Thursday, 9 June 2016

முடிவில்லா முகாரி! (கவிதை)


mugaari1

மலையகம்
குட்டித்தீவிலே
ஒரு எழில் கொஞ்சும் மலைநகரம்
கந்தகப்பூமியிலே
ஒரு அதிசய குளிர்ப்பேழை!
உயரத்தில்-மலை மீது
உயரத்தில் வாழ்வதால்
மலையகத்தார் என்கின்றனர்
எங்கள் வாழ் நிலையோ
பொருளாதார தாழ் நிலத்தில்………….
எங்கு பார்த்தாலும்
பசுமையாய் புன்னகைத்திடும்

தேயிலைத்தோட்டங்கள்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20738

முன்னேறத் தயங்காதே !


work1

“படிச்சு முடிச்சாச்சு வேலை தான் இல்லை“ என்ற இந்த வாசகத்தை இப்பொழுது அடிக்கடி கேட்க நேரிடுகிறது. சரி இதற்கு தரமற்ற கல்லூரிகள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும், மாணவர்களும் மறு காரணமாக இருக்கிறார்கள். சரியான வழிகாட்டுதல்கள் என்பது ஒரு பத்து வருடங்கள் முன்பு மிகக் குறைவு. ஆனால் இக்கால கட்டத்திலோ வழிகாட்டுதல் மிகுந்து காணப்படுகிறது. சமூக வலை தளங்களிலும், சமூக ஆர்வலர்களும் வழிகாட்டும் அமைப்பை உருவாக்கி பல்வேறு சேவைகளையும் வழங்கி வருகின்றனர். அதே போல அயல் நாட்டில் வேலை, படிப்பு என்று நமது மாணவர்களின் பார்வை அமைப்பும் சற்றே விரிந்துள்ளது.

மாணவர்கள் என்பது மண்ணுக்குள் கிடக்கும் வைரம். அவரை யாராவது பட்டை தீட்டினால்தான் ஒளிர்வார்கள். ஆனால் பட்டதாரி என்பவன் ஏற்கனவே  பட்டை தீட்டப்பட்டவன், இருந்த போதிலும் அவன் ஒளிராமல் போவதற்கு யார் காரணம்? அவனே தான் காரணம். சுற்றியிருக்கும் மாசுகளைத் துடைத்து அகற்றினால்தான் ஒளியின் வீரியமும் ஒளிரும் தரமும் மேம்படும்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday, 7 June 2016

அழிந்து வரும் ‘சொந்த ஊர்’


sondha-oor5

சொந்த ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே தன் சொந்தமாக பாவிக்க முடியாது எனினும் சுற்றங்கள் சூழ, நண்பர்கள் துணை நிற்க, எந்நேரமும் எக்காரணத்தாலும் எதுவும் நேராதென்ற பாதுகாப்புணர்வோடு வாழ்வது ஒரு வரம்.

ஓரிடத்தில் பிறந்து, அவ்வூர் கோடியின் தெருக்களையும் அறிந்து, இரவு பகல் பாராது சுற்றித் திரிந்து, அவ்விடத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து தானும் வளர்ந்த விதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.


பணி சார்ந்த இட மாற்றல்களும், தொழில் சார்ந்த இட மாற்றல்களும் பெருகி வருகின்றன. அவற்றுள் சில தவிர்க்க முடியாதவை, சில விரும்பியேற்றவை. அலசி ஆராய்ந்த பின்னர் மனிதன் போடும் சில கணக்குகள் தப்பிப் போவதுண்டு. அந்நியனாய் அசலூரில் ஆதரவின்றி நிற்கும்போது தெரியவரும் சொந்த ஊரின் அருமை.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Monday, 6 June 2016

பழந்தமிழரின் நம்பிக்கைகள்


palanthamilarin-nambikkai-fi
உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானதாகக் காணப்படுகிறது. அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பினுக்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை பற்றிய குறிப்பினை வெளிப்படுத்துவனவாகவோ இருப்பதாக பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். அவைகள் பற்றிய பதிவுகளையும் இட்டுச் சென்றும் உள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மட்டுமல்லாது, பிற காப்பிய நூலான சிலப்பதிகாரம் உட்பட சில நூல்களிலும் இவை காணக்கிடைக்கின்றன. அவை பற்றி இப்பகுதியில் காண்போம்.
நாளும் கோளும்:
palanthamilarin nambikkai2

பழந்தமிழர் தங்களது வாழ்வில் ஏதேனும் ஒரு முக்கிய செயலை தொடங்கும்முன் நல்ல நாள் பார்த்தும், நல்ல வேளை பார்த்தும் தொடங்கினர் என எண்ணுதல் தகும். ஏனெனில் இன்றைக்கும் வீட்டில் ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற, நாள் கிழமை பார்ப்பது, தொடர்ந்து வாழ்வியலோடு தொடர்வது நாம் அனைவரும் அறிந்தது. இவ்வழக்கமானது இடையில் புகுத்தப்பட்டதன்று. பொதுவாய் ஒரு பழக்கம் என்பது உடனடியாகப் புகுத்தக் கூடியதும் அல்ல. அவை பல்வேறு மாறுதல் அடைந்து எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருவதாகும். அவ்வகையில் பழந்தமிழர்கள் நாளும் கிழமையும் பார்த்து தங்களது செயலினை ஆற்றியுள்ளனர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Sunday, 5 June 2016

வாசிப்பு


chennai-book-fair9


இந்த ஆண்டு (2016) சூன் 1 முதல் 13  வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி தீவுத் திடலில் நடைபெறுகின்றது. வாசிப்பு எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்குத் தேவை என்பதை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். வாசிப்பு புதிய கருத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. நம்மை நாமே உணர்ந்து கொள்ள, எண்ணங்களை மெருகேற்றிக்கொள்ள வாசிப்பு உதவுகின்றது. மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் படிக்கும்போது, நமக்கு அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் நம் வாழ்வினை செம்மையாக்க உதவுகின்றது. வாசிப்பு, நமக்கு மற்றவர்களிடம் உரையாடும் பயிற்சியைத் தருகின்றது. நம்முடைய கற்பனையை உயர்த்துகின்றது.

chennai-book-fair5

நல்ல நூல்களைத்  தேடித் தேடி வாசியுங்கள். உடலுக்கு எப்படி நாம் உடற்பயிற்சி செய்கின்றோமோ அதுபோல, மனதிற்கு சிறந்த பயிற்சி நல்ல நூல்களை வாசிப்பது மட்டுமே. நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். வாசிப்பு மட்டுமே மனிதனின் அறிவை விரிவாக்கும், குழம்பிய மனதினை தெளிவாக்கும், ஒருநிலைப்படுத்தும். மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும், அதற்கும் உயிருண்டு, அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல என்றார் புகழ் பெற்ற

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday, 2 June 2016

நீறு பூத்த நெருப்பு ஈழம்(கவிதை)


2nd jan 16 newsletter1

ஈழமெனும்   தலைப்பினிலே   இலங்கை நாட்டில்
இயங்குகின்ற   தடாகமெனும் கலைவட்   டத்தார்
வேழமெனும் சுவைதமிழில்   கவிதைப் போட்டி
வைத்துலகோர் கலந்துகொள்ள   அழைத்தி   ருந்தார்
ஆழமான கருத்துடனே   கவிதை யாத்தே
அனுப்பியதில்   முதல்வதாகத்   தேர்வு   பெற்று
சூழபுகழ்   கவியருவி   விருது   வாங்க
சுடர்மனையாள்   துணையுடனே   இலங்கை   சென்றேன் !

விருதுதனைப் பெறுவதற்கு   முன்பு   ஈழ

விடுதலைக்காய்ப்   போர்புரிந்த   புலிகள்   தம்மின்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=20724

Wednesday, 1 June 2016

ஆரெயில் நெடுங்கொடி அறிவித்த செய்திகள்


aareyil1

அணி என்பது அழகு என்பதைக் குறிக்கிறது. இலக்கியங்களில் அழகுக்காகவும், பாடலின் பொருளைத் தெளிவாக விளக்கும் பொருட்டும், உவமை, உருவகம் போன்றவற்றைப் புலவர்கள் கையாளுவது வழக்கம். அது அழகுக்கு அணி அணிவித்து அழகை மேம்படுத்தும் ஒரு முயற்சி.

இவ்வாறு செய்யுள்களில் அமைந்திருக்கும் சொல்லழகு, பொருளழகு ஆகியவற்றின் இலக்கணத்தை உரைப்பது அணி இலக்கணம் எனப்படும். அணிகள் பலவகைப்படும். தமிழ்ச் செய்யுள்களில் காணப்படும் அணிகளைக் கூறும் தமிழின் தொன்மையான இலக்கண நூல் ‘தண்டியலங்காரம்’ ஆகும். இந்த நூலில் 35 அணிகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்று ‘தற்குறிப்பேற்ற அணி’. இயற்கையில் இயல்பாக நிகழும் நிகழ்வொன்று ஒரு கருத்தைக் குறிப்பதாகக் கூறி இலக்கியங்களில் புலவர்கள் தங்கள் கருத்தை ஏற்றிப் பாடலாகப் பாடுவது தற்குறிப்பேற்ற அணி எனப்படுகிறது.

பெயர்பொருள் அல்பொருள் என இரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றி அயல் ஒன்று
தான் குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்
(தண்டி, நூ. 56)
(பெயர்பொருள் = அசையும் பொருள்; அல்பொருள் = அசையாத பொருள்)

அசையும் பொருட்கள், அசையாப் பொருட்களின் இயல்பான இயற்கை அமைப்பின் மீது புலவர் தனது குறிப்பை ஏற்றுவதைத் தற்குறிப்பேற்ற அணி என்று வரையறுக்கிறது தண்டியலங்காரம் நூல். தற்குறிப்பேற்ற அணி ஒரு குறிப்பிடத்தக்க அணி. இந்த அணி தமிழிலக்கியங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு அணி எனவும்; 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.