தனக்குப்பின்
ஒரு கவிப் பரம்பரையினரை உருவாக்கியதில் முதன்மையானவர் பாரதிதாசன் அவர்கள்.
அவரின் கவிதை வரிகளில் அனல் தெறிக்கும். குறிப்பாக பெண்ணியம் குறித்தும்,
பெண் கல்வி குறித்தும், பெண்களின் முன்னேற்றம் குறித்தும் அவர் எழுதிய
கவிதைகள் பழமைவாதிகளின் ஆதிக்கத்திற்கு சவுக்கடியாக இருந்தது எனின் அது
மிகையன்று!!
புவிப்பெரியான் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா உரைத்த
பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில் உள்ளீர்!
“உவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்த
உதவுபவள் பெரும்பாலும் மனைவி ஆவாள்!
அவளாலே மணவாளன் ஒழுங்கு பெற்றான்!”
அவளாலே மணவாளன் சுத்தி பெற்றான்!
குவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்
குள்ளர்களே, கேட்டீரோ ஷாவின் பேச்சை!
என்று “பெண்களைப் பற்றிப் பெர்னாட்ஷா” என்ற கவிதையில், கேள்வி எழுப்புகிறார் புரட்சிக் கவிஞர் அவர்கள்.
விதவைகள் மறுமணம் குறித்து எழுதும் போது ஒரு பெண் தன் துணை இழந்து தவிக்கும் தவிப்பினை “கைம்மைப் பழி” என்ற கவிதையில்,
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment