சொந்த
ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே தன்
சொந்தமாக பாவிக்க முடியாது எனினும் சுற்றங்கள் சூழ, நண்பர்கள் துணை நிற்க,
எந்நேரமும் எக்காரணத்தாலும் எதுவும் நேராதென்ற பாதுகாப்புணர்வோடு வாழ்வது
ஒரு வரம்.
ஓரிடத்தில் பிறந்து, அவ்வூர் கோடியின்
தெருக்களையும் அறிந்து, இரவு பகல் பாராது சுற்றித் திரிந்து, அவ்விடத்தின்
வளர்ச்சியோடு சேர்ந்து தானும் வளர்ந்த விதம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து
வருகிறது.
பணி சார்ந்த இட மாற்றல்களும், தொழில்
சார்ந்த இட மாற்றல்களும் பெருகி வருகின்றன. அவற்றுள் சில தவிர்க்க
முடியாதவை, சில விரும்பியேற்றவை. அலசி ஆராய்ந்த பின்னர் மனிதன் போடும் சில
கணக்குகள் தப்பிப் போவதுண்டு. அந்நியனாய் அசலூரில் ஆதரவின்றி நிற்கும்போது
தெரியவரும் சொந்த ஊரின் அருமை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment