Sunday, 7 February 2016

தோழமை தொண்டு நிறுவன இயக்குனர் தேவநேயன் அவர்களின் நேர்காணல்: பகுதி 2


devaneyan3
கேள்வி: உரிமை சார்ந்து தமிழகத்தில் குழந்தைகளின் நிலைமை என்ன?, இதற்கு களப்பணி செய்யவேண்டியுள்ளதா?, அரசு இதில் போதிய கவனம் செலுத்துகிறதா?
பதில்: உலகத்தில் முதலில் எளிதில் நாசமாக்கப்படும், சூறையாடப்படும் பட்டியலில் முதலிடத்தில் இருப்போர் குழந்தைகள் என நான் முதலிலேயே சொன்னேன். கண்டிப்பாக அவர்களுக்கு உரிமை சார்ந்த, அவர்களுக்காக உரிமை சார்ந்த களப்பணி ஆற்றுவது என்பது அனைவரின் கடமையாகும். இதில் பல்வேறு கடமையாளர்கள் இருக்கிறார்கள். குழந்தை உரிமைகளை பாதுகாப்பதில் முதல் கடமையாளர் யார் என்றால் அரசுதான். இரண்டாவது கடமையாளர் சமூகம், மூன்றாவது கடமையாளர் குடும்பம் என்று போய்க்கொண்டிருக்கும். முதல் கடமையாளராக இருக்கிற அரசு தன்னுடைய கடமைகளை முழுமையாக செய்கிறார்களா? என்று கேள்வி கேட்டால், மிகப்பெரிய அபத்தமான செய்திதான் இன்றைக்கு. எல்லா இடங்களிலும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிற குழந்தை மீதான வன்முறை, குழந்தை மீதான உரிமை மீறல்கள் இரண்டையும் நாம் பார்க்க வேண்டியதிருக்கிறது. குழந்தை உரிமைகளைப் பற்றி பேசும்பொழுது, இரண்டு செய்தியை நாம் முக்கியமாகப் பார்க்கவேண்டும். ஒன்று வன்முறை அதாவது அந்த குழந்தை மீது நடத்தப்படுகிற வன்முறைகள், மற்றொன்று குழந்தை மீதான மறுப்புகள். நாம் வன்முறைகளைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருக்கிறோம்.
devaneyan19
இயல்பாகவே குழந்தைகளை வன்முறையாளராக நம் சமூகம் கொண்டிருக்கிறது. என்னை என்னுடைய அப்பா அடித்தார், அப்பா அடித்தார் என்று. இங்கு அடித்தல் என்பது நியாயமாக்கப்பட்டிருக்கிறது. அடியாத மாடு படியாது?, அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், முருங்கையை ஒடிச்சு வளர்க்க வேண்டும், குழந்தையை அடிச்சு வளர்க்க வேண்டும் என்கிற பழமொழிகள்கூட வெளிப்படுத்துவது என்னவென்றால், இயல்பாக நாம் குழந்தைகளை நசுக்கலாம், சூறையாடலாம் என்பதுதான். இயல்பாக அடிப்பதற்கும் படிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?. அடிப்பதற்கும் படிப்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது?, அது தவறான கற்பிதம்.
அடிமைகளாக இருக்கும்பொழுது அடித்தார்கள், சுதந்திரம் பெற்ற தேசத்தில் நாம் எப்படி அடிப்பது என்பது அனைவருக்கும் தடை செய்யப்பட்டிருக்கும் பொழுது, குழந்தைகளுக்கு தடை செய்யப்படவேண்டும் என்ற சூழல் இருந்தாலும்கூட, இன்றைக்கு எல்லா நிலைகளிலும் நம் தமிழ்நாட்டில் அதிகபட்சமான குழந்தை உழைப்பாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள், குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், சாதி ரீதியான வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள், புறக்கணிக்கப்படுகிற குழந்தைகள் இருக்கிறார்கள், கடத்தப்படுகிற குழந்தைகள் இருக்கின்றார்கள், இப்படி பல்வேறு வடிவங்களால் குழந்தைகளுக்கான உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

SAM_2957; Gujarat, Rajasthan, India; 05/22/2008, INDIA-11398
இன்றைக்கு எல்லா இடங்களிலும் குழந்தை உழைப்பாளர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்கான முதல் கடமையாளரான அரசு இதை செய்கிறதா என்று பார்த்தால், குழந்தைகளுக்கான அரசு அமைப்புகள், இதற்காக இருக்கிற பாதுகாப்பு அமைப்புகள் அத்தனையும் முழுமையாக இயங்கியிருந்தால், எந்த இடத்திலும் குழந்தை உழைப்பாளர்கள் இல்லாமல் இருக்க முடியும். இன்றைக்கு கட்டாயக்கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்றால், அமல்படுத்தப்பட்டு இருந்தால் எந்த குழந்தையும் சாலையோரத்திலோ அல்லது நிறுவனங்களிலோ அல்லது சிறு, குறு நிறுவனங்களிலோ வேலை செய்ய முடியாது. ஆனால் இன்றைக்கு எல்லா இடத்திலும் வேலை செய்கிறார்கள் என்றால் கட்டாயக் கல்வி உரிமை சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று அர்த்தம். குழந்தை உழைப்பாளர் தடுப்புச் சட்டம் ஒழுங்காக வேலை செய்திருந்தால், எங்கேயும் குழந்தை உழைப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். கடத்தப்படுகிற குழந்தைகளுக்கான சட்டம் (ITPA Act) ஒழுங்காக வேலை செய்திருந்தால், இன்று எங்கேயும் கடத்தப்பட்டிருக்க மாட்டார்கள். பாலியலுக்கான பிரச்சனைகள் பார்த்தீர்கள் என்றால், இன்றைக்கு பாலியல் சுரண்டல் என்பது மிகவும் மோசமாக நடந்துகொண்டிருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment