ந்த, அவர்களுக்காக உரிமை சார்ந்த களப்பணி ஆற்றுவது என்பது அனைவரின் கடமையாகும். இதில் பல்வேறு கடமையாளர்கள் இருக்கிறார்கள். குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் முதல் கடமையாளர் யார் என்றால் அரசுதான். இரண்டாவது கடமையாளர் சமூகம், மூன்றாவது கடமையாளர் குடும்பம் என்று போய்க்கொண்டிருக்கும். முதல் கடமையாளராக இருக்கிற அரசு தன்னுடைய கடமைகளை முழுமையாக செய்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், மிகப்பெரிய அபத்தமான செய்திதான் இன்றைக்கு. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிற குழந்தை மீதான வன்முறை, குழந்தை மீதான உரிமை மீறல்கள் இரண்டையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. குழந்தை உரிமைகளைப் பற்றி பேசும்பொழுது, இரண்டு செய்தியை நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டும். ஒன்று வன்முறை அதாவது அந்த குழந்தை மீது நடத்தப்படுகிற வன்முறைகள், மற்றொன்று குழந்தை மீதான மறுப்புகள். நாம் வன்முறைகளைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.
devaneyan19
இயல்பாகவே குழந்தைகளை வன்முறையாளராக நம் சமூகம் கொண்டிருக்கிறது. என்னை என்னுடைய அப்பா அடித்தார், அப்பா அடித்தார் என்று. இங்கு அடித்தல் என்பது நியாயமாக்கப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது?, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், முருங்கையை ஒடிச்சு வளர்க்க வேண்டும், குழந்தையை அடிச்சு வளர்க்க வேண்டும் என்கிற பழமொழிகள்கூட வெளிப்படுத்துவது என்னவென்றால், இயல்பாக நாம் குழந்தைகளை நசுக்கலாம், சூறையாடலாம் என்பதுதான். இயல்பாக அடிப்பதற்கும் படிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?. அடிப்பதற்கும் படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது?, அது தவறான கற்பிதம்.
அடிமைகளாக இருக்கும்பொழுது அடித்தார்கள், சுதந்திரம் பெற்ற தேசத்தில் நாம் எப்படி அடிப்பது என்பது அனைவருக்கும் தடை செய்யப்பட்டிருக்கும் பொழுது, குழந்தைகளுக்கு தடை செய்யப்படவேண்டும் என்ற சூழல் இருந்தாலும்கூட, இன்றைக்கு எல்லா நிலைகளிலும் நம் தமிழ்நாட்டில் அதிகபட்சமான குழந்தை உழைப்பாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், சாதி ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள் இருக்கிறார்கள், கடத்தப்படுகிற குழந்தைகள் இருக்கின்றார்கள், இப்படி பல்வேறு வடிவங்களால் குழந்தைகளுக்கான உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

SAM_2957; Gujarat, Rajasthan, India; 05/22/2008, INDIA-11398
இன்றைக்கு எல்லா இடங்களிலும் குழந்தை உழைப்பாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கான முதல் கடமையாளரான அரசு இதை செய்கிறதா என்று பார்த்தால், குழந்தைகளுக்கான அரசு அமைப்புகள், இதற்காக இருக்கிற பாதுகாப்பு அமைப்புகள் அத்தனையும் முழுமையாக இயங்கியிருந்தால், எந்த இடத்திலும் குழந்தை உழைப்பாளர்கள் இல்லாமல் இருக்க முடியும். இன்றைக்கு கட்டாயக்கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்றால், அமல்படுத்தப்பட்டு இருந்தால் எந்த குழந்தையும் சாலையோரத்திலோ அல்லது நிறுவனங்களிலோ அல்லது சிறு, குறு நிறுவனங்களிலோ வேலை செய்ய முடியாது. ஆனால் இன்றைக்கு எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள் என்றால் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். குழந்தை உழைப்பாளர் தடுப்புச் சட்டம் ஒழுங்காக வேலை செய்திருந்தால், எங்கேயும் குழந்தை உழைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். கடத்தப்படுகிற குழந்தைகளுக்கான சட்டம் (ITPA Act) ஒழுங்காக வேலை செய்திருந்தால், இன்று எங்கேயும் கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பாலியலுக்கான பிரச்சனைகள் பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு பாலியல் சுரண்டல் என்பது மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday, 3 February 2016

சங்கப் பாடல்களை அறிவோம்: குறுந்தொகையின் 28 ஆவது பாடல்


sangappaadalgal fi
காதலனைப் பிரிந்திருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே பாடலில் படம்பிடித்துக் காட்டமுடியுமா? என்றால், முடியும் என்கின்றார் நம் ஔவைப் பாட்டி.
தலைவனைப் பிரிந்திருக்கின்றாள் தலைவி. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கும் இங்கும் அலைபாய்கிறது மனம். ஆற்றொணாத் துயரிலிருக்கும் தலைவி, தோழியிடம் சொல்கிறாள் இப்படி!

முட்டுவேன்கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல் எனக் கூவுவென் கொல்?
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் இவ்ஊர்க்கே.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 2 February 2016

கோட்டுத் தத்துவம்: சிறுகதை


kottu thaththuvam1
ஆசிரியர் ஆறுமுகம் தனது கைப்பையை வகுப்பறையில் மறந்து விட்டுவிட்டார். அவர் எட்டாம்வகுப்பு ஆசிரியர்; அதை எடுப்பதற்காக வகுப்பறைக்குப் போனவருக்கு ஒரு அதிர்ச்சி; விளையாட்டு வகுப்பு என்பதால் மாணவர்கள் அனைவரும் விளையாடச் சென்றிருந்தார்கள். திவாகர் மட்டும் இருந்தான்; உடல்நலம் சரியில்லாத மாணவர்கள் விளையாடச் செல்லாமல் வகுப்பறையில் ஓய்வெடுப்பது வழக்கம்; ஆனால் திவாகர் அவ்வாறு இல்லை; அவன் வேறு ஒரு மாணவனின் பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து தனது பையில் அவசர அவசரமாக ஒளித்து வைத்துக்கொண்டிருந்தான். திவாகர் நன்றாகப் படிக்கும் மாணவன்தான்; வகுப்பில் அவன் எப்போதும் இரண்டாவது நிலையில் இருப்பான். அவன் முதலாவது நிலை எடுக்கும் தினேஷ் என்ற மாணவனின் பையிலிருந்துதான் அந்தப் புத்தகத்தை எடுத்தான். வகுப்பறையை விட்டுச்சென்ற ஆசிரியர் மீண்டும் அங்கே வருவார் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வெலவெலத்துப் போய்விட்டான். பயத்தில் அவன் கைகால்கள் நடுங்கின.
“நீ என்ன பண்ணிக்கிட்டுருக்குற? உண்மையச் சொல்லு!”- ஆறுமுகம் அதட்டிக் கேட்டார்

“எவ்வளவு சிரமப்பட்டுப் படிச்சாலும் என்னால தினேஷை முந்த முடியல! அவன் ஒவ்வொரு பாடத்தையும் புக்ல மார்க் பண்ணித்தான் படிப்பான்! அவனோட புத்தகத்த எடுத்து ஒழிச்சு வைச்சுட்டா பரீச்சையில் அவன் படிக்க முடியாம திண்டாடுவான்! நாம அவனை முந்திரலாம்னு நினச்சு இப்படி செஞ்சேன் சார்!”- என்று அழுது அரற்றியபடி உண்மையை ஒத்துக்கொண்டான்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 1 February 2016

கலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்


kalai3
நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, தனது ஓவியங்கள் மூலமாக குரல் கொடுத்து வருபவர் ஓவியர் ஸ்வர்ணலதா. இவரது ஓவியங்கள் உலகெங்கும்  பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓவியர் திருமதி ந.ஸ்வர்ணலதா பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு  அமைச்சகம் முகநூலுடன் சேர்ந்து நடத்திய 100 இந்தியப்  பெண் சாதனையாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பெண் சாதனையாளர்கள் முகநூல்  வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்வர்ணலதாவிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த முயற்சிக்கும் சாதனைக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.
அவரிடம் நடத்திய நேர்காணலின் போது பல விடயங்களை மனம் திறந்தார்.
kalai2

ஓவியத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்போது?

ஓவியர் ஸ்வர்ணலதா: நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர். திருமணம் முடித்து வந்த இடம் தமிழ்நாடு. பள்ளியில் படிக்கும் போதே பலவிதமான ஓவியங்களை வரைவேன். ஆனால் என்னால் தொடர்ச்சியாக அதன் மீது கவனம் செலுத்த முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் வரைய ஆரம்பித்தேன். 1998 ஆம் ஆண்டு முதல் உலகின் பல பகுதிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி வந்தேன்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.