ஆசிரியர்
ஆறுமுகம் தனது கைப்பையை வகுப்பறையில் மறந்து விட்டுவிட்டார். அவர்
எட்டாம்வகுப்பு ஆசிரியர்; அதை எடுப்பதற்காக வகுப்பறைக்குப் போனவருக்கு ஒரு
அதிர்ச்சி; விளையாட்டு வகுப்பு என்பதால் மாணவர்கள் அனைவரும் விளையாடச்
சென்றிருந்தார்கள். திவாகர் மட்டும் இருந்தான்; உடல்நலம் சரியில்லாத
மாணவர்கள் விளையாடச் செல்லாமல் வகுப்பறையில் ஓய்வெடுப்பது வழக்கம்; ஆனால்
திவாகர் அவ்வாறு இல்லை; அவன் வேறு ஒரு மாணவனின் பையில் இருந்து ஒரு
புத்தகத்தை எடுத்து தனது பையில் அவசர அவசரமாக ஒளித்து
வைத்துக்கொண்டிருந்தான். திவாகர் நன்றாகப் படிக்கும் மாணவன்தான்; வகுப்பில்
அவன் எப்போதும் இரண்டாவது நிலையில் இருப்பான். அவன் முதலாவது நிலை
எடுக்கும் தினேஷ் என்ற மாணவனின் பையிலிருந்துதான் அந்தப் புத்தகத்தை
எடுத்தான். வகுப்பறையை விட்டுச்சென்ற ஆசிரியர் மீண்டும் அங்கே வருவார்
என்று அவன் எதிர்பார்க்கவில்லை. வெலவெலத்துப் போய்விட்டான். பயத்தில் அவன்
கைகால்கள் நடுங்கின.
“நீ என்ன பண்ணிக்கிட்டுருக்குற? உண்மையச் சொல்லு!”- ஆறுமுகம் அதட்டிக் கேட்டார்
“எவ்வளவு சிரமப்பட்டுப் படிச்சாலும்
என்னால தினேஷை முந்த முடியல! அவன் ஒவ்வொரு பாடத்தையும் புக்ல மார்க்
பண்ணித்தான் படிப்பான்! அவனோட புத்தகத்த எடுத்து ஒழிச்சு வைச்சுட்டா
பரீச்சையில் அவன் படிக்க முடியாம திண்டாடுவான்! நாம அவனை முந்திரலாம்னு
நினச்சு இப்படி செஞ்சேன் சார்!”- என்று அழுது அரற்றியபடி உண்மையை
ஒத்துக்கொண்டான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment